துளுவ வேளாளர் என்போர் அகமுடையார் சாதியின் ஒர் பிரிவே ஆகும்.
தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வரலாற்று ஆசிரியர்களான திரு.இல.தியாகராசன் மற்றும் சரித்திர செம்மல் ச.கிருஷ்ணமூர்த்தி போன்றோர் துளுவ வேளாளர் என்போர் அகமுடையாரின் உட்பிரிவு என்பதை தெளிவாக தங்கள் நூல்களில் எடுத்துரைத்துள்ளனர்.

ஆதாரம் 1 : நூல் -தொல்லியல் நோக்கில் காஞ்சிபுரம் மாவட்டம் பக்க எண்கள் 215 ஆசிரியர்: ச.கிருஷ்ணமூர்த்தி

ஆதாரம் 1 : நூல் -தொல்லியல் நோக்கில் காஞ்சிபுரம் மாவட்டம் பக்க எண்கள் 369 ஆசிரியர்: ச.கிருஷ்ணமூர்த்தி

ஆதாரம் 2: நூல் – வேட்டவலம் வரலாறு ,பக்கம் எண் 92,ஆசிரியர் இல.தியாகராசன்
இவர்கள் வெறும் வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமல்ல இந்த இருவருமே வடதமிழகத்தை சேர்ந்த துளுவ வேளாளர் ஆவர் ஆக இவர்கள் கூறிய கருத்துக்கள் வரலாற்று தரவுகளை ஆதாரங்களாக கொண்டது என்பதை தாண்டி இவர்களின் முன்னோர் சொன்ன தகவல் மற்றும் தாங்கள் கண்ட அனுபவத்தில் கண்ட உண்மையாகும்!
அதேநேரம் ஒரு சில வெள்ளாளர்கள் எல்லா வெள்ளாளர் மற்றும் வேளாளரும் ஒன்று தான் என்பார்கள்.
ஆனால் இவர்களுக்குள் வெவ்வேறு பண்பாட்டு கிளை/கூட்டம்/கோத்திர பிரிவுகள் இருக்கும். அவ்வளவு ஏன் இவர்கள் சொல்வது போல் எல்லா வெள்ளாளரும் ஒன்று என்றால் இவர்களுக்குள் ஏன் திருமணங்கள் நடப்பதில்லை???
சரி! ஒரு வாதத்திற்கு எல்லா வேளாளரும் ஒன்னு என்று இவர்கள் சொல்வதை கணக்கில்
செய்வார்களா? செய்யமாட்டார்கள்! ஏனென்றால் அரசியலுக்காக அனைத்து வேளாளரும்/வெள்ளாளரும் ஒன்று என்று பேசுவார்கள் ஆனால் இவர்கள் ஒருவருக்கொருவர் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள்!
சிலர் சொல்வது போல் துளுவ வேளாளருக்கும் அகமுடையாருக்கும் சம்பந்தம் இல்லை துளுவ வேளாருக்கும் மற்ற வேளாளருக்கும் தான் சம்பந்தம் என்றால் துளுவ வேளாள இளைஞர்களுக்கு மற்ற வேளாளர்கள் பெண் கொடுத்து அதை நிரூபிக்கலாமே!
வடதமிழகத்தில் ஆயிரக்கணக்கான துளுவ வேளாள இளைஞர்கள் பெண் கிடைக்காமல் திருமணமாகாமல் உள்ளனர். அவர்களுக்கு இவர்கள் சொல்லும் வெள்ளாளர்கள் பெண் கொடுப்பார்களா? கொடுக்க மாட்டார்கள்! ஏனென்றால் எல்லா வேளாளரும் ஒன்றல்ல என்பது அவர்களுக்கு தெரியும்!
அப்படி இல்லை ! எல்லா வேளாளரும் ஒன்று தான் என்று அவர்கள் சொல்வார்கள் என்றால் நான் ஏற்கனவே சொன்னது போல துளுவ வேளாளரில் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திருமணமாகாமல் உள்ளனர். அவர்களுக்கு இந்த வெள்ளாளர்கள் பெண் கொடுக்கட்டும் அப்போது துளுவ வேளாளருக்கும் மற்ற வேளாளருக்கும் சம்பந்தம் உள்ளது என்று ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் அப்படி செய்ய மாட்டார்கள்.
அதேநேரம் வடதமிழகத்தில் இன்று வரை ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான திருமணங்கள் அகமுடையாருக்கும் துளுவ வேளாளருக்கும் நடக்கிறது. ஏனென்றால் துளுவ வேளாளர் என்போர் அகமுடையாரின் உட்பிரிவு என்பது எல்லோருக்கும் தெரியும். அதுவும் இத்திருமணங்கள் இன்றல்ல நேற்றல்ல பல நூறு ஆண்டுகளாக நடக்கின்றது. துளுவ வேளாளருக்கு சம்பந்தமே இல்லாத சிலர் வந்து இன்று குழப்பம் விளைவிக்க முயற்சி செய்கிறார்கள்.
அடுத்து பிற்படுத்தோர் பட்டியலில் 200 க்கும் மேற்பட்ட சாதிகள் தனித்தனி வரிசை எண் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே பிற்படுத்தோர் பட்டியலில் அகமுடையார் அல்லது துளுவ வேளாளர் ஒரே பட்டியலின் ஒரே எண்ணில் ஒன்றாக கொடுக்கப்பட்டுள்ளது. இது இரண்டும் வெவ்வேறு சாதிகள் என்றால் அரசு ஒரே எண் கொடுத்து இன்று வரை வைத்திருக்குமா?
ஒரு பேச்சுக்கு அரசாங்கம் தான் தவறாக ஒரே எண்ணில் வைத்துள்ளது என்றால் அதை துளுவ வேளாளர் சங்கங்கள் இன்று வரை ஏற்பது ஏன்? இன்று வரை பூர்வீகமாக உள்ள துளுவ வேளாளர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ஏன்? ஏன் என்றால் அகமுடையார் துளுவ வேளாளர் ஒன்று என்று அந்த சங்கங்களுக்கு தெரியும்? பின்னர் யார் தான் குழப்பம் செய்வது?
துளுவ வேளாளருக்கு சம்பந்தமில்லாத சில வெள்ளாடுகள் , அகமுடையார் துளுவ வேளாளர் ஒற்றுமையை சிதைத்து அவர்கள் எண்ணிக்கையை பெரிதாக காண்பித்து அதை தாங்கள் அரசியல் அறுவடை செய்ய நினைக்கிறார்கள்!
ஆனால் என்ன முயற்சி செய்தாலும் அகமுடையார்களையும் துளுவ வேளாளர்களையும் பிரிக்க முடியாது ! ஏனென்றால் துளுவ வேளாளர் என்போர் அகமுடையார் உட்பிரிவினர் என்ற உண்மை உறவு முறைகளாலும் ,திருமண உறவுகளாலும் பண்பாட்டு கலாச்சாரம் ,வரலாறு போன்ற பல்வேறு விடயங்களால் பிணைக்கப்பட்டிருக்கிறது.