பல்லவர் யார் என்பதை ஏன் விளக்க வேண்டும்? அவசியம் என்ன?
——————————————–
பல்லவர் என்ன சாதியினர் என்பதை சென்ற பதிவில் விளக்கியிருந்தோம். அதை பார்த்த சிலர் இன்னும் கூட யோசித்திருக்கலாம்? பல்லவர் நம் சாதி இல்லையென்றால் அதை ஏன் அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் வெளிப்படுத்த வேண்டும்.
காரணமில்லாமல்,காரியங்கள் இல்லை!
நாம் (அகமுடையார் ஒற்றுமை) பதிவு செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கு பின்னாளும் ஒரு பெரும் காரணம் இருக்கும்.
சுயநலத்திலும் ஓர் பொதுநலம். இதுவே நமது கொள்கை!
ஒவ்வொரு மன்னரையும் தங்கள் சாதி என தமிழ் சமூகங்கள் சன்டை போட்டு பிரிந்து கிடைப்பதை தவிர்க்க செய்ய வேண்டும் அதற்கு மன்னர் சமூகம் யார் என்பதை விளக்க வேண்டும் என்பது நமது பொதுநலமான எண்ணமாகும்.
அதேநேரம்
எதிரி யார் ? நண்பன் யார்? என்று உங்களுக்கு தெரியவில்லை என்றால் நீங்கள் கண்ணுக்கு தெரியாத எதிரியோடு போராடுவதற்கு சமம்! எதிரி யார் என்று தெரியாவிட்டால் அப்போரில் ஒருநாளும் வெற்றி பெற முடியாது!
3000 வருடங்களுக்கு முன்பான சிந்து சமவெளி காலத்தில் நம் தானவர்களுக்கு எதிரியாக விளங்கிய இந்திரன் மற்றும் வழியினரான ஆரியர்களும் சரி
கி.பி 10ம் நூற்றாண்டு வரை கர்நாடக மற்றும் தமிழக வாணர்(பாணர்களுக்கு) எதிரியாக விளங்கிய பல்லவர் மற்றும் அவர்களின் உறவுகளான நுளம்பர்களும் சரி.
காலம் முழுவதும் அகமுடையார் இன அரசர்களுக்கு குறிப்பாக வாணர் பேரரசு கர்நாடகம் மற்றும் வடதமிழக பகுதியில் அழிய பல்லவர்,நுளம்பர் வம்சங்கள் காரணமாயிற்று! ஆனால் அகமுடையார்களின் மற்றோரு பேரரசான சோழர்கள் பின்னாட்களில் பல்லவர்களின் ஆட்சிக்கு முடிவுரை எழுதினர். இது தான் கர்மா என்பதோ!
இன்றும் கூட அகமுடையார்களுக்கு தங்களின் உறவு யார்? எதிரி யார் ? என்று தெரியாமல் அகமுடையார்கள் வீழவேண்டும் என்று நினைப்பவர்களே தங்கள் உறவாக எண்ணியும் தங்கள் உறவுகளையே , மாற்று சமுதாயமாக எண்ணி எதிர்க்கும் மயக்க நிலையில் உள்ளனர்! பேதமை!
இதை உணர்ந்து அகமுடையார் சமுதாயம் ஒன்றாக இணைந்தால் அன்றி அகமுடையார் சமுதாயத்திற்கு விடிவில்லை!
படத்தில்: கி.பி 2ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட கர்நாடக பாண அரசர்களுக்கு,குறிப்பிட்ட இந்த அவணி நகரம். பல்லவ மற்றும் பல்லவ உறவினர்களான நுளம்பர்களின் தாக்குதலால் கி.பி 10ம் நூற்றாண்டில் அழிக்கப்பட்டது . அவணி நகரம் (கர்நாடக மாவட்டம் கோலார் மாவட்டத்தை சேர்ந்தது)
ஏற்கனவே சொன்னது போல் ,பேசுவதற்கு நிறைய வரலாற்று செய்திகள் உள்ளன,கேட்பதற்குத்தான் காதுகள் வேண்டும்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்