இலங்கை அரசன் நிசாங்க மல்லனின் அரசவையில் அகம்படியர்களுக்கான இருப்பிடமும் சமூகநிலை…

Spread the love
0
(0)

First
இலங்கை அரசன் நிசாங்க மல்லனின் அரசவையில் அகம்படியர்களுக்கான இருப்பிடமும் சமூகநிலையும்
——————————————————————————-
கி.பி 1187 முதல் 1196 வரை இலங்கையின் பொலநறுவையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தவன்
நிசாங்க மல்ல எனும் கலிங்க மன்னன் ஆவான்.

மகா பராக்கிரமபாகு மன்னனுக்குப் பிறகு, கலிங்க குலத்தில் பிறந்த கீர்த்தி நிஷங்கன் எனும் நிசாங்க மல்லன்
பொலன்னறுவையில்
ஒரு அரச மண்டபம், ஒரு அரச அரண்மனை அல்லது ஒரு திருமண மண்டபம் போன்ற புதிய கட்டுமானங்களை அமைத்துள்ளார்

குறிப்பிட்ட இந்த
அரசவை ( ராஜ சபை மண்டபத்தில்) அரசருக்கான சிம்மாசனமும் (சிங்க உருவிலான மன்னர் இருக்கையும்) அதை தொடர்ந்து அரசவை உறுப்பினர்களுக்கான இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் அரசனின் இருக்கைக்கு அடுத்து அமைந்திருப்பது இளவரசரின் ஆசனமாகும் இதற்கு சமமாக அல்லது அடுத்து அமைந்திருப்பது அகம்படியர்களுக்கான சிம்மாசனமாகும்.

இராணுவ தளபதி, பிரதம மந்திரி மற்றும் இன்ன பிற அமைச்சர்களும் கூட அகம்படியர்களுக்கு அடுத்தே அமர்ந்திருந்தனர் என்பது ஒவ்வொரு இருக்கைக்கும் அருகிலும் தூணில் கிடைத்த சிங்கள கல்வெட்டு செய்தி மூலம் அறியப்படுகின்றது.

இதன் மூலம் இளவரசருக்கு சமமாகவும், மற்ற அரசவை உறுப்பினர்களையும் விட மேலான இடத்தில் அகம்படியர்கள் மிகவும் உயரிய பங்கை வகித்ததும் சமூக தரத்தில் அவர்கள் இருந்த உயரிய நிலையையும் எடுத்துக்காட்டுகின்றது.

பொதுவாக இது போன்ற தொல்லியல் இடத்தில் தொல்லியல் துறையினர் அறிவிப்பு மற்றும் தகவல் பலகை வைத்திருப்பார்கள். அதே போல் இலங்கையின் இந்த இடத்திலும் இலங்கை தொல்லியல் துறை களம் பலகை வைத்திருந்தது அதில்
அகம்படியர்களின் ஆசனம் குறித்தும் தெளிவாக குறித்து இருந்தார்கள். ஆனால் அதை தவறவிட்டுவிட்டேன்
தற்போது அவசர வேலைகளில் ஈடுபட்டுள்ளதால் இதனை தேடி பதிவு செய்ய முடியவில்லை. ஆனால் இவை இணையத்தில் உள்ளன. இருந்தாலும் அதை விரைவில் இணையத்தில் தேடிப்பிடித்து இன்னும் அதிக தகவல்களோடு பதிவு செய்கிறேன்.

sarisaraweb.wordpress.com என்கிற பிளாக் தளத்தில் நிசாங்க மல்லனின் அரசவை மற்றும் அரண்மனை குறித்து சிங்களர் ஒருவர் விரிவாக எழுதியுள்ளார். இதனை படிக்க விரும்புவர்கள் கீழே உள்ள லிங்கில் சென்று படிக்கலாம்.

சிங்கள மூலத்தை படிக்க விரும்புவர்களுக்கான லிங்க்:
දීප උයන පොළොන්නරුව – DIPA UYANA

தமிழில் படிக்க விரும்புவர்களுக்கான லிங்க்:
https://sarisaraweb-wordpress-com.translate.goog/2019/08/05/%E0%B6%AF%E0%B7%93%E0%B6%B4-%E0%B6%8B%E0%B6%BA%E0%B6%B1-%E0%B6%B4%E0%B7%9C%E0%B7%85%E0%B7%9C%E0%B6%B1%E0%B7%8A%E0%B6%B1%E0%B6%BB%E0%B7%94%E0%B7%80/?_x_tr_sl=si&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=sc

The ancient Lion’s Throne in King’s Council Chamber of Nissanka Malla Palace Polonnaruwa Sri Lanka.இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?