வாணர் அரசமரபும் -மறவர் என்ற குழப்பமும்
————————————
வாணர் அரசமரபு தமிழகத்தின் நீண்ட காலம் ஆட்சி செழுத்திய மரபு என்பது மட்டுமல்ல இப்போதும் இதன் நேரடி வாரிசுகள் இன்றும் புகழோடு வாழ்கின்ற தொடர்கின்ற பெருமையையும் உடையது.
அதுமட்டுமல்ல தமிழகத்தின் மிகவும் தொன்மையான சேரர்கள்,அதியர்கள், சோழர்கள்,தொண்டைமான்கள் இன்னும் பல அரசமரபுக்கெல்லாம் தாய் அரசமரபு என்ற பெருமைக்குரியது இந்த வாணர் அரச மரபு ஆகும்.
இத்தகைய புகழ்மிக்க வாணர் அரச மரபை சேர்ந்தவர்களே இன்றைய அகமுடையார் சமூகத்தவர் என்பதற்கு ஒன்றல்ல இரண்டல்ல 100க்கும் மேற்பட்ட ஆதாரங்கள் உள்ளன என்பதோடு 3000 வருடங்களுக்கு முன்பு தொடங்கி இப்போது வரை தொடர்ச்சியான ஆதாரங்கள் உள்ளன.
இதுகுறித்து ஏற்கனவே வெளியிட்டுள்ள ஆதாரங்களை அகமுடையார் ஒற்றுமை வெப்சைட்டில் கீழ்கண்ட லிங்கில் சென்று பார்க்கலாம்.
https://www.agamudayarotrumai.com/t/mavali-vanar-maveli-vanathirayar/
சரி இப்போது இச்சிறு கட்டுரையின் விசயத்திற்கு வருவோம்.
இத்தகைய புகழ்வாய்ந்த வாண அரசமரபினர் சில இடங்களில் தங்கள் பெயருக்கு முன்னாலும் ,சில இடங்களில் தங்கள் பெயருக்கு பின்னாலும் மறவர் என்ற பதத்தை பயன்படுத்தியுள்ளனர். கல்வெட்டில் வரும் இந்த மறவர் என்ற வார்த்தையை பார்த்த வாணர் மறவர் சமூகத்தவர் என்பது போல எழுத ஆரம்பித்தனர்.
உதாரணத்திற்கு
மறவன் நரசிங்க பன்மன் எனும் ராஜ ராஜ வாணகோவரையன்
இவன் வாணக்கோப்பாடி நாட்டில் அரசாண்ட மன்னன் ஆவான். இவன் முதலாம் இராஜ இராஜ சோழ மன்னனுக்கு அடங்கிய குறுநில அரசனாகவும் படைத்தலைவனாகவும் விளங்கியுள்ளான்.
சோழருக்கு படைத்தலைவனாகவும் விளங்கியதாலும் வீரனாகவும் திகழ்ந்த காரணத்தால் இவன் பெயருக்கு முன்னால் மறவன் என்ற அடைமொழி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கருத்தை எப்படி உறுதி செய்வது?
வாணர் அரசமரபினரை குறிக்க மறவன் என்பது மட்டுமல்ல சில இடங்களில் மல்லன் என்ற வார்த்தையும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
உதாரணத்திற்கு
கி.பி 3ம் நூற்றாண்டு கல்வெட்டு செய்தியில்
மல்லதேவன் நந்திபன்மன் எனும் வாணர் குல அரசன் கர்நாடகாவில் உள்ள முடியனூர் எனும் ஊரை 25 பிராமணர்களுக்கு தானமாக வழங்கிய செய்தியை குறிப்பிடுகிறது.
ஆதாரம்: Journal of Indian history, Volume 45 மற்றும் எபிகிராபிகா கர்நாடிகா பாகம் 10, முகல்பாகல் கல்வெட்டுக்கள் 157
ராஜ ராஜ சோழன் காலத்திய கல்வெட்டு செய்தியில்
“சேம்பூர் மணிநாகன் இடர் நீக்கி மல்லனான வாணராயன்” என்கிற வாண அரசமரபினன் மல்லன் என்ற அடைமொழியுடன் குறிப்பிடப்படுகிறான்.
ஆதாரம்: தென் இந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 3, கல்வெட்டு எண் 1135
இன்றைய வட ஆற்காடு மாவட்டம் வீரணம் எனும் ஊரில் கிடைத்த 9ம் நூற்றாண்டு நடுகல் செய்தியில் வாணர் குலத்தை சேர்ந்த
“நந்தி பெருமானார் மகன் அக்கழி மல்லன்” சாத்தனூரை ஆண்டு வந்த செய்தி குறிப்பிடப்படுகிறது.
ஆதாரம்: செங்கம் நடுகற்கள் ,கல்வெட்டு எண் 1971/47
இதன் மூலம் மறவன் என்ற வார்த்தையை போலவே வீரன் என்ற பொருள்படும் மல்லன் சமஸ்கிருத வார்த்தையும் வாணர் குலத்தவர்களின் வீரத்தை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது புரியும். ஒருவேளை சில வாணர் கல்வெட்டுக்களில் வரும் மறவன் என்பதை சாதியாக கொண்டால் வாணர் கல்வெட்டுக்களில் வரும் மல்லன் என்பதையும் சாதியாக கொள்ள வேண்டும். அது முடியுமா ? ஆகவே மல்லன்,மறவன் இரண்டுமே வாணர் அரசகுலத்தவர்களை வீரத்தை குறிக்க பயன்பட்டவைகள் என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.
குறிப்பு:
வேலைப்பளு காரணமாக இக்கட்டுரையை வெகு சுருக்கமாக எழுதியுள்ளோம் ஆகவே மேலும் ஆதாரங்கள் இருந்தும் அதிக ஆதாரங்களை இப்பதிவில் இணைக்கவில்லை.
சொல்வதற்கு நிறைய செய்திகள் உள்ளன ஆனால் வேளைபளு காரணமாக அவற்றையெல்லாம் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. இதற்கிடையில் அகமுடையார் ஒற்றுமை இதழ் கொண்டு வரும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்