கங்கினேனி ஏரியில் மருதுபாண்டியர் சகோதரர்கள் சிலை அமைக்க மைதானம் தயார் நிலையில் உள்ளது
ராஜம்பேட்டை நாடாளுமன்றத் உறுப்பினர், மக்களவைக் குழுத் தலைவர் திரு மிதுன்ரெட்டி அவர்கள் இல்லத்தில் இன்று சித்தூர் முதலியார் சங்கத் தலைவர்களுடன் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் ஓபிசி பட்டியலில் முதலியார் இனத்தை சேர்க்கவேண்டும், சித்தூர் நகரில் உள்ள கங்கினேனி ஏரியில் மருது பாண்டியர் சகோதரர்களுக்கு சிலை அமைக்கவேண்டும்என எம் பி மிதுன் ரெட்டி அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு சாதகமாக பதிலளித்த எம் பி மிதுன் ரெட்டி அவர்கள் உடனடியாக சித்தூர் மாவட்ட ஆட்சியருடன் மற்றும் முதலியார் சமுதாயத் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உடனடியாகப் பரிசீலித்து கங்கினேனி ஏரியில் மருதுபாண்டியர் சகோதரர்களின் சிலைக்கு இடம் அமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு சித்தூர் நகராட்சி ஆணையருக்கு ஆணையிட்டார். நகராட்சி ஆணையர் உடனடியாகப் பரிசீலித்து கங்கினேனி ஏரி அருகில் உள்ள இடத்தை ஆய்வு சேய்து மருது பாண்டியர் சகோதரர்கள் சிலை அமைக்க இடம் நிர்ணயம் செய்தது.
Click here to Follow Instagram Page to Get Updates Instantly