பட்டங்களை கடந்து அகமுடையார்களாக திருமண வாழ்வில் இணைந்த சுந்தரபாண்டியன் மற்றும் காயத்திரி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!
————————————
இன்று(03-03-2023) சேர்வை பட்டம் கொண்ட அகமுடையாரான அன்பு சகோதரர் ராமு சுந்தர் எனும் சுந்தரபாண்டியன் அவர்களும் நாயக்கர் பட்டம் கொண்ட அகமுடையார் சாதியை சேர்ந்த காயத்திரி தேவி அவர்களும் திருமண வாழ்வில் இணைந்துள்ளார்கள். அவர்களுக்கு முதற்கண் அகமுடையார் சமுதாயத்தின் சார்பாக அகமுடையார் ஒற்றுமை தளம் திருமண நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
அகமுடையார்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தங்களுக்குள் பட்டங்கள் ஏற்படுத்தும் வேறுபாட்டை பெரிதாக எண்ணியதில்லை.
வேறு ஒர் பகுதியில் இருந்து ஊர் ஊருக்கு குடிபெயரும் அகமுடையார்கள் வேறு பட்டம் கொண்ட அகமுடையார்களிடம் திருமண உறவு கொள்ள தயங்கியதே இல்லை.
போக்குவரத்து வசதி இல்லாத அக்காலத்தில் தொலைதூரத்தில் உள்ள இடத்தில் திருமணம் செய்யும் போது நல்லது கெட்டவை போன்ற நிகழ்வுகளில் பங்கேற்பது கடினம் என்பதால் தொலைதூர திருமணங்களை தவிர்த்து அதனால் ஒரே சாதிக்குள்ளேயே வேறு பட்டங்கள் உள்ளவர்களுக்குள்ளாக நடக்கும் திருமணங்கள் குறைந்து காணப்பட்டது.
அதேநேரம் போக்குவரத்து வசதிகள் பெருமளவு வளர்ந்துவிட்ட இக்காலத்தில் மீண்டும் அந்த பழைய முறை அதாவது பட்டங்கள் எதுவாக இருந்தாலும் கவலையில்லை சாதி அகமுடையார் என்ற ஒரே சாதி என்பதை பார்த்து பல்வேறு திருமணங்கள் நடந்து வருகின்றன.
அப்படிப்பட்ட ஓர் திருமணம் தான் . இன்று நடந்துள்ள சுந்தரபாண்டியன், காயத்திரி தேவி திருமணமாகும்.
ஆகவே அப்படிப்பட்ட திருமணத்தை வாழ்த்துவது நமது கடமையாகும்!
அகமுடையார்கள் உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழ்கிறார்கள்! பல்வேறு பட்டங்களில் இருப்பதால் இன்னும் சிலர் இது குறித்து விழிப்புனர்வு அடையாமல் இருப்பதால் நல்ல நல்ல திருமணங்கள் நடைபெறாமல் போகின்றன.
பலர் அரசுவேலை,டாக்டர் வரன் ,வெளிநாட்டில் இருக்கும் வரன் என்று தேடிக்கொண்டிருப்பார்கள் . ஓரே பட்டத்தை வைத்து மாற்று சாதியில் திருமணம் செய்துகொண்டு பின் வருத்தபடுகிறார்கள். அதே நேரம் அவர்கள் தேடுவது போல பொருத்தமான வரன் அகமுடையார் சாதியிலேயே வேறு பட்டங்களில் இருப்பார்கள் , ஆனால் பட்டத்தை பற்றிய விழிப்புனர்வு இல்லாமையால் பலர் அந்த திருமணத்தை தவிர்த்திருக்கலாம்.
ஆனால் இனிவரும் காலங்களில் பொருத்தமான வரன் என்றால் பட்டங்களை பற்றி கவலைப்படாமல் வரன் உண்மையில் அகமுடையார் சாதி தானா என்பதை உறுதி செய்துகொண்டு திருமணம் செய்து கொண்டால் நாம் தேடிய வரனும் கிடைக்கும்ம். மகிழ்ச்சியும் ஏற்படும்!
குறிப்பு:
திருமண பத்திரிக்கையில் பட்டங்களை குறிப்பிடும்போது அடைப்புக்குள் சாதியை குறிப்பிடுங்கள்!
உதாரணத்திற்கு
திரு.ராமு சேர்வை( அகமுடையார்
திரு. சக்திவேல் நாயக்கர் (அகமுடையார்)
என்று குறிப்பிட்டால் பத்திரிக்கையை படிக்கும் மற்ற சாதியினருக்கு குழப்பம் ஏற்படாது என்பதோடு அகமுடையார்களுக்கும் ,அகமுடையார்களின் பட்டங்கள் பற்றிய விழிப்புனர்வு வரும் .
சமீப காலங்களில்
பட்டங்களை கடந்து அகமுடையார்களுக்குள் திருமணங்கள் நடைபெற்றதற்கு இது போன்ற பல்வேறு உதாரணங்கள் உள்ளன.
இந்த பத்திரிகைகளையெல்லாம் சேகரித்து வைத்துள்ளோம். இதையெல்லாம் தனிப்பதிவாக ஓர் நாள் வெளியிடுவோம்.
இதே போல் உங்களுக்கு தெரிந்த நடந்த அல்லது நடக்கவிருக்கின்ற பட்டங்களை கடந்து அகமுடையார் சாதிக்குள் நடைபெறுகின்ற திருமண நிகழ்வுகளின் படங்கள் மற்றும் பத்திரிக்கையின் படங்களை அகமுடையார் ஒற்றுமை தளத்திற்கு அனுப்பி உதவலாம்!
அகமுடையார் ஒற்றுமை தளத்தின் வாட்ஸ் அப் எண் 7200 50 7629 என்ற எண்ணிற்கு அப்பத்திரிக்களை அனுப்ப வேண்டுகிறேன். இது அகமுடையார் வரலாற்றை வெளிப்படுத்தி அகமுடையார் இனம் ஒன்றினைய உதவும்.
தனிப்பட்ட குறிப்பு
————-
உண்மையில் இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ளாமல் போனது
எனக்கு மிகுந்த வருத்தமே!
திருமணம் நடைபெற்ற ஊரான வீரசோழன் ,வரலாற்று சிறப்பு மிக்க ஊர். தென் தமிழ்நாட்டில் சோழர்களின் அரண்மனை இருந்த இடமாகும் மேலும்
எனது தந்தையின் உடன்பிறந்த சகோதரி திருமணம் செய்து சென்ற ஊர் அதாவது எங்களுக்கு சம்பந்த ஊர் . 20 வருடங்களுக்கு முன் அவ்வூருக்கு சென்றது நினைவில் இருக்கிறது . அதே ஊரை இந்த திருமணத்தின் போது வைத்து பார்த்து விட வேண்டும் என்று ஆவலாக இருந்தேன். ஆனால் வேறு ஓர் தவிர்க்கமுடியாத அவசர காரியமாக வெளியே சென்று விட்டதால் உடன் வரமுடியவில்லை.
மேலும்
முகூர்த்தம் காலை 4-6 என்பதால்
நான் தங்கியிருந்த இடத்தில் இருந்து திருமண இடத்திற்கு சரியான நேரத்திற்கோ அல்லது திருமணம் முடிந்து சில மணி நேரங்களில் கூட செல்லமுடியாததால் வர இயலவில்லை.
அதுகுறித்து பெரிதும் வருத்தம் என்றாலும் இன்று திருமண வாழ்வில் இணைந்துள்ள அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை அகமுடையார் ஒற்றுமை சார்பாக திருமண நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்!
அறிவிப்பு: அகமுடையார் சமுதாய செய்திகளை விரைந்து உங்கள் மொபலில் பெற்றிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அகமுடையார் ஒற்றுமை அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள் .
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarotrumai.community
லிங்க் ஒர்க் ஆகவில்லை என்றால் உங்கள் மொபலில் கூகிள் பிளே ஸ்டோர் சென்று agamudayarotrumai என்று ஆங்கிலத்தில் இடைவெளி இல்லாமல் டைப் செய்து அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்!
நமது அப்ளிகேசன் பற்றிய தகவல்களை உங்களுக்கு தெரிந்த பேஸ்புக்,வாட்ஸ்அப் ,டெலிகிராம் குருப்களில் மறக்காமல் பகிர்ந்துகொள்ளுங்கள்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்