First
#ஆங்கிலேயர் ஆக்கிரமித்த இந்தியாவில்,
தத்தம் பாளையங்களையும், ஆட்சிக்குட்பட்ட இடங்களையும் பாதுகாக்க ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு வந்த பல மன்னர்களுக்கு மத்தியில்,
இந்தியா எனது நாடு இங்கு ஐரோப்பியர்களுக்கு என்ன வேலை என்று போர் முழக்கமிட்டு ஒட்டுமொத்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பல குறுநில மன்னர்களை நாடு முழுவதும் கொள்கையால் இணைத்து ஐரோப்பியர்களை அச்சம் கொள்ள வைத்த முதல் போர்ப் பிரகடனம் #ஜம்புத்தீவு பிரகடனத்தை வெளியிட்டவர்கள் தான் எம் குலக் கடவுள்கள் மாமன்னர் மருது சகோதரர்கள்!!
அதில் எல்லாவற்றுக்கும் ஆதியாய், தம்பிக்கு அண்ணனாய் எம்பெருமானின் மறு அவதாரமாய் இப்பூமியில் மொக்க.பழனியப்பன் சேர்வைக்கும் ஆனந்தாயி அம்மாளுக்கும் முதலில் பிறந்த தெய்வத்திருமகன் தான் மாமன்னர் பெரிய மருது பாண்டியர்!
ஒரு மன்னன் எப்படி இருக்க வேண்டும் என்று மன்னருக்கே உண்டான நற்பண்புகள் (வீரம்,பொற்கால ஆட்சி,கொடைக்குணம்,ஈகை,தமிழ்ப்பற்று, திருப்பணிகள்,சாதி மத நல்லிணக்கம்) என்று அனைத்திற்கும் மாபெரும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்த எம் முப்பாட்டனாருக்கு வீர வணக்கம்!
#மாமன்னர்_பெரியமருதுபாண்டியர்
#டிசம்பர்_15
🙏🙏🙏
– #போர்க்குடி_அகம்படியர்
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்