First
பொன்னியின் செல்வன் 1-திரைப்படமாக்குதலில் சொதப்பல்கள்
————————————————
படத்தின் வெற்றியை பாதிக்கும் என்பதால் நான் இதை சொல்ல ஆசைப்படவில்லை .இருந்தாலும் ஆதங்கத்தை சொல்லியாக வேண்டும்.
முதலில் இந்த கதை சோழர்களை பற்றி பேசுகின்றதா அல்லது வந்தியத்தேவனை மட்டும் பேசுகிறதா என்று தெரியவில்லை. படம் முழுக்க வந்தியத்தேவனாக நடித்த கார்த்தியே கிட்டத்தட்ட எல்லா பிரேம்களிலும் வருகிறார்.
அடுத்து வரலாறு படங்கள் என்றாலே அதில் முக்கியமானதே போர்களக்காட்சிகள் தான்! ஆனால் இத்திரைப்படத்தில் மருந்துக்குகூட போர்கள காட்சிகள் இல்லை. அதுவும் ஆதித்த கரிகாலனின் கோட்டை முற்றுகையை காட்டும் போது கோட்டை கதவை சோழ வீரர்கள் நொடியில் இடிப்பது போலவும், எதிரி நாட்டு வீரர்கள் கதவை உடைத்தவுடன் தெறித்து ஓடுவது போலவும் படம் போகிறது. போர்கள சன்டை எங்கே? ஒருவேளை நான் பார்த்த திரையரங்கில் இந்த காட்சியை திரைப்படத்தின் நீளத்தை கருதி கட் செய்துவிட்டார்களா? ஆனால் இப்போது பழைய முறை போல் பிலிம் போட்டு ஓட்டும் முறை இல்லையே! படம் பார்த்தவர்கள் சொல்லுங்கள்!
இலங்கையில் இருக்கும் அருள்மொழி வர்மன் என்கிற இராஜ இராஜனை கைது செய்ய வெறும் 30 சோழ வீரர்கள் மட்டும் செல்வதாக காட்சி. சரி பரவாயில்லை தனது தந்தையின் கட்டளையை பார்த்த கைது செய்ய வந்தவன் ஒர்வனாக இருந்தாலும் அவன் உடனே உடன்பட்டு அவனோடு செல்வான் என்றாலும்
எல்லா பக்கமும் ஆயிரக்கணக்கான எதிர்கள் சூழ்ந்திருக்கும் நிலையில் சோழ இளவரசன் ஒருவனை வெறும் 30 பேர் பாதுகாப்பில் எந்த கிறுக்கனாவது அனுப்புவானா?
சோழர்களை மையப்படுத்தி கதையும் இல்லை… சோழ இளவரசர்களை நாயகர்களாக காட்ட முயற்சி செய்யவில்லை என்பதை தாண்டி சோழர்களை வில்லன் போல் காட்டியுள்ளனர்.
ஒரு காட்சியில் இலங்கையில் இருக்கும் போது , வந்தியத்தேவன் தலையில் இராஜ இராஜன் தனது இளவரசரின் தலைப்பாகை /கீரிடத்தை சூட்டுவான்.
அதன் பின்னால் எதிரிகள் வந்தியத்தேவனை இளவரசர் என்று கொல்வதற்காக துரத்துவார்கள். சோழரை வில்லத்தனமாக காட்ட ஓர் கற்பனை முயற்சி
பாண்டியன் போர்களத்தை விட்டு ஓடி எங்கோ ஓடி மறைந்துகொள்கிறான். அவனை
ஆதித்த கரிகாலன் தேடி சென்று குடிசை ஒன்றில் காயம்பட்டு பதுங்கி இருக்கும் பாண்டியனை ஒரு பெண் தடுத்தும் கேளாமல் தலையை கொய்யும் ஒர் வில்லன் போல காட்டியுள்ளனர் ஆனால் காட்சியில் தலையோ ,தலையில்லாத முண்டத்தையோ கூட காட்டவில்லை என்பது மற்றோரு கேலிக்கூத்து.
ஒருவேளை இந்த எல்லா பிரச்சனைகளும் பொன்னியின் செல்வன் என்ற நாவலின் ஆசிரியர் தனது கற்பனை குதிரையை லாஜிக் இல்லாமல் தறிக்கேட்டு ஓடவிட்டதை பின்பற்றி அப்படியே படம் எடுத்து விட்டார்களா?
அப்படி என்றாலும் போர்களகாட்சியை பிரம்மாண்டமாக அமைத்திருக்க வேண்டாமா இல்லையா?
இப்படிப்பட்ட சில சொதப்பல்கள் படத்தில் இருக்கவே செய்கின்றன. இருந்தாலும் இது வரலாற்று படங்களை தமிழ் இயக்குநர்கள் தயாரிக்க ஊக்கமளிக்கும் என்பதால் நிச்சயம் படத்தை திரையரங்கு சென்று ஒருமுறையேனும் பாருங்கள்!
படத்தில் நல்ல விசயம் என்னவென்றால் ஆடை ,ஆபரணங்கள், செட் வடிவமைப்பு போன்றவை தான். நிச்சயமாக இதற்கு ஒரு கைதட்டல் கொடுக்கலாம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்