First
ஜீன் 20 1794 ஆம் ஆண்டு சிவகங்கை சமஸ்தானம் மற்றும் இராமநாதபுரம் சமஸ்தானத்திற்கும் இடையே எல்லை போர் தொடங்கிய நாளாகும். மாமன்னர் பெரிய மருது பாண்டியரின் மகன்களான இளவரசர்கள் #கவண்டன்கோட்டை #துரை மற்றும் #குடைகாதுடையார் இருவரும் இப்போரில் வீரமரணம் அடைந்தனர்…!!!
கவண்டன்கோட்டை துரையும், குடைகாதுடையாரும் தளபதியாக இருந்து இந்த எல்லை போரை நடத்தினார்கள். இந்த போர் 18 நாட்கள் வரை தொடர்ந்து நடந்தது. இப்போரின் வெற்றி சின்னமாக சேதுநாட்டு வெண்கல பீரங்கியை பெரிய மருது பாண்டியரின் மகன்கள் கைப்பற்றி அரண்மனை சிறுவயலுக்கு கொண்டு போய் சேர்த்தனர். போரின் அடுத்த கட்டத்தில் பரமக்குடி வீரர்கள் வெடி குண்டுகளை பயன்படுத்தினார்கள். இதனால் பெரிய மருது பாண்டியரின் மகன்களான கவண்டன்கோட்டை துரை மற்றும் குடைகாதுடையார் இருவரும் குண்டடிபட்டனர்…!!!
அந்த காலகட்டத்தில் பரமக்குடி சேதுபதியின் சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. உயிரே போனாலும் அது நமது மண்ணில் தான் போக வேண்டும் என்று குண்டடிபட்டதுடன் இருவரும் குதிரை மீதேறி குதிரையை விரட்டி தமது சிவகங்கை சீமை நோக்கி வந்து சூடியூரில் இறந்தனர். இந்த செய்தி பெரிய மருது பாண்டியருக்கு தெரியவர சிவகங்கை படைகள் பரமக்குடியை நாசம் செய்தது. சூடியூர் நோக்கி விரைந்து வந்த மருதிருவர், அணைந்து போன தங்கள் குல விளக்குகளை ஆரத்தழுவி கதறி அழுதனர்…!!!
சூடியூரில் இருவருக்கும் மாலையீடு எழுப்பி பள்ளிப்படை கோவில் கட்டுவித்தனர். கவண்டன்கோட்டை துரை மற்றும் குடைகாதுடையார் இருவரின் நினைவுகள் என்றென்றும் நிலைத்திருக்க எளியோறும் ராமேஸ்வரம் செல்லும் பக்தர்கள் பயன்பெறுமாறு இலவச உணவளிக்க அன்னச்சத்திரம் ஒன்றை கட்டினார்கள் அதுவே சூடியூர் சத்திரம் என்று அழைக்கப்படுகிறது…!!!
எல்லை போர் தொடங்கிய நாளான இன்று மண்ணின் மானம் காக்க போர்களம் புகுந்து தன்னுயிர் நீத்த அந்த மாவீரர்களை நினைவு கூறுவதிலும் வீரவணக்கம் செலுத்துவதில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு பெருமிதம் கொள்கிறது…!!!
இவண் : அகமுடையார் வரலாறு மீட்புகுழு
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்