நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை சோழிய வேளாளர் என பொய் சொல்லி அலையும் புரட்டர்களுக்கு…

Spread the love

First
நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை சோழிய வேளாளர் என பொய் சொல்லி அலையும் புரட்டர்களுக்கு புதிய சான்றுகள்
————————————————————–
கவிஞரும் ,சுதந்திர போராட்ட வீரருமான நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையை சோழிய வேளாளர்கள் சிலர் தங்கள் சாதி என சொந்தம் கொண்டாடி வருகின்றனர். சோழிய வேளாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கூட நாமக்கல் இராமலிங்கம் புகைப்படத்தை அவர்கள் அமைப்பு பேணர்களில் பயன்படுத்துவதை பார்க்கின்றோம்.

ஒரு தமிழறிஞராக ,தமிழின் அடையாளமாக நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை படத்தை எவர் பயன்படுத்தினாலும் அது நமக்கு மகிழ்ச்சியே. ஆனால் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை சோழிய வேளாளர் என்று தவறாக நினைப்பதும் அவரை அந்த சாதி என அடையாளப்படுத்துவதும் பெரும் கொடுமையாகும்.

ஒருவேளை சோழிய வேளாளர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாழக்கூடிய நாமக்கல்(கொங்கு) பகுதியில் இராமலிங்கம் பிள்ளை வாழ்ந்ததினால் இவர்கள் அந்த முடிவுக்கு வந்திருக்கலாம். எப்படி என்றாலும் இது ஓர் தவறான முடிவு ஆகும் என்பதை இங்கு விளககுகின்றோம்.

முதலில் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையின் பூர்வீகம் நாமக்கல் அன்று அவர் பிறந்த ஊர் ,வட ஆற்காடு தாலுகாவில் ,திருக்கோவிலூர் அருகே உள்ள பரனூர் என்ற கிராமம் ஆகும். இதை நாமக்கல் கவிஞரே எழுதிய தனது “எனது கதை” என்ற சுயசரிதை நூலில் தெளிவாக குறிப்பிட்டிருப்பார்.

ஆதாரம்: நூல்: எனது கதை,பக்கம் எண் 23 (பார்க்க இணைப்பு- 1)

இதை முன்பே வேறு பதிவில் சொல்லியுள்ளோம். இருப்பினும் மீண்டும் இதை இங்கு நினைவூட்டுகின்றோம். குறிப்பிட்ட பரனூர் கிராமத்தில் உள்ளவர்களை கேட்டாலே நாமக்க்கல் கவிஞரின் தந்தை வெங்கட் ராம பிள்ளை அகமுடையார் சாதி என்று கூறுவார்கள்/கூறியுள்ளார்கள். இதை நாமக்கல் கவிஞர் சோழிய வேளாளர் என்று சொல்பவர்கள் புரிந்து கொண்டார்களா?

அடுத்து இதே நூலின் 107ம் பக்கத்தில்
சேலம் பாகல் பட்டி ஜமீனாகிய மாணிக்க நாயக்கர் என்பவர் தனது உறவினர் என்பதையும் குறிப்பிட்டிருப்பார்.

ஆதாரம்: நூல்: எனது கதை,பக்கம் எண் 106,107 (பார்க்க இணைப்பு- 2,3)

ஆக நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை , பிள்ளை பட்டவர் என்பதும் , மாணிக்க நாயக்கர் ,நாயக்கர் பட்டம் கொண்டவர் என்பதும் இருவரும் உறவினர்கள் என்பதும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்பதையும் அறிந்துகொள்ளலாம். இதில் ஒருவருக்கு பிள்ளை பட்டமும் மற்றொருவருக்கு நாயக்கர் பட்டமும் உள்ளது என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.

ஆனால் இப்போது சிலர் வேறு ஓர் வாதத்தோடு வருவார்கள். இருவரும் உறவினர்கள் தான் ஆனால் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் இல்லை என்பார்கள் .ஆனால் அந்த வாதத்தை உடைப்பதற்கும் இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்பதற்கும் ஆதாரம் உள்ளது. அதையும் பார்ப்போம்.

அதற்கு முன் ஓர் கேள்வி!

சரி நாமக்கல் கவிஞர் சோழிய வேளாளர் என்று கூறுபவர்களிடம் ஒரு கேள்வி. சோழிய வேளாளர்களுக்கு நாயக்கர் பட்டம் உள்ளதா? இதற்கு பதிலே வராது!

அடுத்து ,நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை கட்டுரையாக எழுதியிருந்தார் அது “தாயார் கொடுத்த தனம்” என்ற பெயரில் நாமக்கல் கவிஞர் வாழ்ந்த காலமான 1953ம் வருடத்திலேயே நூலாக வெளிவந்தது.

அந்த நூலில் பா.வே.மாணிக்க நாயக்கர் தனது தூர பந்து என்று குறிப்பிடுவார்.
ஆதாரம்: தாயார் தந்த தனம் பக்கம் எண் 110 (பார்க்க இணைப்பு- 4)

பிள்ளை பட்டம் கொண்ட நாமக்கல் கவிஞர் நாயக்கர் பட்டம் கொண்ட பா.வே அவர்களை தூர பந்து என்று குறிப்பிட காரணம் என்ன? வேறு என்ன? இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்பதை தான்!

இதையும் நாமாக சொல்லவில்லை. நாமக்கல் கவிஞரே சொல்கிறார்.
இதே நூலின் 113ம் பக்கத்தில் மாணிக்க நாயக்கரின் மாமனார் மாணிக்க முதலியார் என்பவராவார் என்று சொல்வதோடு
எங்கள் இனத்திற்கு ( நாமக்கல் கவிஞர் சார்ந்த சாதிக்கு ) முதலியார், நாயக்கர்,பிள்ளை ,உடையார்,கவுண்டர், செட்டியார் போன்ற பல பட்டங்கள் உண்டு என்றும் குறிப்பிடுகிறார்.

ஆதாரம்: தாயார் தந்த தனம் பக்கம் எண் 113,114 (பார்க்க இணைப்பு- 5,6)

நாமக்கல் கவிஞர் தங்கள் சாதி என கூறும் சோழிய வெள்ளாளர்களுக்கு மேற்சொன்ன முதலியார், நாயக்கர்,பிள்ளை ,உடையார்,கவுண்டர், செட்டியார் பட்டம் உள்ளதா?

நாமக்கல் கவிஞர் பிறந்த சாதி முதலியார், நாயக்கர்,பிள்ளை ,உடையார்,கவுண்டர், செட்டியார் போன்ற பட்டங்களை கொண்ட சாதியாகும்.
இந்த அனைத்து பட்டங்களையும் தமிழ்நாட்டில் கொண்ட ஒரே இனம்
அகமுடையார் சாதியாகும்.

ஆகவே நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை என்பவர் சோழிய வேளாளர் அல்ல என்பதோடு ,அவர் அகமுடையார் சாதியை சேர்ந்தவர் என்பது விளங்கும்.

அறியாமையால இருப்பவர்கள் இதை படித்து தெளிவடைந்துகொள்ளலாம்.
உண்மையை ஒப்புக்கொள்ளாமல் முரண்டு பிடிப்பவர்கள் தொடர்ந்து முரண்டு பிடிக்கட்டும் , பொய் சொல்லட்டும்! அப்போது தான் நாங்கள் மேலும் மேலும் ஆதாரங்களை கொண்டுவந்து வெளியிடுவோம். உண்மையை வெளிப்படுத்துவோம்.இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்

போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?