First
சோழ அரசகுடும்பத்தை சேர்ந்த அகப்பரிவாரத்து பெண்டுகளில் அரையன் உமையாழ்வி
———————————————————————-
அகப்பரிவாரம் ,அகப்பரிவாரத்தார் என்போர் இன்றைய அகமுடையார் சாதி என்பதையும் , அவர்கள் சோழ அரசினர்களின் உறவினர்களாக குறிக்கப்பட்ட செய்தியையும் ஏற்கனவே எடுத்துக்காட்டியுள்ளோம். அதை உறுதி செய்ய்யும் கல்வெட்டாக இன்று காணப்போகும் கல்வெட்டு அமைகின்றது.
இன்று நாம் காணப்போகும் கல்வெட்டு இன்று மாயவரம் வட்டத்தில் உள்ள கொறுக்கை எனும் ஊரில் உள்ள வீரட்டானேஸ்வர் கோவிலில் கிடைத்த இரண்டாம் இராஜாதிராஜன் காலத்திய (கி.பி 1179) கல்வெட்டு செய்தியாகும்.
ஆதாரம்: தமிழ்நாட்டு கல்வெட்டுக்கள் ,வருடம் 2004, கல்வெட்டு எண் 6/1983, தமிழக அரசு தொல்லியல் துறை வெளியீடு.
குறிப்பிட்ட இந்த கல்வெட்டு செய்தியில்
விருத ராஜ பயங்கர வளநாட்டு குறுக்கை நாடு என்று சோழர் காலத்தில் வழங்கப்பட்ட இன்றைய மயிலாடுதுறை திருச்சாமுன்டேஸ்வரர் கோயிலுக்கு “பெரிய அகப்பரிவார பெண்டுகளில் அரையன் உமையாழ்வி ” எனும் பெண் பள்ளியறை நாச்சியார், ஆள் கொண்ட நாயக தேவர் ,நாச்சியார் போன்ற இறைத்திருமேனிகளை வழங்கியுள்ளதோடு இத்திருமேனிகளுக்கு திருப்படி மாற்றுக்கு 120 காசுகளை கோயிலில் உள்ள சிவபிராமணர்களிடம் வழங்கியுள்ளார்.
அகப்பரிவாரம் எனப்படுவதால் இவர் இன்றைய அகமுடையார் சாதியை சேர்ந்தவர் என்பதை அறிந்துகொள்ளலாம்.
சோழர் காலத்தில் சிறப்பிடம் பெற்றிருந்த அகப்பரிவாரம்,அகப்பரிவாரத்தார் என்போர் இன்று அகமுடையார் அழைக்கப்படும் சாதியினர் என்பதை பல்வேறு வரலாற்று அறிஞர்களும் கூறியுள்ளதை ஏற்கனவே பல முறை எடுத்துக்காட்டியுள்ளோம்.
ஆதாரம்:
1) ” அகப்பரிவாரம் அல்லது அகம்படி” ஆதார நூல் : pandiyan townships vol 2 page 191, தமிழக அரசு தொல்லியல் துறை வெளியீடு
2)”பரிவாரம் அகமுடையார் சாதியின் உட்பிரிவு” ஆதார நூல் : தென் இந்திய குலங்களும் குடிகளும் பாகம் 6, பக்கம் 169
3- பரிவாரங்கள் (அகம்படியருள் ஒரு பிரிவினர்) ஆதார நூல் : இந்தியாவில் யாதவ குலங்கள் ஆசிரியர் : ஆதின மிளகி ,பக்கம் எண் 6
இவ்வாறு பரிவாரம் என்றும் அகப்பரிவாரம் என்பது இன்றைய அகமுடையார் சாதியினரை தான் குறிக்கும் என்பதை பலர் ஏற்றுக்கொண்டாலும், அவர்கள் அகப்பரிவாரம் என்பது அரச ஊழியர் ,அரச போர்வீரர் என்று மட்டும் வைத்து நிறுத்திக்கொள்வர்.
ஆனால் அகப்பரிவாரம் என்பது அரசர்களின் உறவினர்களை கொண்ட அமைக்கப்பட்ட ஓர் அமைப்பு என்பதை அந்த “அகப்பரிவாரம்” என்ற வார்த்தையின் பொருளை பிரித்து பார்த்து அறிந்துகொண்டாலே விளங்கிக்கொள்ள முடியும்.
பரிவாரம் என்பதற்கு இன்றும் சமஸ்கிருதம் மற்றும் இந்தியில் “குடும்பம்” என்பதே பொருளாகும் .அகப்பரிவாரம் என்பது அகம் எனும் அரண்மனையை சேர்ந்த குடும்பத்தவர் என்பதுவே பொருளாகும். இதை இந்த வார்த்தையின் பொருளை கொண்டு அறிய முடியும் என்றாலும் இதற்கு சமமான தமிழ் வார்த்தையும்
இதை புரிந்து கொள்ள உதவுகின்றது.
அதாவது அரசசுற்றம் என்ற பெயரும் அகப்பரிவாரம் என்பதற்கு பயன்பட்டுள்ளது. இந்த அரச சுற்றம் என்ற வார்த்தையில் உள்ள சுற்றம் என்பதற்கு உறவினர் என்பதையும் அரச சுற்றம் என்பது அரசனின் உறவினர்கள் என்பதையே குறிக்கின்றது.
இவ்வளவு விளக்கமாக கூறிய போதும் இன்னும் கூட சிலருக்கு சந்தேகங்கள் எழலாம் . ஆனால் அதை போக்கும் விதமான விடை குறிப்பிட்ட இந்த அரையன் உமையாழ்வி கல்வெட்டு வரிகளிலேயே உள்ளது.
இந்த கல்வெட்டை தனது ” கங்கைகொண்ட சோழபுரம் கல்வெட்டுக்கள்” என்ற நூலில் வெளியுட்டுள்ளார். ( இந்த நூலினை சில நாட்கள் முன்பு மதுரை புத்தக கண்காட்சியில் வாங்கியது நினைவிருக்கலாம்) .
முன்பு தமிழக அரசு இக்கல்வெட்டை படியெடுத்த போது இக்கல்வெட்டின் கீழ்பகுதி மண்ணில் புதைந்திருந்ததால் கல்வெட்டின் மீதமுள்ள வரிகள் படிக்கப்படாமல் இருந்தது. ஆனால் வரலாற்றிஞர் இல.தியாகரசன் அவர்கள் தனது ” கங்கைகொண்ட சோழபுரம் கல்வெட்டுக்கள்” என்ற நூலில் இக்கல்வெட்டினை முழுவதுமாக பதிவு செய்திருந்தார். இதன் மூலம் கல்வெட்டின் மீத வரிகளும் நம் ஆய்வுக்கு கிடைத்தது.
இந்த கல்வெட்டு பற்றி இல.தியாகராசன் அவர்கள் குறிப்பிடும் போது
கல்வெட்டில் குறிப்பிடப்படும் ” இவ்வூர் காணியுடைய பெரிய அகப்பரிவார பெண்டுகளில் அரையன் உமையாழ்வி ” என்பவர் சோழ அரசகுடும்பத்தவர் என்று பெண்டுகள் என்பது சோழர்கள் குறிப்பிட்டதை கொண்டு மட்டும் கூறுகின்றார்.
ஆனால் இக்கல்வெட்டை நுட்பமாக ஆய்வு செய்தால் வேறு சில காரணிகள் கொண்டும் இக்கருத்தை உறுதி செய்யலாம்.
கல்வெட்டில் குறிக்கப்படும் பெண் “இவ்வூர் காணியுடைய பெரிய அகப்பரிவார பெண்டுகளில் அரையன் உமையாழ்வி “என்று குறிக்கப்படுகின்றார். அதாவது இவ்வூர் “இவ்வூரில் காணியுடைய” என்பதன் மூலமும் அரையன் என்று குறிப்பிடப்படுவதன் என்பதன் மூலம் இவர் பெரும் காணியுடையவர் என்றும் அரையர் என்றும் அழைக்கப்பட்டுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் அன்று அரசர்கள் மட்டுமே செய்த தெய்வத் திருமேனிகள் மூன்றை கோவிலுக்கு வழங்கியுள்ளதும் அத்திருமேனிகள் திருப்படி மாற்றுக்கு பெரும் தொகையை பெண் ஒருவர் அக்காலத்தில் வழங்கியுள்ளதும் இவர் பெற்றிருந்த செல்வாக்கை குறிப்பதாகும்..
மேலதிக தகவல்கள்
—————-
வேளிர்களாக இருந்த போதும் , அரசர்களாக இருந்த போதும் அந்தந்த இனக்குழு சார்ந்த குடியினரே அந்த குடித்தலைவர்களாகவும் அரசர்களாகவும் இருந்துள்ளனர்.
அரசுகள் பேரரசுகளாக உயரும் போது அரசுகள் சார்ந்த குடியினரோடு மற்ற குடியினரையும் பணிக்கு அமர்த்துவர்.
அதே போல் குறிப்பிட்ட குடி சார்ந்தவர்களும் மற்ற குடி சார்ந்த அரசகுலத்தவர்களிடம் பணிபுரிய துவங்கினர் என்பதையும் அறியலாம்.
இன்னும் விரிவாக பேச செய்திகள் உள்ளன. மற்றோரு காணொளியில் இதனை மிக விரிவாக விளக்குவோம்!
அகமுடையார் வரலாற்றை வெளிப்படுத்த நூல்கள் வாங்க நிதியளித்த அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி!
இந்த புதிய நூல் வாங்கியிருக்காவிட்டால் இந்த தகவல்கள் கிடைத்திருக்காது. நாம் உண்மையை முதன்மை வரலாற்று ஆதாரங்களான கல்வெட்டு ஆதாரம் கொண்டு எத்தனை தான் விளக்கினாலும் முதன்மை ஆதாரம் என்பதை தாண்டி இது குறித்து வரலாற்று அறிஞர்களின் ஒப்புமையும் தேவைப்படுகின்றது.
ஏற்கனவே இந்த கல்வெட்டு செய்தியை பார்த்துவிட்டோம் நாம் ஏன் “கங்கை கொண்ட சோழபுரம் கல்வெட்டுக்கள்” என்ற நூலையும் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தால்
தமிழக அரசு படியெடுக்கும் காலத்தில் மண்ணில் புதைந்திருந்த கல்வெட்டு வரிகளை தனது
“கங்கை கொண்ட சோழபுரம் கல்வெட்டுக்கள்” நூலில் வரலாற்றறிஞர் இல .தியாகராசன் அவர்கள் பதிவு செய்திருக்க மாட்டார் அந்த விடுபட்ட கல்வெட்டு வரிகளும் கிடைத்திருக்காது , இல .தியாகராசன் அவர்களின்
“கல்வெட்டு குறிப்பிடும் அகப்பரிவாரத்து பெண்” சோழ அரசகுடும்பத்தவள் என்ற கருத்தையும் இங்கு ஒப்புமைக்கு காட்டியிருக்க முடியாது.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்