First
தாமரைப்பாக்கம் கிழார்(வெள்ளாளர்களை ) கொடுமைப்படுத்தி வரிவாங்கிய அரச பரிவாரத்தினர் அகம்படியர்களே! ஆய்வுக்கட்டுரை!
————————————————————————-
கி.பி 1047ம் ஆண்டுக்கான கல்வெட்டு செய்தியில் தாமரைப்பாக்கம் கிழார்களை ,அரச பரிவாரத்தினர் கொடுமைப்படுத்தி வரி வசூல் செய்தது பற்றிய செய்தி தாமரைப்பாக்கம் அக்னீசுவரர் கோவில் கருவறை கல்வெட்டு செய்தியில் பதிவாகியிருந்தது.
ஆதாரம்: தாமரைப்பாக்கம் கல்வெட்டுக்கள் , கல்வெட்டு எண் 8/1998 ,பக்கம் எண் 13
சாதிய மனப்பான்மை மட்டுமே மேலோங்கி ,உண்மையை திரித்து வெற்று புகழ் அடைய விரும்பிய சிலர் இக்கல்வெட்டு செய்தியினை திருத்தி தாங்கள் தான் இந்த கல்வெட்டு செய்தி குறிப்பிடும் அரசபரிவாரத்தினர் என்றும் தாங்கள் தான் வெள்ளாளர்களை கொடுமைப்படுத்தினோம் என்று சொல்லி தாங்கள் வெள்ளாளர்களுக்கு மேலான அதிகாரத்தை/ சமூக நிலையை உடையவர்கள் என்று பொய்யாக நிறுவ முயன்றுள்ளார்கள்.
ஆனால் உண்மை வேறானது என்பதை இக்கட்டுரையை தொடர்ந்து படித்தால் புரிந்துகொள்ள முடியும்.
முதலில் இக்கல்வெட்டு குறிப்பிடும் பரிவாரத்தினர் யார் என்பதையும் ,கொடுமைக்குள்ளான தாமரைப்பாக்கம் கிழார் யார் என்பதையும் புரிந்துகொண்டால் நிறைய விசயங்கள் விளங்கும்.
ஏற்கனவெ கூறியபடி கல்வெட்டு செய்தியை பொய்யாக திரித்து பேசும் சிலர் இக்கல்வெட்டில் குறிப்பிடும் அரச பரிவாரத்தினர் , பிரிதி கங்கரையரின் பரிவாரத்தினர் என்று வரலாற்றை முதலில் திரித்துள்ளனர்.
ஆனால் இக்கல்வெட்டு குறிப்பிடும் பரிவாரத்தார் சோழர் அரசர்களின் பரிவாரத்தாரேயன்றி ,பிரிதி கங்கரையரின் பரிவாரத்தார் அல்ல. அதை விளக்குவோம்.
பிரிதி கங்கரையர்கள் சோழர்களுக்கு அடங்கிய சிற்றசர்களாக இன்றைய சென்னையை ஒட்டிய வட தமிழகத்தின் சில பகுதிகளை ஆண்டுள்ளனர்.
குறிப்பிட்ட தாமரைப்பாக்கம் பகுதியில் சோழர்கள் தாங்கள் நேரடியாக கல்வெட்டுக்களை வெளியிடும் போது தங்களின் நீண்ட மெய்கீர்த்தியை சொல்லி கல்வெட்டு வெளியிட்டுள்ளனர்.
(பார்க்க இணைப்பு 1,2,3,4)
குறிப்பிட்ட இந்த கல்வெட்டில் “திங்களேர் தரு வெண்குடைக்கீழ் நிலமகள் நிலவ” என்று தொடங்கும் மெய்கீர்த்தி 1 முதல் 10 வரையான நீண்ட வரிகளில் இம்மெய்கீர்த்தி நீண்டு வருகின்றது(பார்க்க இணைப்பு 1,2) இந்த மெய்கீர்த்தி (கி.பி. 1018 – 1054) வரை ஆட்சி செய்த முதலாம் இராதிஇராசன் எனும் சோழ மன்னனுடைய மெய்கீர்த்தியாகும்.
அதே நேரம் இதே தாமரைப்பாக்கம் பகுதியில் சோழ மன்னனுக்கு அடங்கிய சிற்றரசனாக இருந்த பிரிதி கங்கரையரின் கல்வெட்டுக்கள் சோழரின் ஆட்சியாண்டை மட்டும் குறிப்பிட்டு கல்வெட்டு செய்தியை காட்டுகின்றது. (பார்க்க இணைப்பு 5)
ஆதாரம்: ஆதாரம்: தாமரைப்பாக்கம் கல்வெட்டுக்கள் , கல்வெட்டு எண் 16/1998 ,பக்கம் எண் 32
ஆகவே தாமரைப்பாகம் கல்வெட்டுக்கள் குறிப்பிடும் அரச பரிவாரத்தினர் சோழ அரச பரிவாரத்தினரேயன்றி, பிரிதி கங்கரையரின் அரச பரிவாரத்தினர் அல்லர்.
அடுத்து வரிக்கொடுமைக்குள்ளான கிழார்கள் லும் யார் என்று பார்ப்போம். ஏனென்றால் பல்வேறு சாதியினை சேர்ந்தவர்களுகளும் கிழார் என்று குறிப்பிடப்படுவதால் தாமரைப்பாக்கம் கிழார் யார் என்பதை உறுதி செய்துகொள்ளல் அவசியாகும்.
கல்வெட்டு எண் 8/1998 குறிப்பிடப்படும் தாமரைப்பாக்கம் ஊரவர் சார்பாக கையெழுத்திட்டவர்களில் வரும்
தாமரைப்பாக்கம் கிழார் சூற்றியாடவல்லான் , அத்திமல்லன் என்பவர்கள்
அதே காலத்தில் அதே தாமரைப்பாக்கத்தில் உள்ள “ஶ்ரீமத் பூதேவி புத்ராநாம் சாதூர்வர்ண” என்று வெள்ளார்களின் மெய்கீர்த்தியோடு துவங்கும் மற்றொரு கல்வெட்டு செய்தியில்
(கல்வெட்டு எண் 29/1998,தாமரைப்பாக்கம் கல்வெட்டுக்கள்)
தாமரைப்பாக்கம் கிழார் சூற்றியாடவல்லான் என்றும்
சேக்கிழான் அத்திமல்லன் சீராளன்” என்றும்
வெள்ளாளர்களின் பெயர் வரிசையில் குறிப்பிடப்பட்டு கையொப்பம்(எழுத்து) இட்டுள்ளார்கள்.
ஆகவே சோழ பரிவாரத்தாரால் வதைபட்ட தாமரைப்பாக்கம் ஊரவர் ,கிழார்கள் என்பவர்கள் வெள்ளாளர்கள் என்பதை உறுதி செய்துகொள்கிறோம்.
(பார்க்க: இணைப்பு 6,7)
வதைத்த அரச பரிவாரத்தினர் சோழர்களின் அரசபரிவாத்தார் என்பதையும் விளக்கியாயிற்று!
வதைபட்ட தாமரைப்பாக்கம் ஊரார் , தாமரைப்பாகம் கிழார்கள் இன்று வெள்ளாளர் என்று அறியப்படும் சாதிகள் என்பதும் விளக்கியாயிற்று!
ஆனால்
அந்த சோழ அரசபரிவாரத்தார்கள் யார்? இந்த கேள்விக்கு பதில் தேடுவது இந்த வரலாற்று தேடலின் முக்கிய பகுதியாகும்!
தஞ்சையின் அத்திவெட்டியில் கிடைத்த கி.பி 1061ம் ஆண்டு கல்வெட்டு செய்தியின் மூலம்
அகம்படி பற்று எனும் அகம்படி இனத்தவரின் படைப்பற்று இருந்ததையும் ,அந்த அகம்படி பற்று வீரர்கள் தாங்களுக்கு ஒதுக்கப்பட்ட வரிகளை தவிர வேறு வரிகளை வாங்க கூடாது என்றும் அதை மீறி வாங்குபவர்கள் தன் வம்சத்தவர்கள் இல்லை என்று அப்படைப்பற்றின் தலைவன் சோழகங்கன் சூளுரைப்பதன் மூலம் அகம்படி பற்று என்பது அகம்படி இனத்தவர்கள் ஒரே சாதியை சேர்ந்த குழுவினர் என்பதும் , இவர்கள் சோழர்களின் படைப்பிரிவில் வரி வசூல் செய்யும் பணியையும் இணைத்தே செய்துவந்தனர் சென்பதையும் அறிய முடிகின்றது.
ஆதாரம்: அத்திவெட்டி கல்வெட்டு, ஆவணம் இதழ் 29 , பக்கம் எண் 68
(பார்க்க: இணைப்பு 8 )
நிலைப்படையினராகிய அகம்படியர்கள் வரிவசூல் செய்து வந்ததை இலங்கையில் கிடைக்கும் சான்றுகள் மூலமும் உறுதி செய்துகொள்ள முடிகின்றது.
ஏழாம் புவனேகபாகு மன்னரின் காலத்தில் இருந்த உயரடுக்கு போர்வீரர் ( Elite Tropps in war) என்று குறிக்கப்படும் அகம்படியினரிடம்
நெட்டி அகம்படி, இராஜ அகம்படி, மூலக(முகுகல) என்ற பெயரில் அகம்படி படைபிரிவினர் இருந்தது தெரிகின்றது.
இதில் அகம்படியர்களின் மூலக(முகுகல) பிரிவில் இருந்தவர்கள் விவசாய (நில) வரிகளை வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததை கூறுகின்றது.
ஆதார நூல்: Disconnected Empires பக்கம் எண் 162 ஆசிரியர் Zoltan Biedermann
(பார்க்க: இணைப்பு 9 )
மேலும் கி.பி 13ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தம்பதெனி அஸ்ன(Dambadeni asna ) எனும் சிங்கள நூல் அகம்படியர்களில் நெட்டி மற்றும் மூலக எனும் படைப்பிரிவு இருந்ததை குறிப்பிடுகின்றது.
(பார்க்க: இணைப்பு 10 )
மேலும்
சோழர்கள் படையில் தங்கள் உறவினர்களை கொண்டு அமைக்கப்பட்ட அகப்பரிவாரத்தார் என்று அழைக்கப்பட்டவர்கள் இருந்தார்கள் . இவர்கள் பின்னாட்களில் பாண்டிய மன்னர்களிடமும் பணிபுரிந்துள்ளனர்.
தொல்லியல் அறிஞர் திருமலை தனது pandiyan townships என்ற நூலின் 191ம் பக்கத்தில்
அகப்பரிவாரம் என்பது அகம்படியரை குறிக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் (பார்க்க இணைப்பு : 11 )
அதே போல் எட்கர் தர்ஸ்டன் எழுதிய ” தென் இந்திய குலங்களும் குடிகளும்” என்ற நூலில் பரிவாரத்தார் என்பவர்கள் இன்றைய அகமுடையார் சாதியின் பிரிவாக உள்ளது என்று குறிப்பிடுகிறார்.
பார்க்க இணைப்பு : 12
ஆகவே தாமரைப்பாகம் கல்வெட்டில் வரி வசூல் செய்த பரிவாரத்தார் என்பவர்கள் சோழர்களின் பரிவாரத்தார் என்பதும் அவர்கள் அகம்படியர் சாதியை சேர்ந்தவர்கள் என்பதும் விளங்கும்.
இருப்பினும் இதை இன்னும் ஒரு சில சான்றுகள் கொண்டு விளக்குவோம்.
பரிவாரத்தார் போல் கோயிற்றமன் என்ற பெயரில் சோழர்களின் உறவினர்கள் படைவீரர்களாக இருந்து வரிகளை கண்டிப்புடன் வசூல் செய்ததை பல்வேறு கல்வெட்டுக்கள் எடுத்துக்காட்டுகின்றன.
கோயிற்றமர் யார் என்ற பெயரில் பல்வேறு செய்திகளை விரிவாக பேச இருக்கின்றபடியால் இக்கட்டுரைக்கு
உதாரணத்திற்கு ஒன்றிரன்டு கல்வெட்டுக்களை மட்டும் பார்ப்போம்.
சோழர்களின் கல்வெட்டுக்களில் தொடர்ந்து காணப்படும் சோழர்களின் உறவினர்களான கோயிற்றமர் பின்னாட்களில்
சோழர்களிடமிருந்து பிரிந்து பாண்டியர்களிடமும் பணியாற்றியுள்ளனர்.
சோழர்களின் உறவினர்களை குறிக்க பயன்பட்ட கோயிற்றமர்/கோயிற்றமம் என்ற வார்த்தைகள் பாண்டியர்களின் கல்வெட்டுக்களில் இதன் பின்னாளில் பயன்பட்டு வருவதை காண்கின்றோம்.
புதுக்கோட்டை பகுதியில் கிடைத்த கி.பி 13ம் நூற்றாண்டு கல்வெட்டு செய்தியில்
ஊராரை கோயிற்றமர் வரி கொடுக்க சொல்லி கொடுமைப்படுத்தியதை ” ஊராரை கோமுற்றமால் தகிக்க” என்ற வரிகளை கொண்டு உணர முடிகின்றது.
ஆதாரம்: புதுக்கோட்டை கல்வெட்டுக்கள் ,எண் 301
பார்க்க இணைப்பு : 13
ஆகவே இவ்வாறு கோயிற்றமர்(கோமுற்றவர்) வரிக்கொடுமை தாங்கமாட்டாது ஊரார் நிலங்களை விற்று வரியை செழுத்தியதை மேலே குறிப்பிட்ட கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
இதேபோலவே தான் தாமரைப்பாக்கம் கல்வெட்டு செய்தியும் குறிப்பிடுகின்றது என்பதனை இங்கு நினைவுபடுத்த வேண்டும்.
அதே போல
புதுக்கோட்டையில் கிடைத்த குலசேகர பாண்டிய மன்னர் காலத்து கல்வெட்டு செய்தியில்
“கோமுற்றவர் எங்களை பண்ணாத விதனங்கள் பண்ணுகையில்” என்று கோயிற்றமர் செவ்வலூர் ஊராரை வரிகொடுக்க சொல்லி வேதனை செய்ததையும் அதன் பொருட்டு அதன் பொருட்டு ஊரார் நிலத்தை விற்று வரிசெழுத்திய செய்தியும் குறிக்கப்படுகின்றது.
ஆதாரம்: புதுக்கோட்டை கல்வெட்டுக்கள் ,எண் 401
பார்க்க இணைப்பு : 14
சரி! யார் இந்த கோயிற்றமர் என்று நாம் தேடினால் அதற்கும் அகம்படியர்களே என்பது பதிலாக கிடைக்கும்.
அதாவது கோயிற்றமர் (கோயில்+அமர் =கோயில் எனும் அரண்மனையில் வாழ்பவர்/அரண்மனையை சேர்ந்தவர்) என்பதும் அகம்படியர் (அகம்படி+ஆர் =அகம்படி எனும் அரண்மனையை சேர்ந்தவர்) என்பதும் ஒரே பொருள் உணர்த்துவன என்பதுவே இதனை விளக்கும் என்றாலும் இதற்கு மற்றொருமொரு ஆதாரமும் உள்ளது. இன்றைய அகமுடையார்களை முன்னர் குறிக்க பயன்பட்ட ஒரே பொருளை தருகின்ற பல பெயர்களில் கோயிற்றமர் என்பதுவும் ஒன்றாகும்.
சோழர் கால கல்வெட்டுக்களில் முதலில் காணப்படுவர்களாகவும் பின்னர் பாண்டியர் கால கல்வெட்டுக்களில் காணப்படும் ஏழகத்தார் என்பவர்கள் அகம்படிய இனத்தவர்கள் என்பது வரலாற்றறிஞர்கள் ஏற்றுக்கொண்ட செய்தியாகும்.
சோழர்களின் வணிகப்பாதுகாப்பு படையினரான
ஏழகப்படை அல்லது ஏழகத்தார் என்பவர்கள் சோழர்களின் புகார் நகரத்தில் வசித்த நகரத்தார் எனும் நாட்டுக்கோட்டை செட்டியார்களுக்கு பாதுகாவல் வழங்கியவர்கள் ஆவர்.
ஏழகத்தார் என்பவர்கள் இன்றும் நாட்டுக்கோட்டை பகுதியில் வசிக்கும் அகம்படியர் இனத்தவர்கள் என்பதை நாட்டுக்கோட்டை செட்டியார்களே வெளிப்படுத்தியுள்ளனர்.
உதாரணத்திற்கு
நாட்டுக்கோட்டை செட்டியாரான திரு.ச.கணேசன் என்பவர் “ஏழகப்படை” என்ற தலைப்பில் கலைமகள் என்ற இதழில் வெளியான கட்டுரையின் 45ம் பக்கத்தில்
ஏழகப்படை என்பவர்கள் அகம்படியர்கள் என்று கூறியதை கவனிக்கலாம்.
பார்க்க இணைப்பு : 15,16
இந்த ஏழகத்தார் என்பவர்கள் கோயிற்றமர் என்ற பெயரில் வரி வசூல் செய்ததை “ஏழகத்தார் கோயிற்றமத்திலும்” என்று புதுக்கோட்டை பகுதியில் கிடைத்த பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியனின் கல்வெட்டு செய்தி மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது.
ஆதாரம்: புதுக்கோட்டை கல்வெட்டுக்கள் ,எண் 259
பார்க்க இணைப்பு : 17
இவ்வாறு பல்வேறு கல்வெட்டு செய்திகள் மூலம் தாமரைப்பாக்கம் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் சோழர்களின் பரிவாரத்தார் ,அகம்படியர் சாதியினர் என்பதை அறிந்துகொள்ள முடியும்.
மேலதிக செய்தி
அகம்படியினர் எதற்காக வரி வசூல் பணியில் ஈடுபட்டனர் என்பது வரலாற்றை ஆழமாக ஆய்வு செய்கின்ற போது அறிந்துகொள்ள முடிகின்றது.
போர்காலங்களில் மட்டும் அழைக்கப்படும் குடிப்படை ,துணைப்பட போன்று அல்லாது நிலைப்படை என்பது நிரந்தரமாக இருக்கும் படையாகும். நிலையாக இருக்கும் படையினருக்கு உணவு,ஊதியம் கொடுத்து பேண வேண்டி இருப்பதால் படைப்பயிற்சியோடு மற்ற நேரங்களில் நாட்டுபணிகளையும் செய்ய பயன்படுத்துவது வழமையாக இருந்துள்ளது.
போர் பயிற்சியோடு , ஊர் பாதுகாப்பு, கோவில் பாதுகாப்பு, வரி வசூல் போன்ற பணிகளையும் நிலைப்படையினர் செய்தனர்.
ஆதாரம்: பாண்டியர் வரலாறு ,ஆசிரியர் இராமன்
பார்க்க இணைப்பு : 18
தாமரைப்பாக்கம் கல்வெட்டுக்களில் பயின்று வரும் சூற்றியடியான் என்ற பெயரும் அவர்கள் வழங்கிய அடிமைக்காசு என்பதுவும் பல்வேறு செய்திகளை வெளிப்படுத்துகிறது என்றாலும் அதை விரிவாக இப்போது,இங்கு பேச வேண்டிய அவசியமில்லை என்பதால் விடுகின்றோம்.
அகம்படியர்கள் வரி வசூல் செய்தற்கு இன்னும் பல சான்றுகள் உள்ளன,அதே போல்
பேசுவதற்கு இன்னும் நிறைய தகவல்களை ஆராய்ந்துள்ளோம்! ஆனால் நேரத்தின் அருமை கருதி இக்கட்டுரையை இத்துடன் நிறைவு செய்கின்றோம்.
மற்றொரு கட்டுரையில் சந்திப்போம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்