ஆந்திர மாநிலம் சித்தூர் கங்கினேனி பகுதியில் மருதுபாண்டியர் சகோதரர்கள் சிலை அமைக்க மைதானம் தயார் நிலையில் உள்ளது
———————————————————
ராஜம்பேட்டை நாடாளுமன்றத் உறுப்பினர், மக்களவைக் குழுத் தலைவர் திரு மிதுன்ரெட்டி அவர்கள் இல்லத்தில் சித்தூர் முதலியார் சங்க தலைவருமாகிய அண்ணன் புல்லட் சுரேஷ் அகமுடையார் அவர்கள் தலைமையில் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சித்தூர் நகரில் உள்ள கங்கினேனி ஏரியில் மருது பாண்டியர் சகோதரர்களுக்கு சிலை அமைக்கவேண்டும் என எம் பி மிதுன் ரெட்டி அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு சாதகமாக பதிலளித்த எம் பி மிதுன் ரெட்டி அவர்கள் உடனடியாக சித்தூர் மாவட்ட ஆட்சியருடன் மற்றும் முதலியார் சமுதாயத் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உடனடியாகப் பரிசீலித்து கங்கினேனி ஏரியில் மருதுபாண்டியர் சகோதரர்களின் சிலைக்கு இடம் அமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு சித்தூர் நகராட்சி ஆணையருக்கு ஆணையிட்டார். நகராட்சி ஆணையர் உடனடியாகப் பரிசீலித்து கங்கினேனி ஏரி அருகில் உள்ள இடத்தை ஆய்வு சேய்து மருது பாண்டியர் சகோதரர்கள் சிலை அமைக்க இடம் நிர்ணயம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மருது பாண்டியர் சகோதரர்களின் சிலை விரைவில் நிறுவப்படும். இதற்கு பங்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.
Bullet Suresh Bullet Suresh Bullet Suresh Force Sai Appu
#அகமுடையார் #திருத்தணி
புகைப்படங்கள் உதவி: Youthful Nandha Kumar
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்