First
“டில்லிக்கு பாதுஷா, திருவண்ணாமலைக்கு ப.உ.ச”
தமிழக வரலாற்றில் தொடர்ந்து 25 ஆண்டுகாலம் நகராட்சி மன்ற உறுப்பினராக இருந்த முதல் ஆளுமை, ப.உ.சண்முகம்.
1963 இடைத்தேர்தலில் முதல்வர் காமராசர் உள்ளிட்ட ஏழு அமைச்சர்களின் பிரச்சாரத்தை முறியடித்து வெற்றி பெற்றவர்.
உலகப்புகழ் பெற்ற பாம்பன் பாலம் ப.உ.சண்முகம் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது தான் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் திறக்கப்பட்டது.
கலைஞர்,எம்ஜிஆர், இருவரது அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தவர்.
1957ல் திமுக முதன்முதலாக 15 சட்டமன்ற உறுப்பினர்களை வென்றது.அதில் மிகவும் முக்கியமான நபர் இவர்.மூன்று முறை எம்எல்சி எனப்படும் சட்ட மேலவை உறுப்பினராக இருந்துள்ளார்.
எம்ஜிஆர் 1978ல் அதிமுக துவங்கியபோது பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டவர்.
1993,ஆம் ஆண்டு தமிழக அரசின் உயரிய விருதான அண்ணா விருது ப.உ.சண்முகம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
திமுகவின் முதல் உயர்நிலை செயல்திட்டக்குழுத்தலைவராக நியமனம் செய்யப்பட்டவர் ப.உ.சண்முகம்.
இன்று ப.உ.சண்முகம் என்ற சாதனை மனிதரின் 15ஆம் ஆண்டு நினைவு தினம்.அவரின் புகழை நினைத்து என்றும் நினைவில் கொள்வோம்.
–
போர்க்குடி அகம்படியர்
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்