அகமுடையார் வரலாற்று முயற்சிக்கு உதவிட வேண்டுகிறோம் —————————–…

Spread the love

First
அகமுடையார் வரலாற்று முயற்சிக்கு உதவிட வேண்டுகிறோம்
———————————————-
2015ம் வருடம் முதல் தொடர்ந்து அகமுடையார் ஒற்றுமை என்ற பெயரில் சொந்த முயற்சியில் இணையதளம்(வெப்சைட்), பேஸ்புக் பக்கம், யூடிப் பக்கம், அப்ளிகேசன் போன்றவற்றின் வழியாக அகமுடையார் வரலாற்றை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றோம்.

அகமுடையார் சமுதாயத்தின் முதல் கல்வெட்டுதொடங்கி இதுநாள் அவரை அகமுடையாரின் 100க்கும் மேற்பட்ட கல்வெட்டு செய்திகளை விரிவான தகவல்களுடன் பதிவு செய்து அகமுடையாரின் வரலாற்று முயற்சி செய்துவருகின்றோம்.

100க்கணக்கான நூல்களில் ஒரு வரியில் இருக்கும் தகவல்களை 25 வருடங்களுக்கும் மேலான வரலாற்று வாசிப்பு அனுபவம் கொண்டு ஆராய்ந்து ,பல்வேறு செய்திகளுடன் ஒப்பிட்டு அகமுடையார் வரலாற்று தரவுகளை விரிவான செய்திகளாக கொடுத்து வந்துள்ளோம்.

ஆகவே இதற்கெல்லாம் நூல்களை அதிகம் அதிகம் வாசிப்பது மிகவும் அவசியமானதாகும்.
இதுவரை நாம் அகமுடையார் ஒற்றுமை தளங்களில் வெளியிட்டு வந்த தகவல்கள் எல்லாம்

பெரும்பாலான புத்தகங்கள் இணையத்தில் தேடிக்கிடைத்த புத்தங்கள்,நான் ஏற்கனவெ தனிப்பட்ட முயற்சியில் சேகரித்த புத்தங்கள் இன்னும் சில நூல்கள்
சில வருடம் முன்பு 4-5 வருடம் என்று நினைக்கிறேன் .அப்போது நன்கொடையாளர்கள் சிலர் நன்கொடை அளித்தனர் அவற்றில் பல புத்தங்களை நாம் வாங்கியிருந்தோம்.

வசூலான தொகையையும் , நூல் வாங்கிய பில் அனைத்தையும் அப்போது பதிவிட்டிருந்தோம்.
அளித்த நன்கொடையில் பெற்ற புத்தங்களில் சில முக்கிய தகவல்களை நமக்கு அளித்தன.

5 வருடத்திற்கு பின் அகமுடையார் வரலாற்று முயற்சிக்கு உங்கள் ஒத்துழைப்பை வேண்டுகிறோம்.
நமது வரலாற்று முயற்சிக்கு நிதி உதவி செய்ய விரும்புவர்கள் கீழ்கண்ட நமது வங்கிக்கணக்கிற்கு பணம் செழுத்த வேண்டுகிறோம்.

பெயர்: Sakthi Ganesh
அக்கவுண்ட் நம்பர் : 20871000008199
பேங்க்: HDFC
IFSC Code :HDFC0002087
Branch: Thirumangalam

கூகிள் பே,,போன் பே வைத்திருப்பவர்கள் இதே வங்கிக்கணக்கிற்கு Send to Bank Account செய்து உடன் பணம் அனுப்ப முடியும்.

நன்கொடை அளித்தவர்கள் தங்கள் பெயரை இப்பதிவில் கமேண்ட் செய்ய வேண்டுகிறோம்.
பெயர் குறிப்பிட விரும்பாதவர்களின் ஊர் அல்லது அடையாளப்பெயர் கொண்டு குறிப்பிடுவோம்.
மொத்த வசூலான தொகை மற்றும் செலவு பில் ஆகியவற்றை பணம் சேகரித்து முடித்தவுடன் வெளியிடுவோம்.
பணம் உடன் கிடைத்தால் 5-7 நாட்களுக்குள் எல்லாவற்றையும் வாங்கிவிட்டு பில்லை புதிய முன்பு செய்தது போல பொதுவெளியில் வெளியிடுவோம்.

கூடுதல் தகவல்கள்
——————-
வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் புத்தக கண்காட்சி தற்போது மதுரையில் நடக்கின்றது அதில் சென்றால் பல்வேறு வரலாற்று நூல்களை ஒரே இடத்தில் பெற முடியும் .மேலும் இதில் சென்று வாங்கினால் புத்தக விலையில் சில தள்ளுபடியும் கிடைக்கலாம்.

நாம் முதல் நன்கொடை வாங்கி 5 வருடங்கள் கடந்துவிட்டது. அதன் பின் நன்கொடை ஏதும் பெறவில்லை.
ஏனென்றால் என்ன தான் நூலுக்கான தொகை கிடைத்தாலும் ,வாங்கிய நூல்களை ஒரு வரி விடாமல் படிக்க வேண்டும் அப்படித்தேதினால் தான் நாம் தேடுவது கிடைக்கும். கிடைத்த தகவல்களை மற்ற தகவல்களுடன் ஒப்பிட்டு கட்டுரையாக்க வேண்டும் என்பதெல்லாம் கடுமையான பணி. ஏற்கனவே ஒரு நாளைக்கு 10-12 மணி நேரம் புத்தங்களை ஆராய்வதிலேயே நேரம் போய்விடுவதால் புதிய புத்தங்கள் வந்தால் அதுவும் கூடுதல் சுமை தான்.

இருப்பினும் அகமுடையார்களின் வரலாற்றை எப்படியும் மீட்டெடுக்க வேண்டுமென்றால் இதை செய்து தான் ஆகவேண்டும் .புதிய புதிய நூல்களை வாங்கி பார்த்தால் தான் புதிய தகவல்கள் கிடைக்கும் என்பதோடு ஏற்கனவே சேகரித்துள்ள தகவல்களை உறுதி செய்ய புதிய செய்திகளும் உதவும் என்பதாலும் இது மிகவும் முக்கியமானது.

பின்னோக்கி பார்க்கின்றோம்
————————
இங்கு புதிதாக இணைந்தவர்கள் இருப்பார்கள் அவர்களுக்கு முன்னர் நடந்த விசயங்கள் தெரியாது என்பதால் சிலவற்றை குறிப்பிட நினைக்கிறோம்.

பழந்தமிழ் குடியினராகவும் ,பேரினமாகவும் இருந்த அகமுடையார்களை தனி சாதி இல்லையென்றும் மறவர்,கள்ளர் மறவர் சாதியில் இருந்து உருவானவர்கள் என்று எழுதி வந்தார்கள்.

அதற்கு அவர்கள் சொல்லி வந்த காரணம்…

அகமுடையாரின் சேர்வை பட்டத்தையே சாதி போல காட்டி, பாருங்கள் சேர்வை என்பது சேதுபதிகளிடம் பணியாற்றிய சாதி சேர்வை என்ற பெயர் சேதுபதி காலத்திற்கு முன் இல்லாததால் இந்த சாதி மறவர் சாதியிடமிருந்து பிறந்தது என்று போல் பேசி வந்தார்கள்.

ஆனால் நாங்கள் அகம்படி என்ற இந்த சாதி சேதுபதி மன்னர்கள் ஆள்வதற்கு முன்பே அதாவது 16ம் நூற்றாண்டுக்கு முன்னதாக இருந்ததை காட்டிய போது ! இருக்கலாம் ஆனால் 16ம் நூற்றாண்டுக்கு ரொம்ப முன்னால் இருந்திருக்காது என்றார்கள்.

பின்னர் 12ம் நூற்றாண்டு கல்வெட்டுக்களை வெளியிட்டோம். அப்போது “ஏதோ கிடைச்சிருச்சு அனால் 10ம் நூற்றாண்டு முன் கிடையவே கிடையாது! ” என்றார்கள்

பின்னர் 8ம் நூற்றாண்டு கல்வெட்டினையும் வெளிப்படுத்தினோம். அதன் பின் இந்த ஏமாற்று பேர்விழிகள் அமைதியானார்கள் .ஏனென்றால் 8ம் நூற்றாண்டு காலத்திலும் அதற்கு முன்னதிலும் இந்த குழப்பவாதிகளுக்கே உறுதியான கல்வெட்டு சான்றுகள் இல்லை.

ஆனால் வரலாற்று தேடலை தொடர்ந்தோம்.

பின் 5ம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள்…
2ம் நூற்றாண்டு கல்வெட்டு
அப்படியே பின் சென்று சிந்து சமவெளி காலம் வரை இன்று அகமுடையார் என்று அறியப்படும் சாதியினர் கல்வெட்டுக்களில் இருப்பதை மட்டுமல்ல அரசகுடிகளாக காட்டப்படுவதை வெளிக்கொணர்ந்தோம்.

அதுமட்டும்மல்ல அடுத்த அம்பை எய்தார்கள்…

வடுக படையெடுப்பின் போது பாளையங்களை பெற்றும் ,ஜமீன்களாகவும் உருவாக்கப்பட்டவர்கள்
பழந்தமிழ் குடியினராகவும் ,பேரினமாகவும் இருந்த அகமுடையார்களை
அகமுடையாரில் மன்னர்களே இல்லை என்று பேசிவந்தார்கள்.

வரலாற்று தேடலை தொடர்ந்தோம்.
பெரும் புகழ் கொண்ட சோழமன்னர்கள் உருவாகி ,வளர்ந்த குடி இன்றைக்கு அகமுடையார் என அறியப்படும் சாதியினர் என்பதை பல்வேறு ஆதாரங்களுடன் காணொளி வாயிலாக விளக்கினோம்.
அதே போல் மாவலி வாணாதிராயர்கள்
இலங்கையின் கண்டி அரசவம்சம்,
இலங்கையின் கம்பளை அரசவம்சம்

போன்றவை அகமுடையார்களால் உருவாக்கப்பட்டதை வெளிப்படுத்தினோம்.

இன்னும் சில அரசபரம்பரையினர் அகமுடையார் சமுதாயத்தில் உருவாகியுள்ளனர் அவர்களையும் ஆதாரத்தோடு வெளிப்படுத்துவோம்.

அடுத்து
வடமாவட்ட அகமுடையார் வேறு! தென் மாவட்ட அகமுடையார் வேறு ! என்று அகமுடையாருக்கு சம்பந்தமில்லாத சாதிகளும் , சில குள்ளநரிகளும் பேசிவந்தார்கள் இன்றும் பேசி குழப்பம் செய்ய முயற்சித்து வருகின்றார்கள்.

பட்டங்களை கடந்து அகமுடையார் பேரினமாக அகமுடையார்கள் ஓரணியில் திரண்டு விடக்கூடாது என்பதுவே இவர்களின் நோக்கம்.

ஆனால் இன்றைய அகமுடையார் சாதியினர் 8ம் நூற்றாண்டு தொடங்கி 100 வருடங்கள் முன்பு வரை வட தமிழகத்திலும் சரி,தென் தமிழகத்திலும் சரி, அகம்படி ,அகம்படியர் என்ற ஒரே பெயரிலேயெ அழைக்கப்பட்டுள்ளனர் என்பதை 50க்கும் மேற்பட்ட பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் பிற சான்றுகள் வாயிலாக எடுத்துக்காட்டினோம்.

இவ்வளவு சான்றுகளை பார்த்த பின் தென் பகுதி அகமுடையார்,வட பகுதி அகமுடையார் என அனைவரும் தெளிவான பிறகு இனி ஏமாற்ற முடியாது என புரிந்து கொண்ட குள்ளநரிகள் வேறு விதமாக குழப்பம் செய்ய வந்தார்கள்.

“வட மாவட்ட அகமுடையார், தென் மாவட்ட அகமுடையார் ஒன்று தான் ஆனால் துளுவ வேளாளர் என்பவர்கள் வேறு அகமுடையார்கள் வேறு” என்று புதிய குழப்பம் செய்ய வந்தார்கள்.

அதையும் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை நடுகல் செய்தி மூலம் உடைத்தோம். இந்த நடுகல்லில் குறிப்பிடும் தொழு சூரன் எனும் பெயரே தொழுவ வேளாளர் என்ற பெயர் உருவானதற்கு காரணம் என்பதை விரிவான காணொளியில் எடுத்துக்காட்டினோம். இந்த தொழு சூரனை உள்வீட்டு கோயில் சேவகர் என்று இன்றைய அகம்படியரை குறிக்கும் அதே பெயர் கொண்டே அழைக்கப்பட்டதன் மூலம் தொழுவ வேளாளர் என்போர் அகமுடையாரின் ஒரு பிரிவினர் என்பதையும் நிருபித்தோம். இன்னும் பல சான்றுகளை கொடுக்க போகின்றோம்

இதையெல்லாம் தற்பெருமைக்காக சொல்லவில்லை.
வரலாற்றை ஆய்வு செய்து வெளிக்கொணர்ந்தால் தான் இது போன்ற பொய்யர்களின் முகத்திரையை கிழிக்க முடியும் என்பதோடு உண்மையை அனைவரும் உணர்ந்து கொள்ள முடியும் என்பதை வெளிப்படுத்துவதற்காகத்தான் இங்கு குறிப்பிடுகின்றோம்.

மேலும் அகமுடையார் ஒற்றுமை யூடிப் சேனலில் பல்வேறு காணொளிகளை உருவாக்கி வருகின்றோம். அகமுடையார்களின் ஆதரவு கிடைத்தால் இன்னும் பல காணொளிகளை நல்ல முறையில் உருவாக்கி அகமுடையாரை ஒற்றுமைப்படுத்த முடியும்.

ஏனென்றால் வரலாற்று ஆவணங்களை பார்க்கும் போது தான் அகமுடையார்கள் ஒரே இனம் என்பதை உணர முடியும் .நாம் ஒன்றாக இணைந்து பல சாதனைகளை செய்ய முடியும்.

சரி! அகமுடையார் வரலாற்று மீட்பிற்கு எவ்வளவு பேர் உதவு செய்கிறீர்கள் என்று பார்ப்போம்!
பணம் அனுப்பியவர்கள் இப்பதிவில் கமேண்ட் செய்ய வேண்டுகிறோம்.நன்றி!



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo