அரங்கல் துருகம் சீமை 💛💚
தமிழர்களின் பாரம்பரியத்தையும்,வீரத்தையும் பறைசாற்றும் ஜல்லிக்கட்டு (வட மாவட்டங்களில் எருதுகட்டு) விளையாட்டிற்கு பெயர்பெற்ற கிராமம்,சந்தன நகரான திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரங்கல் துருகம் எனும் மருது சீமை🔥🔥🔥
அமைப்பு,கட்சி,சங்கம்,இயக்கம் என்று எந்தவொரு பின்புலமும் இன்றி உணர்வுள்ள,பற்றுள்ள உறவுகள் ஒன்றுசேர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மாமன்னர் மருது பாண்டியர்களின் குருபூஜை பெருவிழாவினை ஆகச்சிறந்த முறையில் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இந்த ஆண்டு மாமன்னர் மருது பாண்டியர்களின் 225வது குருபூஜை பெருவிழா நேற்றைய தினம் அரங்கல் துருகம் பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மாமன்னர் மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் நடந்தது.குருபூஜை கமிட்டி உறுப்பினர்கள்,ஊர் பொதுமக்கள்,சர்வ கட்சி பிரமுகர்கள்,என்று பலதரப்பட்ட மக்களும் பங்கேற்றனர்.
நிகழ்வின் முக்கிய நிகழ்வாக மாமன்னர் மருது பாண்டியர்களின் சிற்பத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு,பூஜை நடைபெற்றது.இறுதியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
#அகமுடையார்
#அகமுடையார்_பேரினம்
#மாமன்னர்_மருது_பாண்டியர்கள்
#மருதுபாண்டிய_மன்னர்கள்
#கொடை_வள்ளல்_பச்சையப்ப_முதலியார்
#போர்க்குடி_அகமுடையார்
#போர்க்குடி_அகம்படியர்


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
