ஆற்காடு இரட்டையர்கள் Dr. திரு.லக்ஷ்மண சாமி முதலியார் அவர்களின் நினைவு தினம் இன்ற…

Spread the love

First
ஆற்காடு இரட்டையர்கள் Dr. திரு.லக்ஷ்மண சாமி முதலியார் அவர்களின் நினைவு தினம் இன்று :

ஆற்காடு சகோதரர்கள் என்பவர்கள் சர். இராமசாமி முதலியாரும் சர். இலட்சுமணசாமி முதலியாரும் ஆவர். பிறப்பால் இரட்டையர்கள். இவர்கள் 1887 அக்டோபர் 14 அன்று கர்னூலில், துளுவ வேளாளர் குடும்பத்தில் ஆற்காடு குப்புசாமி, சிதம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தனர். இவர்களது ஆரம்பக் கல்வி கர்னூலிலுள்ள நகராட்சிப்பள்ளியிலும் பின்னர் மேற்படிப்பு சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் தொடர்ந்தது

மருத்துவர் ஆற்காடு இலட்சுமணசுவாமி முதலியார் சிறந்த கல்வியாளர் ஆவார். இவர் எழுதிய மகப்பேறு மருத்துவப் புத்தகம் இன்றளவும் தமிழ்நாட்டு மருத்துவ மாணவர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆற்காடு இராமசாமி முதலியாரும் இவரும் இரட்டையர்கள். இவரே மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் நீண்டகாலம் துணைவேந்தராகவும் (27 ஆண்டுகள்) மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியில் முதல்வராகவும் பணியாற்றியவர் இவர் தான் துணை வேந்தராக இருந்த காலத்தில் அதிக பல்கலைகழகம் தோன்ற காரணமாக இருந்தார், இவர் விக்டோரியா மகாராணிக்கு பிரசவம் பார்த்தவர்
இந்தியா அரசு இவருக்கு 1963 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்தது
அன்னாரின் நினைவு நாளில் அவர் புகழ் பாடுவோம்.
#திருத்தணிஅகமுடையார்சங்கம்
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்

திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?