First
சேந்தன்குடி ஜமீன் -ஒர் விளக்கம்
—————————
இரு நாட்கள் முன்பு அகமுடையார் இனத்தவர்களான சேந்தன்குடி ஜமீன் பாழடைந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுருந்தோம்.
அதைப்பார்த்த 3 க்கும் மேற்பட்ட அகமுடையார் உறவுகள் சேந்தன்குடி ஜமீன் உண்மையிலேயே அகமுடையார் ஜமீன் தானா என்ற கேள்வியை கேட்டிருந்தார்கள்?
நம்மிடம் தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்பி கேட்டவர்களே 3 பேருக்கும் மேல் என்றால் இதை நம்மிடம் தனிப்பட்ட முறையில் கேட்காமல் இந்த கேள்வியை மனத்திற்குள்ளேயே வைத்திருக்கும் அகமுடையார் உறவுகள் நிறைய பேர் இருப்பீர்கள் என்பது உறுதி .
ஆகவே இது குறித்த சிறு விளக்கத்தை இப்பதிவில் அளிக்கின்றோம்.
முதலில் அகமுடையார் ஒற்றுமை தளத்தை பொறுத்தவரை மாற்று சமுகங்களில் சிலர் செய்வது போல , வெற்று பெருமைக்காக எந்த விசயத்தையும் நாங்கள் சொல்வதில்லை.
நம் சாதி இல்லாத ஒருவரை நம் சாதி என சொல்வதில் எங்களுக்கு எந்த உடன்பாடும் இல்லை.
அடுத்து வாய் புளித்ததோ ,மாங்காய் புளித்ததோ என்ற ரீதியில் எங்கையோ கேள்விப்ப்பட்டோம் , எதையும் சொல்லிவிட்டு போவோம் என்று நாம் சொல்லி விடுவதில்லை . ஒரு ஆதாரத்திற்கு பல்வேறு ஆதாரங்களை ஆராய்ந்த பின்பு தான் ஒவ்வொரு விசயங்களையும் உங்களுக்கும் பொதுவெளிக்கும் கொண்டு வருகின்றோம்.
எந்த வகையிலே தான் சில ஆண்டுகள் முன்பே சோழர், வாணர்கள், கம்பளை, கண்டி அரசவம்சங்களின் வழியினர் தான் இன்றைய அகமுடையார் என்பதை எடுத்துரைத்தோம்.
அந்த வகையிலே தான் சில நாட்களுக்கு முன்பு சேந்தன்குடி ஜமீன் அகமுடையார் இனத்தை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டோம்.
தானவநாடு ,சேந்தன்குடி ஜமீன்கள் ,வழுவாடி ,வழுவாடி தேவர்கள் என்பவர்கள் அகமுடையார்கள் என்பதை அவர்களின் நில ஆவணங்களில் (அகம்படியர் சாதி) என்பது தெளிவாக பதியப்பட்டிருப்பது கண்டும் அவர்களுடைய இன்றைய வழியினரின் கல்விச்சான்றிதழ்களில் அகம்படியர் என்றும் அகமுடையார் என்பதை பார்த்த பின்பும் உடன் தெரிந்து கொண்டோம்.
அதுமட்டுமல்ல இந்த ஜமீன்களுக்கான பெயர் தோற்றம் , அப்பகுதியில் கிடைத்த கல்வெட்டுக்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது. தானவநாட்டாரின் பெயர் தோற்றம் , அவர்களின் பட்டங்கள் போன்றவையும் ஆங்கிலேயர் கால ஆவணங்களில் அகமுடையாருக்குரியதாக தெளிவாகவே பதியப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்ல குறிப்பிட்ட பகுதிகளில் கிடைக்கும் கரை பெயர்கள் ,உரிமைகள் போன்ற களச்சான்றுகளும் இதற்கு ஆதரவாக உள்ளன.
இப்படி பல்வேறு சான்றுகள் மூலம் உறுதி செய்த பின்னர் தான் சேந்தன் குடி தானவநாட்டு ஜமீன்கள் அகமுடையார் என்பதை வெளிப்படுத்தினோம்.
ஏற்கனவே சொன்னபடி நாம் ஏற்கனவே பார்த்து உறுதி செய்த நிலஆவணங்களை அகமுடையார் அரண் நிறுவனர் திரு.பாலமுருகன் அவர்களும் தம்பி ஒருவரும் நமக்கு அனுப்பி இருந்தார்கள்.
இருந்தாலும் கூட இப்பகுதியில் களப்பணி செய்து மேலும் ஆவணங்களை திரட்ட வேண்டி இருப்பதால் தற்போது இருக்கும் ஆவணங்களை பொதுவெளியில் வெளியிடவில்லை.
அதேநேரம் நம்மிடம் தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்பியவர்களுக்கு இந்த ஆவணங்களை அவர்கள் பார்வைக்கு அனுப்பினோம் மிகவும் மகிழ்ந்தார்கள்.
மேலதிக செய்தி:
நான் ஏற்கனவே சொன்னபடி சேந்தன்குடி ஜமீன் சம்பந்தபட்ட அனைவரின் நில ஆவணங்களும் அவர்கள் சாதி அகம்படியர் என்றே சொல்கிறது. 1995ம் ஆண்டு வரை அகம்படியர்,அகமுடையார் என்றே கல்வி சான்றிதழ்கள் உள்ளன.
ஆனால் சமீப காலமாக மாற்று சமுதாயத்தை சேர்ந்த சிலர் ( 3 வெவ்வேறு சாதிகள்) இந்த பகுதி அகமுடையார்களிடம் குழப்பம் விளைவித்து இந்த சாதி சான்றிதழ் வாங்கினால் எம்பிசி சர்டிபிகேட் கிடைக்கும் என்று 3 வெவ்வேறு வகையான சாதி சான்றிதழ் வாங்க வைப்பதும் , 3 வெவ்வேறு சாதிக்களின் அரசியல் அடையாளத்தில் தங்களை அடையாளப்படுத்தவும் முனைகின்றனர். எல்லாவற்றிற்கும் காரணம்,அகமுடையார்களின் வரலாற்று ஆர்வமின்மையும் , அறியாமையும் தான்.
அதனால் தான் பல்வேறு அரசர்கள் இந்த குடியில் பிறந்திருந்தும் சில ஆண்டுகள் முன்பு வரை அகமுடையார்கள் தங்களில் அரசர் இல்லையே , ஜமீன்கள் இல்லையா ? என்று வருத்தப்பட்டு காலம் கடத்தினர் ,இப்போதும் சிலர் இந்த மனநிலையில் உள்ளனர்.
ஆகவே அகமுடையார்களே உங்கள் மனப்பாங்கு மாற வேண்டும்! வரலாற்றின் மீது ஆர்வம் கொள்ள வேண்டும், வரலாற்று மீட்பு முயற்சிக்கு உங்கள் உதவியையும் ஒத்துழைப்பையும் நல்க வேண்டும்.
குறிப்பாக அகமுடையார் அரண் நிறுவனர் திரு.பாலமுருகன் அகமுடையார்கள் அவர்கள் சேந்தன்குடி , அறந்தாங்கி பகுதி, சூரைக்குடி பகுதிகளில் தற்போது ஆவணங்களை திரட்ட் முயன்று வருகிறார்கள். இதற்கு அப்பகுதிகளில் சில நாட்கள் தங்கவும் , பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்ய போன்றவற்றிற்கு உதவி தேவைப்படுகின்றது. அவர் ஆவணங்கள் திரட்ட அவருக்கு அகமுடையார் சமுதாயம் ஒத்துழைப்பையும்,உதவியையும் செய்ய வேண்டும்.
அவருடைய தொலைபேசி எண் : 9442938890
இன்னும் நாங்கள் உறுதிப்படுத்தி ஆனால் பொதுவெளியில் தெரியப்படுத்தாத பல அரசுகள் அகமுடையார் இனத்தில் உள்ளன.
அதேபோல் அகமுடையார் வரலாறு குறித்த செய்திகள் கிடைத்தாலும் அவற்றை பல்வேறு தரவுகள் கொண்டு உறுதி செய்வது வரை நாங்கள் பொதுவெளியில் வெளியிடுவதில்லை. இப்படி பல்வேறு கல்வெட்டுக்கள் ,தரவுகள் அகமுடையார் ஒற்றுமையால் ஆய்வு செய்யப்பட்டு , உறுதி செய்யப்பட்டு வெளிவர இருக்கின்றன. அகமுடையார்கள் வரலாற்றை பதிவிட்டால் சிலர் தவிர பலர் படிப்பதில்லை என்பதாலும் ,படித்தவர்களும் சேர் செய்வதில்லை என்பதாலும் சோர்வு ஏற்பட்டு அதிகம் பதிவிடாமல் உள்ளோம் . மேலும் குறிப்பிட்ட ஊர்களுக்கு சென்று தரவுகளை திரட்ட உதவியும்,ஒத்துழைப்பும் தேவைப்படுவதாலும் இது போன்ற பல்வேறு செய்திகளை இன்னும் பொதுவெளியில் வெளியிடவில்லை.
இருப்பினும் வரும் காலங்களில் அவற்றை ஒவ்வொன்றாக வெளியிடுவோம்.
மாற்று சமுதாயத்தினருக்கு:
கல்வெட்டுக்கள் ,நில ஆவணங்கள், முன்னர் பெற்ற கல்வி சான்றிதழ்கள் ,பட்டங்கள், உரிமைகள் போன்றவை சேந்தன்குடி ஜமீன் அகமுடையார்கள் என்பதை தெளிவாக சொல்கின்றது.
இப்போது நீங்கள் குழப்பம் செய்வதாலோ , புதிதாக கல்விச்சான்றிதழ் வாங்குவதாலோ காலத்தால் எழுதப்பட்ட ஒன்றை எதையும் மாற்றி விட முடியாது.
உங்கள் இனத்திலேயே பல்வேறு ஜமீனகள் உள்ளன. அதை தேடி வெளிப்படுத்தினாலே உங்களுக்கு உண்மையான புகழ்(மெய் கீர்த்தி) கிடைக்கும்,நிலைக்கும். அதைவிடுத்து மற்றவர்களை உங்களுடையாதாக காட்ட முயற்சிக்காதீர்கள் அது நிலைக்காது என்பதோடு உங்கள் புகழையும் கெடுக்கும்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்