கர்ணனை போல நண்பனை தேர்ந்தெடு… நீ வீழ்கின்ற நிலை வந்தாலும் உனக்காக போராடுவான் -…

Spread the love

கர்ணனை போல நண்பனை தேர்ந்தெடு… நீ வீழ்கின்ற நிலை வந்தாலும் உனக்காக போராடுவான்
———————

“கர்ணனை போல நண்பனை தேர்ந்தெடு… நீ வீழ்கின்ற நிலை வந்தாலும் உனக்காக போராடுவான்” என்று சொல்வார்கள். அது எவ்வளவு உண்மையான வார்த்தை!

அது உண்மை என்பதை வடதமிழக அகமுடையார்கள் நிருபீத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

வடதமிழகத்தில் மருதுசேனை அமைப்பை சேர்ந்த வடதமிழக அகமுடையார்கள் கண்டன சுவரொட்டி ஒட்டினார்கள்

முகநூல் ,வாட்ஸ் அப் தளங்களில் கண்டனத்தை பதிவு செய்தார்கள்

விருதுநகர் உறவு குமரவேல் இறந்தபோது விழுப்புரத்தில் இருந்து மதுரை வந்து ,விருதுநகரில் இறப்பிலும் கலந்து கொண்டார்கள்!

எல்லாவற்றிற்கும் மேலாக ஆதியாரை பலமுறை சிறையில் சந்தித்துள்ளார்கள் (இன்று கூட விழுப்புரம் மண்டல மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் தேனி சிறைக்கு சென்று ஆதியாரை சந்தித்துள்ளார்கள் , அதன் புகைப்படம் இப்பதிவில் உள்ளது)

ஆதியார் செய்ததிலேயே சிறந்த பணி வடதமிழக அகமுடையார்களுடன் தொடர்பை நல்ல முறையில் பேணியது தான் அதிலும் அம்பலூர் எழில் இராவணன் எனும் சகோதரர் ஆதியாருக்கு தளபதி போல் இருந்து சளைக்காமல் பணியாற்றி வருவதையும் , அவரும் மற்றும் பல வடதமிழக அகமுடையார் உறவுகளும் செய்து வரும் பணிகளை தொடர்ந்து கவனித்து வருகின்றேன் .

நான் , தென்மாவட்டமான மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவன் தற்போது எனக்கு 42 வயதாகிறது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அகமுடையார் சமுதாயத்தை கவனித்து வருகிறேன் ,30 வருடங்களாக தமிழக வரலாற்றை வாசித்து, ஆய்ந்து வருகிறேன் என்ற வகையில் என்ற அனுபவத்தில்

அகம்படியர்களின் ஆதிகுணமான நன்றியுணர்வு ,விசுவாசம் , மான உணர்வு, உறவை பேணுதல் போன்றவை வடதமிழக அகமுடையார்களிடம் அப்படியே இருப்பதை காண்கின்றேன்.

வடதமிழக அகமுடையார் உறவுகளின் அகமுடையார் சமுதாய உணர்விற்கு வாழ்த்துக்களும்,நன்றிகளும்!

அன்புடன்
மு.சக்திகணேஷ் சேர்வை(அகமுடையார்)
மதுரை,திருமங்கலத்திருந்து -அகமுடையார் ஒற்றுமைக்காக.
மொபல்: 072005 07629
AgamudayarOtrumai.com



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo