இலங்கையின் புகழ்பெற்ற கண்டி ராஜ்ஜியத்தை உருவாக்கியதை நம்மில் பலர் நினைப்பது போல சிங்களர்கள் அல்ல, மாறாக கண்டி அரசை உருவாக்கியது தமிழ் அகம்படியர் (அகமுடையார்) சாதியினரே அதற்கான ஆதாரங்களை ஒவ்வொன்றாக பாருங்கள்.
D. Bernard என்ற ஐரொப்பியர் மற்றும் J. Abeysekera எனும் சிங்களவர் ஆகியோர் இணைந்து எழுதிய Anurapurayen Poḷonnaruvaṭa எனும் நூலில் கீழ்கண்ட செய்தி சிங்களத்தில் காணப்படுகிறது.
” අගම්පඩි සේනා කෙතරම් බලවත් වීද යත් වික්රමබාහු රජු දවස ඔවුන් දළදා මැදුර සිය පාලනයට ගත් බැව් පොළොන්නරුවේ ඇති දෙමළ සෙල්ලිපියකින් එන”
இதை தமிழில் விளக்குவோம் என்றால்
“அகம்படி இராணுவம் மிகவும் சக்திவாய்ந்ததாக மாறியது, பொலன்னருவாவில் உள்ள ஒரு தமிழ் கல்வெட்டில், மன்னர் விக்கிரமபாகுவின் ஆட்சிக் காலத்தில் அவர்கள் தலதா மெதுராவைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது”
என்று கல்வெட்டு செய்தியை மேற்கோள் காட்டி கூறுகின்றார்கள்.
மேற்கூறியவற்றில் இருந்து சில விசயங்கள் தெளிவாக தெரிகின்றன.
1) தலதா எனும் புத்தரின் புனித பல் அடங்கிய புத்தகோவில் உள்ளிட்ட புத்தகோவில்களை பாதுகாக்கும் பணியில் அகம்படியர்கள் ஈடுபட்ட்டிருத்தப்பட்டிருந்தனர்.
2) தமிழ் அகம்படியர் சாதியினரே கண்டி ராச்சியத்தை உருவாக்கி ஆட்சி செய்துள்ளார்கள். அகம்படியர்கள் என்ற சாதி அடிப்படையில் தலதா எனும் புனித பல்லை பாதுகாக்கும் மாளிகை பாதுகாப்பு பொறுப்பை கண்டி அரசர்கள் பெற்றனர். (ஆனால் இதைகொண்டு சிங்கள மக்கள் அனைவருக்கும் தலைவர்களாகும் வகையில் சில விசயங்களை பூர்வ கண்டி அரசர்கள் செய்ததாக தெரியவில்லை) .
3) கண்டி அரசை பின்னாளில் கைப்பற்றிய நாயக்கர்கள் கண்டி அரசின் தலதா மாளிகையை பாதுகாக்கும் உரிமையை கைப்பற்றி அதன்மூலம் ஒட்டு மொத்த சிங்களவர்களின் ஆதரவை பெற்றனர் எனலாம்.
இப்பதிவில் சில இணைப்புகள்
1,2- நூலின் சிங்கள குறிப்பு மற்றும் அதன் தமிழ் மொழி மாற்றம்
3-இலங்கையின் ஹிராங்கொடை தமிழ் கல்வெட்டு
4- Girivassipura என்ற சிங்கள மொழி திரைப்படத்தின் டிரைய்லரில் இடம் பெற்ற காட்சி ஸ்கீர்ன்சாட் மற்றும் தலதா மாளிகை உட்புறம்.
குறிப்பிட்ட படத்தின்
டிரைலர் வீடியோ லிங்க்: https://www.youtube.com/watch?v=m7bj9cn9kVc