அனுப்புநர்:
மு.சக்திகணேஷ் சேர்வை(அகமுடையார்)
நிறுவனர்- அகமுடையார் ஒற்றுமை
திருமங்கலம்,மதுரை
மொபல் எண் : 7200507629
வெப்சைட்: www.agamudayarotrumai.com
பெறுநர்:
தலைவர் மற்றும் நிர்வாகிகள்
அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம்
மாண்டியேத் சாலை,சென்னை
பொருள்: தகுதியுடைய அகமுடையார் சமுதாய மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பாரபட்சமின்றி வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துதல்
அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சமுதாய பெரியோர்களுக்கு வணக்கம்!
அகமுடையார் சமுதாயத்தின் சார்பாக அகமுடையார் ஒற்றுமை இணையதளத்தில் இருந்து மு.சக்திகணேஷ் சேர்வை(அகமுடையார்) இதை எழதுகின்றேன்.
அகமுடையார் சமுதாயத்தின் பாரம்பரியமிக்க சங்கமான சென்னை, அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் , கல்வி மேம்பாட்டை ஊக்குவிக்கம் வண்ணம் , அகமுடையார் சமுதாய மாணவ மாணவியருக்கு ஆண்டு தோறும் கல்வி உதவித் தொகை வழங்கி வருவது பெரும் மகிழ்வுக்கும், பெருமைக்குரியதாகவும் இருக்கின்றது.
முந்தைய காலங்களில் தகுதியுடைய அகமுடையார் சமுதாய மாணவ மாணவியருக்கு இந்த கல்வி உதவித்தொகை பாரபட்சமின்றி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரம் சமீபகாலமாக , கல்வி உதவித்தொகை வழங்குவதில் குறிப்பிட்ட மாவட்டங்களில் வாழும் அகமுடையார் மாணவ மாணவியர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது என்னை போல இலட்சணக்கான அகமுடையார் சமுதாய மக்களின் மனதை பெரிதும் புண்படுத்துகின்றது.
குறிப்பிட்ட மாவட்டங்களில் இருந்து தகுதியுடைய மாணவ மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் கல்வி வளர்ச்சி சங்கத்திற்கு அனுப்பப்பட்டாலும் அது பரிசிலிக்கப்பட்டு உதவித்தொகை வழங்கப்படுவதில்லை என்று வரும் செய்தி, ஒன்றாக வாழும் அகமுடையார் சமுதாயத்தை பிரிப்பது போல் உள்ளது.
அகமுடையார்கள் அனைவரும் ஒரே மூலத்தில் இருந்து உருவானவர்கள் என்பதே வரலாறு காட்டும் மறுக்க முடியாத உண்மையாகும்! ஆகவே பட்டங்கள் வேறுபட்டாலும், தொலைவுகள் பிரித்தாலும் அகமுடையார் சமுதாயத்தினர் அனைவரும் ஒருவரே!
ஆகவே அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கத்திற்கு வரும், கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை , இது அந்த மாவட்டம், இது வேறு மாவட்டம் என்று பிரிக்காமல் ,தமிழ்நாட்டு முழுவதும் இருந்து வரும் விண்ணப்பங்களை முழுவதுமாக பரிசீலனை செய்து அதில் சாதி “அகமுடையார்’ என்று சாதிச்சான்றிதழில் குறிப்பிட்டுள்ளவர்களில் பொருளாதாரம் , மதிப்பெண் அடிப்படையில் தகுதியான மாணவ மாணவியரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உதவித்தொகை வழங்க கேட்டுக்கொள்கின்றோம்.
அதுவே எந்த காரணத்திற்காக அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கத்தை அகமுடையார் முன்னோர்கள் உருவாக்கினார்களோ! அதன் நோக்கமும் பலனும் சென்றடையும் வகையில் அகமுடையார் மாணவ மாணவியருக்கு பாரபட்சமின்றி கல்வி உதவி தொகை வழங்க வேண்டுமாய் இலட்சகணக்கான அகமுடையார் சமுதாய மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கின்றேன்.
அகமுடையார் சமுதாய மக்களின் இந்த கோரிக்கைக்கு நீங்கள் செவிகொடுப்பீர்கள் என்றும் பாரபட்சமின்றி கல்வி உதவித்தொகை இந்த முறை வழங்கப்படும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.
அகமுடையார் சமுதாயம் வாழ்க! அகமுடையார் சமுதாய ஒற்றுமை வளர்க!
வணக்கங்களுடன்
மு.சக்திகணேஷ் சேர்வை(அகமுடையார்)
இடம்: திருமங்கலம்(மதுரை)
நாள்: 14-07-2023
——————-
குறிப்பு: இச்செய்தியில் பெயர் இடம் பெற்றுள்ள பகுதியில் உங்கள் பெயரை நிரப்பி சோசியல் மீடியாவிலோ அல்லது சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கோ அனுப்ப அகமுடையார் உறவுகளை வேண்டுகிறேன்.
அல்லது இப்பதிவை பேஸ்புக் ,வாட்ஸ் அப் ,டெலிகிராம் குருப்களில் அப்படியே சேர் செய்தும் சம்பந்தப்பட்டவர்களின் பார்வைக்கு கொண்டு செல்லலாம்.நன்றி!
——————-
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்