First
சோழர்கள் யார்? – சோழர்களின் கொடியின் நிறத்தின் அடையாளத்தின் வழியே
—————————————————–
சோழர்கள் தங்கள் கொடியில் புலிச்சின்னத்தை கொண்டிருந்தார்கள் என்பது நாம் அறிந்ததே. ஆனால் சோழர்களின் கொடியாக இன்று அறியப்படும் கொடி சிவப்பு வண்ண பின்புலத்தில் , மஞ்சல் நிறத்தில் புலி உருவத்தை கொண்டு அறியப்படுகின்றது.
பார்க்க : படம் 1
இந்த கொடி சோழர்களின் கொடி என்று கூறப்பட்டாலும் இதே நிறத்தில் சோழர்கள் தங்கள் கொடியில் பயன்படுத்தினார்களா என்பது ஆய்வுக்குரியது.
இருப்பினும் இந்த சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களை கொண்ட கொடி அகமுடையார்களுக்கே உரித்தானது என்பதுவே வரலாறு நமக்கு காட்டித்தரும் உண்மையாகும்.
ஆம். சோழர்களின் சூரிய குலம் என்று சிங்கள இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள அகம்படியர்களால் உருவாக்கப்பட்ட கம்பளை மற்றும் கண்டி இராச்சியங்களின் கொடியும் இதே சிவப்பு பின்புலத்திலும் , மஞ்சள் நிறத்தில் மிருகத்தின் உருவமும் காட்டப்பட்டுள்ளது. என்ன ஒன்று … பெரும்பான்மை சிங்கள பகுதியை ஆட்சி செய்ததாலும் , அங்குள்ள சிங்கள பெண்களை மணந்ததினாலும் , புத்த மதத்திற்கு மாறியதாலும் புலி உருவத்திற்கு பதிலாக கம்பளை, கண்டி அரசுகள் சிங்களவரின் அடையாளமான சிங்க உருவத்தை வரைந்து கொண்டனர் .
ஆகவே இந்த சிவப்பு பின்புலமும் , மஞ்சள் அடையாளமும் இணைந்த கொடி அகம்படியர்களின் கொடி என்பதை அறிந்துகொள்ளலாம்.
இருப்பினும் இதற்கு மேலும் சான்று உள்ளது. அகம்படியர்கள் தங்கள் இரத்தத்தை கொடுத்து போரிடுவதால் பரிவாரத்தாராக இருந்த அகம்படியர்கள் சிவப்பு நிற தலைப்பாகையை அணிந்திருந்ததை சிலர் தெரிவித்திருப்பதை காண்கின்றோம்
நமது அகமுடையார் ஒற்றுமை வெப்சைட்டில் அகம்படியர் குறித்து பதிவை கண்ட “திசா” என்ற பெயரில் கமேண்ட் செய்த சிங்களர் ஒருவர் தான் ஒரு அகம்படியர் மூதாதைகளிடமிருந்து வந்த சிங்களன் என்றும் போர்வீரர்களாகவும், அரச பாதுகாவலர்களாகவும் தமிழகத்தில் இருந்து இலங்கை வந்த அகம்படியர்கள் தங்கள் அதிவீர தகுதியை பெற்றிருந்தனர் என்றும் அவர்கள் மற்ற வீரர்களில் இருந்து வேறுபடுத்தி காட்ட சிவப்பு தலைப்பாகையை அணிந்திருந்தார்கள் என்றும் போர்ச்சிக்கீசியரிடிடமிருந்து சிங்கள கிராமங்களை பாதுகாத்த தகவல்களையும் குறிப்பிட்டார்.
அதே போல் பரிவாரத்தார்களாகிய அகம்படியர்கள் சிவப்பு தலைப்பாகை அணிந்திருந்ததாக ஒரு நாவலில் குறிப்பு வருகின்றது.
இருப்பினும் கமேண்டை,நாவலை ஆதாரமாக நாங்கள் காட்டுவதில்லை என்பதால் இது குறித்து முதன்மை தரவுகளை தேடிக்கொண்டுள்ளோம். கிடைத்தவுடன் வெளியிடுவோம்.
எது எப்படி இருந்தாலும் சிவப்பு ,மஞ்சள் கொடி என்பது அகமுடையார்களின் கொடி அடையாளமாக இருந்துள்ளது என்பது தெரிகிறது. இப்படி ஆராய வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன. தொடர்ந்து பார்ப்போம்.
சற்று மேலதிக தகவல்கள்
——————–
கண்டி ராச்சியம் என்பது தமிழை தாய்மொழியாக கொண்ட அகம்படியர் அல்லது இன்று அகமுடையார் என்று அறியப்படும் சாதியினரால் தோற்றுவிக்கப்பட்ட அரசு ஆகும்.
இதை இலங்கையின் கி.பி 1400 காலத்திய மடவெளை கல்வெட்டு விளக்குகிறது. சோழர் யார் என்ற காணொளியின் 1 மணி நேரத்திற்கு பின்பான நேரத்தில் விளக்கியுள்ளோம்.
இதை பார்க்க விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கில் பார்க்கலாம்
மேலும் 15ம் நூற்றாண்டு சிங்கள ஆவண நூல்களான ராஜவலியா போன்றவை இந்த அகம்படியர்களே கம்பளை மற்றும் கோட்டை இராஜ்ஜியங்களை ஸ்தாபித்தார்கள் என்று கூறுவதோடு இவர்கள் சோழர்களின் சூரிய குலத்தவர்கள் என்ற தகவலையும் தருகின்றது.
இதற்கும் மேலே நான் கொடுத்த வீடியோவில் சான்று உள்ளது.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்