First
பாண்டிய மன்னர்கள் இன்றைய கோனார் சாதியினர்
———————————-
நேரடியாக விசயத்திற்கு வருகின்றோம்.
இடைக்கால பாண்டியர் (பாண்டிய மன்னர்கள்) ஆயர் ,அண்டர்,இடையர்,பொதுவர் என்று அன்று அழைக்கப்பட்டு இன்று கோனார் என்று அறியப்படும் சாதியினர் ஆவர்.
ஆம் இதை இன்றல்ல ,நேற்றல்ல பல வருடங்கள் முன்பே நமது அகமுடையார் பேஸ்புக் பக்கத்தில் சில ஆதாரங்களுடன் தெளிவாக கூறியிருந்தோம். பாண்டியர்கள் கோனார்கள் என்று பல கோனார் பேஸ்புக் பக்கங்கள் வெளியிட்ட செப்பேட்டு ஆதாரங்கள் நமது அகமுடையார் ஒற்றுமை வெளியிட்ட ஆதாரங்கள் மற்றும் தரவுக்கருத்துக்களே.
இதை நமது அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன என்று நீங்கள் நினைக்கலாம்??? காரணமுண்டு.
சிவகங்கையை ஆண்ட மருதுபாண்டியர்கள் இன்றைய அகமுடையார் சமுதாயத்தினர் என்பது நீங்கள் அறிந்ததே. அத்தகைய மருதுபாண்டியர்களை
சிவகங்கைக்கு மன்னர் இல்லை என்று பல்வேறு வகையில் மறைமுகமாக சொல்லியும் ,எழுதியும் வருவர்கள் தாங்கள் ஏதோ பாண்டியர் வழியினர் என்று பொய்யாக கூறுகிறார்களே அதை உடைக்க வேண்டும் அல்லவா அதற்காக இந்த உண்மையை இங்கு கூறவேண்டியுள்ளது.
மருதுபாண்டியர்கள் சிவகங்கையின் மன்னர் இல்லை என்று சொல்லி வருபவர்கள் ஏதோ வானத்தில் குதித்து வந்தவர்கள் அல்ல.
பழம் காலம் தொட்டு இம்மண்ணை ஆண்டவர்களும் அல்லர்.
பழமை மிக்க பண்டு பாண்டிய மன்னர் வழியினரும் அல்ல.
மருதுபாண்டியர்கள் அவர்களின் சமகால இலக்கியங்கள் ,ஆவணங்களில் மருதுபாண்டியர் என்றே அழைக்கப்பட்டுள்ளனர். அப்படியிருக்க அவர்களை மருதுசகோதர்கள் என்று குறுக்குவதும் இந்த குறுக்கு புத்திக்கார்களே!.
பாண்டியர்கள் தாங்கள் தான் என்பது போல் அறியாமல் சிலரும் ,அரசியலுக்காக பொய்யாக கதை அளந்து கொண்டுஇருக்கும் இருகுலத்தோரின் ஒருவர்
பதிலளிக்கும் முகமாகவே இதை இங்கு சொல்ல விரும்பினோம்.
இதுகுறித்து விரிவான ஆதாரங்கள் அகமுடையார் ஒற்றுமை முகநூல்பக்கத்திடம் திரட்டி வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் போது இவற்றை தனிக்காணொளியாக வெளியிடுவோம் அல்லது சம்பந்தப்பட்டவர்களுக்கு நம்மால் இந்த ஆவணங்கள் வழங்கப்படும்.
குறிப்பு:
மூவேந்தர் என்ன சாதியினர் என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்தபோது பல வருடங்கள் முன்பே கண்டறிந்த உண்மைகள் இவை.
ஏற்கனவே சொன்னது போல் பாண்டிய மன்னர்கள் இன்றைய கோனார் சாதியினர் என்பதை பல வருடம் முன்பே அறிந்துகொண்டு வெளிப்படுத்தினோம் ,தொடர்ந்து ஆராய்கையில் பாண்டியர் வரலாறு குறித்து பல ஆராச்சியாளர்களுக்கூட தெரியாது பல நுட்பமான மற்றும் ஆழமான செய்திகளை கூட இப்போது அறிந்திருக்கிறோம்.
அவ்வாறு ஆராய்கையில்
பாண்டியர்கள்,அகமுடையார்களான சோழ மன்னர் அரசாட்சியை எவ்வாறெல்லாம் சூழ்ச்சி செய்து கைப்பற்றினர் என்பதையும் தெரிந்துகொண்டோம்.
(உதாரணத்திற்கு
அகமுடையார்களுக்கு ,பாண்டிய மன்னர்கள்தங்கள் அரசகுல பெண்களை திருமணம் செய்து கொடுத்தது)
அதன் மூலம் சோழர் படை வலிமையை குறைத்தது.
சோழர்களின் உறவுப்படையான ஏழகத்தார் படையையும் ,ஏழகத்து வணிகரான நகரத்தார்(நகரத்து செட்டியார்களை) தங்கள் நாட்டிற்கு வரச்செய்து சோழர்களின் வணிக வருவாய்களை குறைத்தது
போன்ற ரகசியமான விசயங்களையும்
போர்களத்தில் வெல்ல முடியாத சோழமன்னனான ஆதித்த கரிகாலனை பிராமணர்களை பயன்படுத்தி சூழ்ச்சியாக கொலை செய்ததும் இந்த பாண்டியர்களே!
போன்ற பல விசயங்களை அறிய முடிந்தது.
சோழர்கள் அகமுடையார் இனத்தவர்கள் என்பதற்கான முதல் காணொளியை ஏற்கனவே நமது அகமுடையார் ஒற்றுமை யூடிப் சேனலில் வெளியிட்டுள்ளோம்.
பார்க்காதவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்.
ஏழகத்தாராகிய அகம்படியர்களை பற்றியும் அவர்களை பாண்டியர்கள் சோழர்களுக்கெதிராக பயன்படுத்தியது போன்ற பல விசயங்களை ” சோழர் அகமுடையார் ” என்ற காணொளியில் வரும் பாகங்களில் நீங்கள் விரிவாக காணலாம்.
பின்குறிப்பு:
இப்பதிவை கோனார் சமுதாயத்தை சேர்ந்த நிறைய நண்பர்கள் சேர் செய்திருந்ததால் அதற்காக இப்திவில் ஒரு சில வரிகளை புதிதாக இணைத்துள்ளோம்.
ஆயர் தான் பாண்டியர் என்பதற்கான ஒரு சில சான்றுகளை மட்டும் இப்பதிவின் கமேண்டில் இணைத்துள்ளோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்