First
திருச்சுழி திருமேனிநாதர் கம்பத்தடி மண்டபத்தை கட்டிய முத்துக்கருப்பணன் சேர்வை(அகமுடையார்)
—————————————————————–
இன்றைய விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகரின் கிழக்கே பதினைந்து கி.மீ. தொலைவில், அமைந்துள்ளது திருமேனிநாதர் திருக்கோவில்
இங்கு ஈசன், “திருமேனி நாதன்’ எனும் திருநாமத்துடன் விளங்குகிறார். அம்பிகை, “துணைமாலை அம்மன்’ என்ற பெயரில் கோயில் கொண்டுள்ளார். சைவ சமயக் குரவர்கள் நால்வர், சேக்கிழார், குமர குருபரர், சேரமான் பெருமாள் நாயனார் என சைவ சமயச் சான்றோர்கள் பலரும் பல்வேறு கால கட்டங்களில் இத்தலத்து இறைவனின் மேன்மையை அழகு தமிழில் பாடிப் போற்றியுள்ளனர்.
தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்கள் பதினான்கில் பத்தாவது திருத்தலமாக பேறு பெற்று விளங்குவது திருச்சுழியல் ஆகும்.
இக்கோவிலின் சகாயவல்லி அம்மன் சந்நிதியின் வடக்குப் பிரகார கல் சுவரில் முதலாம் ராஜராஜ சோழன், தனது பத்தாவது ஆட்சி ஆண்டில் கோயிலுக்குத் தானங்கள் அளித்த செய்தி, தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கியமாக இக்கோயில் கம்பத்து மண்டபம், கி.பி. 1749ல் முத்துக் கருப்பணன் சேர்வை என்கிற அகமுடையார் இனத்தவரால் கட்டப்பட்டதாகும். இதை பல்வேறு வரலாற்று தரவுகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் இக்கருத்தை நிரூபிக்கும் வண்ணம் குறிப்பிட்ட இந்த கம்பத்தடி மண்டபத்தில் முத்துக்கருப்பணன் சேர்வை மற்றும் ஆண்டியண்ணன் சேர்வை
வேலாயுதம் சேர்வை, முத்திருளாயி அம்மாள் போன்றோருக்கும் சிலைகள் அமைந்துள்ளன.
இதில் வேலாயுதம் சேர்வை தவிர்த்த மூன்று பேரும் இதே திருச்சுழி அருகில் அமைந்துள்ள உடையானம்பட்டி என்ற ஊரை பூர்விகமாக கொண்டவர்கள் . குறிப்பிட்ட ஊரில் இன்றும் அகமுடையார்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.
முத்துக்கருப்பணன் சேர்வைக்காரர் அவர்கள் புகழ்பெற்ற சேது தளவாய் வெள்ளையன் சேர்வையின் மைத்துனர் ஆவார்.
முத்துக்கருப்பணன் சேர்வைக்காரர் என்பவரும் பெரும் வீரராக திகழ்ந்தவர் என்பது அவரது சிலை வடிவமைப்பின் மூலமே தெரியவருகிறது..
தலைப்பாகை
முறுக்கிய மற்றும் நீண்ட மீசை
காதில் தோடுகள் போட்டு நீண்ட (காது வளர்த்தல்)
இடையில் வாள்
அரைக்கச்சை ஆடை
கழுத்தில் பதக்கம் ,மார்பில் அணிகலன்கள்
கைகளில் தண்டை
போன்றவையுடன் வளமையும் , வீரத்தையும் நினைவூட்டும் அடையாளத்துடன் காணப்படுகிறார்.
அடுத்து வரும் ஆண்டியண்ணன் சேர்வை அவர்களும் இதே உடை மற்றும் தோற்றத்துடன் காணப்படுகிறார். ஆனால் ஆண்டியண்ணன் சேர்வையுடன் ஒப்பிடும் போது முத்துக்கருப்பணன் சேர்வை சற்றே பருமனாக இருந்திருப்பார் அல்லது வயதில் கூடியவராக இருந்திருக்கலாம் என்ற அமைப்புடன் சிலை அமைப்பு காணப்படுகின்றது.
அடுத்து வரும் வேலாயுதம் சேர்வை என்பவர் காவி உடை,தாடி அமைப்பிலும் உத்திராட்சம் அணிந்தவராக காணப்படுவதால் இவர் இறைத்தொண்டாற்றியவர் என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது.
அதே போல் முத்திருளாயி அம்மாள் என்பவரின் சிலை காணப்படுகின்றது.
இதே கோவிலில் சேது பிரதானி பொக்கிசம் முத்து இருப்பளப்ப பிள்ளை என்கிற அகமுடையாரரும் தானம் வழங்கியுள்ளார்.
இது குறித்து முன்னர் பல்வேறு செய்திகளை சேகரித்து வைத்திருந்தோம் ஆனால் இச்சிலைகளின் புகைப்படங்கள் கிடைக்காததால் பதிவிடாமல் இருந்தோம். இப்போது புகைப்படம் கிடைத்துவிட்டது ஆனால் சேகரித்த தகவல்கள் எங்கே என்று தெரியவில்லை.
இருப்பினும் காலம் கடத்தினால் சரியாக வராது என்பதினால் இதை இப்போது பதிவிடுகின்றோம். விரிவான தகவல்கள் மற்றொரு நாளில்…
புகைப்பட உதவி: திரு.விஜய் ,காரியாபட்டி (முகநூல் வழியாக)
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்