First
#திமுக மனசாட்சியும், #அகமுடையார் உடன்பிறப்பு மனசாட்சியும் பரஸ்பரம் பேசிக்கொண்டால் எப்படி இருக்கும் என்ற உரையாடல் தான் இது!! நிதானத்துடன் வாசியுங்கள் 🙏 #மீள்பதிவு
#அகமுடையார்🔰: என்ன தலைவரே! உங்களுக்கே தெரியும் திமுக என்ற கட்சிக்கு அடித்தளமிட்டவர்கள் எந்த சமூகம், ஊர் ஊராக கிளை கிளையாக இந்த அமைப்பை வலுப்படுத்தியது எந்த சமூகம் என்று!
#திமுக தலைமை🖤♥️: ஆமாடா அதுக்கு என்ன இப்ப?
#அகமுடையார்🔰: வேலூர் V.M.தேவராஜ் முதலியார், மா.பா.சாரதி முதலியார் ல இருந்து , ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் ப.சண்முகம் முதலியார், திருவண்ணாமலை ப.உ.சண்முகம் உடையார் ,பெ.சு.திருவேங்கடம் முதலியார், திருப்பத்தூர் ல அண்ணாதுரை முதலியார் சிவாஜி முதலியார் V.R.சபாரத்தினம் முதலியார், சென்னைல பழக்கடை ஜெயராமன் முதலியார் வரைக்கும் தெற்கில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய தா.கிருட்டிணன் சேர்வை உள்ளிட்ட எத்தனையோ பெரிய பெரிய ஜாம்பவான்களை எல்லா மாவட்டங்களிலும் கொண்டிருந்தது திமுக.
#திமுக தலைமை🖤❤️: ஸப்பா.. இப்ப என்னடா சொல்ல வர ?
#அகமுடையார்🔰: இப்படி திமுக வில் மிகப்பெரிய அரசியல் அங்கீகாரம் பெற்றிருந்த சமூகம் கிட்டத்தட்ட மாவட்ட செயலாளர்களில் இருந்து எம்.பி. எம்.எல்.ஏ ஒன்றிய செயலாளர் பதவிகள் வரை பெரும்பான்மையாக அலங்கரித்தது அகமுடையார் சமூகம் ஒருகாலத்தில் திமுகவை முதலியார் கட்சி என்றே அழைத்த வரலாறு உண்டு தானே!
#திமுக தலைமை🖤❤️: டேய் சோதிக்காதீங்கடா இப்ப என்னடா பண்ணனும் ங்குற?
#அகமுடையார்🔰: இப்படி நீண்ட நெடிய பெரும் வரலாற்றிற்கும் ஆளுமைக்கும் சொந்தமான இந்த அகமுடையார் இனத்தில் இருந்து ஒரேயொரு மாவட்ட செயலாளர் கூடவா தகுதி இல்லாமல் இருக்கிறார்கள்?
#திமுக தலைமை🖤❤️: அப்பாடா இப்பதான் சரியான பாயிண்ட் க்கு வந்துருக்கே… நான் சொல்றத கவனமா கேளு!
நீ சொன்னது எல்லாமே உண்மைதான் நீ கேக்குறது எல்லாமே வாஸ்தவம் தான்! எல்லா மாவட்டத்திலும் குறிப்பா ஒருங்கிணைந்த வடாற்காடு மாவட்டத்துல அகமுடைய முதலியார்களுக்கு அடுத்தபடியாகத்தான் வன்னியர், இஸ்லாமியர்,நாயுடு போன்றோரின் பிரதிநிதித்துவம் இருந்தது.
அதற்கு அடுத்த காலகட்டத்தில் அகமுடையார் ஆகிய நீங்கள் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு .1வன்னியர் 2.அகமுடையார் 3.இஸ்லாமியர் 4.நாயுடு என்ற நிலை வந்தது
அதற்கு அடுத்த காலகட்டத்தில் நீங்கள் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு .1வன்னியர் 2.நாயுடு 3.அகமுடையார் 4.இஸ்லாமியர் என்ற நிலை வந்தது
தற்போது நீங்கள் நான்காம் இடத்தில் கூட இல்லாமல் எங்கேயோ தூக்கி வீசப்பட்டு இருக்கிறீர்கள். அதன் வரிசைப்படி 1.வன்னியர்கள் 2.நாயுடு 3.இஸ்லாமியர் 4.பறையர் 5.செங்குந்தர் 6.வெள்ளாளர் என்ற நிலை ஏற்பட்டு விட்டது.
மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் வடக்கே முதல் பிரதிநிதித்துவம் வகிக்கின்ற வன்னியர்கள் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு #நாயுடு பிரதிநிதித்துவம் முதலிடத்திற்கு வந்துவிடும், வரவைப்போம். காரணம் திராவிட முன்னேற்றக் கழகத்தை இந்த 50 ஆண்டுகளில் தெலுங்கர்கள் முன்னேற்ற கழகம் என்ற நிலைக்கு கொண்டு வந்து விட்டோம்.
எனவே எங்களுக்கு பிரதானம் எங்கள் தெலுங்கு இனம் தான் மற்ற தமிழ்க்குடிகள் எல்லாம் பிறகு தான்.
#அகமுடையார்🔰: ஓ அப்படியா சரிங்க தலைவரே! அப்போதுல இருந்து இப்போது வரை எங்களில் ஏற்பட்ட இந்த மிகப்பெரிய பின்னடைவு… ஏன் அதே தமிழ் குடியான வன்னியர்களுக்கு நேரவில்லை?
#திமுக தலைமை🖤❤️: வாஸ்தவமான கேள்விதான்! ஆனா இந்த இடத்தில் தான் நீங்க ஒன்ன புரிஞ்சுக்கணும்.
உங்க பிரதிநிதித்துவம் முதல் இடத்தில் இருந்து இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கு சென்றபோது உங்க சமுதாயத்தில் இருந்து எதிர்ப்பு குரல் ஏதாவது வந்ததா? உங்கள் சமுதாயத்திற்கு என்று தமிழ்நாடு திரும்பி பார்க்கும் அளவிற்கு ஏதாவது போராட்டம் நடத்தினீர்களா? இவ்வளவு ஏன் உங்க சமுதாயத்திற்கு ஒரே தலைமை இருக்கிறதா அதிலும் ஒற்றுமை இருக்கிறதா?
#அகமுடையார்🔰: இல்லைங்க தலைவரே!
#திமுக தலைமை🖤❤️: ஹான் அப்படி வா வழிக்கு. ஆனா இந்தப் பிரதிநிதித்துவத்தை நாங்கள் வன்னியர்களிடமிருந்து பிடுங்கி இருந்தோம் என்றால் அவர்களுக்கு என தமிழ்நாடு அளவில் உரிமைகளைக் கேட்டு பெற மிகப்பெரிய சங்கமும் கட்சியும் ஒற்றை தலைமையும் இருக்கிறது. அவர்களை நாங்கள் பகைத்துக் கொண்டால் சாதி வாக்கு வங்கிகள் மிகப்பெரிய அளவில் சரியும் என்பதற்காகத்தான் அவர்களின் பிரதிநிதித்துவத்தை எங்களால் குறைக்க முடியவில்லை.
ஆனால் நீங்க அப்படி கிடையாது உங்களுக்கு இன்னும் ஆயிரம் சங்கங்கள், தலைவர்கள் ஒரு பொது இடத்தில் கூட ஆயிரம் பேர் சேர்ந்து போராட்டம் பண்ண துணிவு இல்லாத சமுதாயத் தலைவர்கள் வருஷத்துக்கு ஒரு நாள் குருபூஜைக்கு மட்டும் செயல்படக்கூடிய அமைப்புகள் இதெல்லாம் போதாதுன்னு சாதிக்கும் பட்டத்துக்கும், வித்தியாசம் தெரியாம நாங்க வேற நீங்க வேறன்னு சொல்லிட்டு தமிழ்நாடு முழுவதும் சிதறி கிடக்கின்ற ஒரு நாதியற்ற சமூகம் தான் உங்களுடையது!
#அகமுடையார்🔰: என்ன இருந்தாலும் தலைவரே பழைய வரலாற்றெல்லாம் புரட்டி பார்க்கணும் ஆனாலும் இது மிகப்பெரிய துரோகம் தான் தலைவரே!
#திமுக தலைமை🖤❤️: அட போடா பைத்தியக்காரா! அரசியல் என்பது எப்படி இருக்கும் என்று உனக்கே நல்லா தெரியும் தாய்க் கூட அழுகின்ற பிள்ளைக்கு தான் பசி என்று பாலூட்ட வருவாள் அப்படி இருக்கும்போது உங்க பிரதிநிதித்துவத்தை ஒவ்வொரு காலகட்டத்திலும் கொறச்சி கொறச்சி கொறச்சி இப்ப ஒண்ணுமே இல்லாத ஆக்கிட்ட போதும் இன்னைக்கு வரைக்கும் ஒரு போராட்டம் இல்லை, ஒரு தேர்தல் புறக்கணிப்போம் என்ற ஒரு அறிக்கையில்லை, உங்க சங்கங்கள் தலைவர்கள் யாரும் ஒற்றை தலைமைக்கு கீழ வரல இது எல்லாம் தான் எங்க வேலைய எளிமையாக்கிடுச்சு.
இதோ திமுக மட்டும் தான் உங்களை வந்து புறக்கணிச்சிட்டாங்க அப்படின்னு கூப்பாடு போடுவது நிறுத்திட்டு அந்த பக்கம் அதிமுகவையும் கொஞ்சம் கவனமா பாரு
#அகமுடையார்🔰: என்ன தலைவரே சொல்றீங்க?
#திமுக தலைமை🖤❤️: ஆமா டா … இப்ப திமுகவில் அதிகப்படியான மாவட்ட செயலாளர்கள் கொண்ட இரண்டு சமூகம் எது கொங்கு வேளாள கவுண்டரும் வன்னியரும்தான்
அதிமுகவிலும் இதேதான் யோசித்துப் பார்
#அகமுடையார்🔰: அட ஆமா தலைவரே
#திமுக தலைமை🖤❤️: இது மட்டும் இல்ல கண்ணு நீங்க இந்த ரெண்டு கட்சியில தான் நம்ம பிரதிநிதித்துவம் நசுக்கப்பட்டுவிட்டது என்று நீங்கள் பிஜேபி ல போய் சேர்ந்தாலும் உங்க இனத்துக்கு னு ஒருமித்த குரல் வராத வரைக்கும் எந்த கட்சியிலும் உங்களுக்கு பிரதிநிதித்துவம் என்பது சுத்தமா இருக்காது.
#அகமுடையார்🔰: அப்படி என்றால் எதற்கும் கையாலாகாத தமிழகத்தின் தமிழ்குடி சாதிகளில் ஆதி பெருங்குடியான நெடும் வரலாற்றை கொண்டு இருக்கின்ற போர்குடி அகமுடையார்கள் அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்டு விட்டனரா?
#திமுக தலைமை🖤❤️: நீங்கள் அரசியல் அனாதையாகி சுமார் 30 வருடங்களுக்கு மேலாக ஆகிறது. இப்ப வந்து வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம் கடுப்பேத்தாம போங்கடா அங்குட்டு.
#அகமுடையார்🔰: ரொம்ப நன்றிங்க தலைவரே இந்த 50 ஆண்டுகாலம் எங்க தாத்தா, எங்க அப்பன், நானு என் புள்ளைங்க வரைக்கும் பரம்பரை பரம்பரையா திராவிட கட்சிகளுக்கு உழைத்தது எங்க சமுதாயம் முன்னேற்றத்துக்கு இல்லை சமுதாய அழிவிற்கு தான் அதுவும் குறிப்பாக தமிழினத்தின் அழிவுக்குத் தான் நாங்கள் துணை போகி இருக்கிறோம் போல 🤧💔
என்னைப் போன்று திமுகவில் அங்கம் வகிக்கும் எனது அருமை அகமுடையார் கழக உடன்பிறப்புகளே!
இனியும் நீங்கள் விழித்து எழாவிட்டால் தமிழக அரசியல் வரலாற்றில் அகமுடையார்கள் அங்கம் வகித்தார்கள் என்ற ஒரு வரலாறே புதைக்கப்பட்டு விடும்!!
ஒன்று கூடுங்கள்! நாம் யார் என காட்ட வேண்டிய காலம் என்றோ வர வேண்டி இருந்தது பெரிய காலதாமதம் ஆகிவிட்டது ஆனால் இப்போதும் வாய்ப்பு உண்டு. இழந்த அங்கீகாரங்களை மீட்டெடுக்க தமிழ்க்குடி உணர்வு கொண்டு சாதியப்பற்றுகொண்டு வெகுண்டு எழுந்திடுங்கள் 🙏
தமிழ்நாடு தமிழருக்கே!!
சுயசாதிப் பற்று!!
தமிழ்க்குடி ஒற்றுமை!!
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்