First
அதிர்ச்சி செய்தி:
மருதுபாண்டியர்கள் வாரிசுதார் குடும்பத்தை சேர்ந்தவரும் காவல்துறையில் பணிபுரிந்த அன்புத் தம்பி கருப்பசாமி முருகன் அவர்கள் சாலை விபத்தில் இறந்தார் என்ற செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சியுற்றோம்.
அருமையான சமுதாய உணர்வாளர் .அகமுடையார் சமுதாயத்தில்
ஆயிரக்கணக்கானோர் அரசு பணியில் பெரும் பெரும் பதவியில் இருந்தாலும் பணி ஓய்வு பெறும் வரை சமுதாயத்திற்கு எதுவும் செய்யாமல் ஒய்வு பெற்ற பிறகு சமுதாயத்தை பார்த்து கதை அளப்பதையும் முதலை கண்ணீர் வடிப்பதையும் பார்த்துள்ளேன்.
ஆனால் தம்பி கருப்பசாமி எளிமையான அரசு வேலையில் இருந்தபோதும்
அகமுடையார் மாணவ மாணவியர்களுக்கு அரசு போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்தும் மருதிருவர் கல்வி மையம் காரியாபட்டியில் செயல்பட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டவர் .
காரியாபட்டி மருதிருவர் கல்வி மையத்தின் பொறுப்பாளராகவும் இருந்தார்.
காவல்துறை பணிக்கு திருமங்கலம் வரும் போதெல்லாம் என்னை சந்தித்து பேசுவார்.
1 மாதம் முன்பு விருதுநகரில் நடந்து சென்று கொண்டிருந்தபொது எதிரில் பைக்கில் வந்தார் எதையெட்சையாக சந்தித்தோம். பேசினோம்.ஆனால் இப்படி ஒரு பிரிவை கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
இவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்! தம்பிக்கு வீரவணக்கம். நடுகல்லாய் குலதெய்வமாய் அவர் இருந்து சமுதாயத்திற்கு வழிகாட்டுவார் என்று அவர் மறைந்த இந்த மகாசிவராத்திரி நாளில் இறைவனை வேண்டுகிறோம்.
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
ஆழ்ந்த இரங்கல் அன்னாரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭😭
Rip