இன்றைய நிகழ்வில் பங்கேற்க அகமுடையார் உறவுகளை அழைக்கின்றோம்
————————————-
ஆயிரக்கணக்கில் அகமுடையார்கள் துவங்கப்பட்டன ஆனால் அவற்றில் விரல் விட்டு எண்ணக்கூடிய அமைப்புகளே இன்று செயல்படும் நிலையில் இருக்கின்றன.
கல்வி,வேலைவாய்ப்பு,பொருளாதாரம் , அதிகாரம் என்பதுவே அகமுடையார் சமுதாயத்தின் இன்றைய முக்கிய தேவைகள் .
இந்நிலையில் இந்த முக்கிய தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யும் முகமாக அரசுப்பணிகளுக்கு அகமுடையார் மாணவ மாணவியரை தயார்படுத்தும் பணியை செவ்வனே செய்துவருகிறது திருப்பரங்குன்ற மருதிருவர் கல்வி மையம்!
அத்திபூத்தாற் போல் , அகமுடையார் இனத்தில் ஓர் அரிய முயற்சி இதுவென்று சொன்னால் அது மிகையில்லை!
இந்நிலையில் மருதிருவர் கல்விமையத்தின் மூலம் பயிற்சி பெற்ற மாண மாணவியரை பாராட்டும் நிகழ்வும் , போட்டி தேர்வுகளுக்கான புத்தங்கள் வெளியீட்டு விழாவும்
இன்று(14-05-2023) மாலை 3 மணிக்கு மதுரை திருப்பரங்குன்றம் நகரில் நடைபெற இருக்கின்றது.
இந்த அரிய நிகழ்வில் கலந்துகொள்ள அனைத்து பகுதியில் உள்ள அகமுடையார் உறவுகளையும் மதுரை திருப்பரங்குன்றத்திற்கு அழைக்கின்றோம்.
அரசு பணிக்கு வெற்றி பெற்றோரை பாரட்ட வேண்டும்! வெற்றிபெற முயற்சிப்பவர்களை வெற்றி பெற ஊக்குவிக்க வேண்டும்! புதியவர்களை தேர்வு எழுத தூண்ட வேண்டும்!
என்ற முனைப்போடு! நிகழ்வில் பங்கேற்க அகமுடையார் உறவுகளை அழைக்கின்றோம்!
குறிப்பு:
அழைப்பிதழ் கிடைக்கப்பெறாதவர்கள் இப்பதிவில் உள்ள அழைப்பிதழையே உங்களுக்கு விடுக்கப்பட்ட தனிப்பட்ட அழைப்பென ஏற்று உரிமையுடன் நிகழ்வில் பங்கேற்று சிறப்பிக்க அகமுடையார் ஒற்றுமை மற்றும் அகமுடையார் சமுதாயத்தின் சார்பில் அழைக்கின்றோம்! நிகழ்வில் சந்திப்போம்!
நேரம்: மாலை 3 மணி
இடம்: லீலா- கிருஷ்ணமூர்த்தி மஹால் ,திருப்பரங்குன்றம்
பேருந்து நிறுத்தம்: பூங்கா நிறுத்தம் (ஸ்டாப்) ,திருப்பரங்குன்றம்
தொடர்புக்கு: 63741 43123, 88386 01656
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்