First
தனித்தமிழர் சேனை இயக்கத்தின் நிறுவனரும் அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்த திரு.நகைமுகன் ஐயா அவர்கள் இன்று ( 14.03.2016)காலை காலமானார். தனித்தமிழர் என்ற இயக்கத்தின் வாயிலாக தமிழ் உணர்வாளர்களுடனும் தமிழ் தேசியம் குறித்தும் வெகுவாக களப்பணியாற்றியவர் திரு.நகைமுகன் அவர்கள். அன்னாரின் மறைவு தமிழ் தேசிய அரசியலுக்கும் ,அகமுடையார் பேரினத்திற்கும் பேரிழப்பாகும்.இவர் திரு.அரப்பா தமிழன் அவர்களின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.அன்னரை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்திற்கு அகமுடையார் ஒற்றுமை இணையதளத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் இறுதி சடங்கு நாளை(15-02-2016) அன்று அவர்கள் சொந்த ஊரில் நடைபெறுகின்றது.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்