படுவூர் அகம்படியர்கள் -இன்றைய சென்னை கிழக்கு கடற்கரை சாலை, அடையாறு பகுதியின் 1200 ஆண்டுக்கு முன்பான ஆட்சியாளர்கள்
———————————-
வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்துள்ள
சாணார்குப்பம் பகுதியில் ஓர் நடுகல் கிடைத்துள்ளது. இந்த நடுகல் தற்போது வேலூர் கோட்டை அருங்காட்சியகத்தில் ஒரு நடுகல் செய்தி ஒன்று பார்வைக்கு வைக்கபட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நடுகல் கல்வெட்டின் மையப்பகுதியில் வீரன் ஒருவன் குதிரை மீது வாளோடு அமர்ந்து இருக்கின்றான் சிற்பத்திற்கு மேலே கல்வெட்டு காணப்படுகின்றது.
இரண்டாம் நந்திவர்மபல்லவ மன்னனின் 12ஆம் ஆட்சியாண்டை ( கிபி 743 ) குறிக்கும் இந்த நடுகல் கல்வெட்டில் தான் நாம் பேசப்போகும் செய்தி வெட்டப்பட்டுள்ளது.
வட்டெழுத்தில் அமைந்துள்ள இந்த நடுகல் கல்வெட்டு குறித்து மத்திய அரசின் கல்வெட்டு ஆண்டறிக்கையில் குறிப்பு பதிவாகியுள்ளது.
கல்வெட்டு ஆண்டறிக்கையில் கல்வெட்டு வரிகள் இடம்பெறாது கல்வெட்டு பற்றிய குறிப்புகள் மட்டுமே இடம்பெறும்.
ஆனால் “வியக்கத்தக்க வேலூர்” என்ற பேஸ்புக் குருப் மூலம் இந்த வட்டெழுத்து கல்வெட்டின் சில வரிகள் நம் பார்வைக்கு கிடைத்தது.
அதாவது
“ஶ்ரீ கோவிசை நந்தி விக்கிரம பரும
யாண்டு பன்னிரண்டாவது படுவூர்க்
கோட்டத்து அடையறு நாடு விசையாதித்த
இளகம்படிகள் முருங்கை மேற் படை வந்த
ஞான்று பொள்ளோர் கலத்திலுன்பான் மு
..தரையர் மருமகன் வினையத்தன் குதிரை
..ட்ட … ல் எறிந்து பட்டான்”
என்ற கல்வெட்டு வரிகள் வருவதாக குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம் மத்திய அரசின் கல்வெட்டு ஆண்டறிக்கையில் இறந்துபட்ட வீரனுக்கு உதிரப்பட்டியாக செம்மார்பட்டி, மிண்டல்பட்டி என்ற ஊர்கள்
அளிக்கப்பட்ட செய்தி குறிப்பிடப்படுகின்றது. ஆகவே வியக்கத்தக்க வேலூர் பேஸ்புக் குருப்பில் வெளியிடப்பட்ட நடுகல் கல்வெட்டு செய்தியும் முழுமையானதாக இல்லை என்பது புரிகிறது.
இவ்வாறு அரைகுறையான கல்வெட்டு செய்தி கொண்டு பல்வேறு செய்திகளை உறுதி செய்வதில் குழப்பம் இருந்தாலும் .ஒரு விடயம் அதுவும் நமக்கு தேவையான விடயம் உறுதியாக தெரிகின்றது.
” படுவூர்க்
கோட்டத்து அடையறு நாடு விசையாதித்த இளகம்படிகள்” என்ற வரிகள் மூலம் கிபி 743 ஆண்டு காலத்தில் அன்றைய படுவூர் கோட்டம் பகுதி (இன்றைய சென்னையின் கிழக்கு கடற்கரை சாலை முதல் அடையாறு வரையான பகுதிகள் ) அகம்படியர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பதை அறிய முடிகின்றது.
இந்த கல்வெட்டில் வரும் “விசையாதித்த ளகம்படிகள்” என்பது விசையாதித்தன் எனும் அகம்படியர் இனத்தை சேர்ந்த ஆட்சியாளன் என்பதை குறிக்கின்றது. சரி அதை எப்படி ஆட்சியாளன் என்று சொல்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம்.
கல்வெட்டின்படி “படுவூர்க் கோட்டத்து அடையறு நாடு விசையாதித்த
இளகம்படிகள் முருங்கை மேற் படை வந்த ஞான்று ” என்பதன் மூலம்
விசையாதித்த அரசர் முருங்கை என்ற பகுதிக்கு படையெடுத்து சென்றிருக்க வேண்டும் அல்லது படையெடுப்பை தடுக்க சென்றிருக்க வேண்டும் (கல்வெட்டு முழுமையாக இல்லாததால் இதை உறுதி சொல்வது சரியாக இருக்காது) . விசையாதித்த அகம்படிகள் முன்பு எந்த மன்னருடைய பெயரும் குறிக்கப்பெறாததால் இவர் தளபதியாக படைநடத்தவில்லை மாறாக இவரே அரசர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
இதை உறுதிப்படுத்த மேலும் 3 கல்வெட்டு சான்றுகள் உதவுகின்றன. முதலாவது கி.பி 14ம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த படுவூர் கல்வெட்டு
இந்த கல்வெட்டு செய்தியிலும் படுவூர் தலைவர்களான அகம்படியர்கள் விஜயநகர அரசால் தண்டிக்கப்பட்ட செய்தி குறிக்கப்படுகிறது.
ஆதாரம்: தென் இந்திய கல்வெட்டு தொகுதி ,பாகம் 38 , கல்வெட்டு எண் 240
பார்க்க இணைப்பு : 2
காலத்தின் பின்னால் வரும் இக்கல்வெட்டில் கூட படுவூர் தலைவர்களாக அகம்படியர்கள் குறிக்கப்பெறுவது இந்த நடுகல் செய்தியில் படுவூர் ஆட்சியாளானாக விசையாதித்த அகம்படிகள் இருந்தார் என்பதை உறுதிப்படுத்துகிறது.
அதுமட்டுமல்ல வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் சென்ட்டாத்தூர் பகுதியில் கிடைத்த மற்றுமொரு கல்வெட்டு செய்தியில்
“படுவூர் கோட்டத்து அடை 4.யாறு நாட்டு ஸ்ரீ மாவலிவாணவராயர்
5. ஆள ”
என்ற செய்தியின் மூலம் படுவூர் கோட்டத்து அடையாறு நாட்டை ஶ்ரீ மாவலி வாணராயர் அரசர்கள் ஆண்டுள்ளனர் என்பது தெரிகிறது. மாவலி வாண அரசர்கள் அகம்படியர் இனத்தவர் என்பது குறித்து ஏற்கனவே அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் பதிவு செய்துள்ளதை இங்கு நினைவுகூரவும்.
ஆகவே கி.பி 10ம் நூற்றாண்டு காலத்திய இந்த நடுகல் செய்தியிலும் அகம்படியர்களாகிய வாணர்கள் படுவூர் பகுதியையும் அதன் பகுதியாகிய அடையாறு நாட்டையும் ஆண்டுள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ள முடிகிறது.
அதுமட்டுமல்ல இப்பதிவில் நாம் காணும் வேலூர் நடுகல்லில் கூட அரசரின் பெயர் “விசையாதித்த” என்பதை நீங்கள் கவனிக்கலாம். இந்த விசையாதித்தன் என்பது செப்பேடு மற்றும் கல்வெட்டுக்களில் வாணர் குடியினரை குறிக்க பயன்படும் விச்சாதிரன்,வித்யாதரன் என்பதன் திரிபாகாலாம். இந்த பெயரே பின்னாளில் சோழ மன்னர்களுக்கு விசையன்,விஜையன் என்ற பெயர்கள் உருவாக தோற்றுவாயாக இருக்கலாம்.
வேலூர் நடுகல் மூலம் வாணர் குலம் அகமுடையார் என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது.
ஆகவே சென்னை படுவூர் கோட்டம் (கிழக்கு கடற்கரை சாலை தொடங்கி , அடையாறு வரை ) உள்ள பகுதியின் ஆட்சியாளர்களாக அகமுடையார்கள்
கி.பி 8ம் நூற்றாண்டு வேலூர் நடுகல் செய்தியிலும்
கி.பி 10 ம் நூற்றாண்டு சென்டாத்தூர் நடுகல் செய்தியிலும்
கி.பி 14ம் நூற்றாண்டு படுவூர் கல்வெட்டு செய்தியிலும்
என தொடர்ச்சியாக சென்னை பகுதியின் ஆட்சியாளர்களாக குறிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது. காலத்தால் முந்தைய கல்வெட்டுக்கள் கிடைக்கும் பட்சத்தில் இவர்கள் ஆட்சி செய்த காலம் இதற்கு முன்பு இருந்திருக்கலாம்.
சென்ட்டாத்தூர் வாணர் நடுகல் ஓர் அற்புதமான வீரனை பற்றிய நடுகல் (8க்கும் மேற்பட்ட அம்புகள் தாக்கி கொல்லப்பட்ட வீரன்) பற்றி வேறு ஒர் நாள் விரிவாக பதிவிடுகின்றோம்.
குறிப்பு:
இந்த நடுகல்லில் உள்ள கல்வெட்டு செய்தி முழுமையாக கிடைக்காததால் இறந்துபட்ட வீரன் யார் என்பதை உறுதி செய்யவில்லை ஆகவே இப்பதிவில் அந்த குதிரை வீரனின் படத்தை முழுதாக பகிர்ந்து கொள்ளவில்லை .
இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிட்டதால் பதிவில் இன்னும் நிறைய செய்திகளை கூறமுடியவில்லை மற்றொரு நாளில் இன்னும் அதிக தகவல்களை பகிர்ந்துகொள்கின்றோம்.
நன்றி:
இந்த நடுகல் வரிகளை வெளியிட்ட “வியக்கத்தக்க வேலூர்” பேஸ்புக் குருப் பக்கத்திற்கு நன்றிகளும் ,வாழ்த்துக்களும்!
இணைப்பு 1: வேலூர் நடுகல்
இணைப்பு 2 : படுவூர் நாடாழ்வார் அகம்படியர் கல்வெட்டு
இணைப்பு 3: சென்டாத்தூர் நடுகல்
மேலதிக சான்றுகள்
————
வியக்கத்தக்க வேலூர் குருப்பில் இந்த நடுகல் பதிவு லிங்க்:
https://www.facebook.com/groups/668086197365111/posts/1108909753282751/
படுவூர் கல்வெட்டு பதிவு லிங்க்:
https://www.facebook.com/891728770860514/posts/4397574050275951
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்