அஇஅதிமுக- மருது சேனை கூட்டணி குறித்து தினமலர் செய்தி ———————- தமிழ…

Spread the love

அஇஅதிமுக- மருது சேனை கூட்டணி குறித்து தினமலர் செய்தி
———————-
தமிழகத்தின் முண்ணனி நாளிதழ்களில் ஒன்றான தினமலர் நாளிதழில் “பழனிச்சாமியின் மிரட்டும் மெகா கூட்டணி” என்ற தலைப்பில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களின் தேர்தல் கூட்டணி குறித்த செய்தி/கட்டுரை வெளிவந்துள்ளது.

அதில் அஇஅதிமுக கட்சிக்கு ஆதரவளிக்கும் கட்சியின் பட்டியலில் அண்ணண் ஆதிநாராயணன் அகமுடையார் அவர்களின் மருதுசேனை அமைப்பு குறித்து செய்தி வெளியாகி உள்ளது.

இச்செய்தி தினமலர் இதழின் சென்னை,மதுரை,கோயமுத்தூர்,பாண்டிச்சேரி பதிப்புகளில் வெளியாகி உள்ளது.

கூட்டணி குறித்து வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம் ஆனால் அகமுடையாராக இருந்து தனி இயக்கம் துவங்கி பல போராட்டங்களுக்கு பின் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளின் கூட்டணியில் இடம் பெற்று அது தினமலர் போன்ற முக்கிய நாளிதழ் செய்தியில் முக்கியத்துவம் பெற்றமைக்கு மருதுசேனை அமைப்பிற்கும் அதன் உறுப்பினர்களுக்கும் நாம் வாழ்த்துக்களை தெரிவிக்கவே வேண்டும்!

மருதுசேனையும் அதனை உருவாக்கிய அண்ணன் ஆதி நாராயணன் அவர்களும் அகமுடையாரின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்று சிகரத்தை தொட்டிருக்க வேண்டியது ஆனால் சில சில விசயங்கள் அது தன் இலக்கை எட்ட விடாமல் செய்கின்றது.

இருப்பினும் நமது சமுதாய அமைப்பை வாழ்த்துவதும்,ஆதரிப்பதும் நமது கடமை! வாழ்க! வளர்க!





இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

  1. மன்னிக்கவும் மருதுசேனை என்ற அமைப்பை எங்கள் பகுதி அகமுடையார்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.நாங்கள் மருதுசேனையை நம்பவில்லை.

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo