First
கொங்கு பாசூர் மடச்செப்பேட்டில் அகம்படியார்கள்,மறவர்கள் மற்றும் பல்வேறு சாதியை சேர்ந்த வேளாளர்கள்
———————————————
புலவர் இராசு என்பவர் எழுதி வெளியிட்ட ” கொங்கு நாட்டு ஆவணங்கள் ” என்ற நூலில் கி.பி 12ம் நூற்றாண்டு காலத்திய “காலிங்கராயன் அணை சேப்பேடு” என்ற பெயரில் செப்பேட்டுச்செய்தி வெளியிடப்பட்டது .அந்த செப்பேட்ட்டில் கீழ்கண்ட செய்தி காணப்படுகின்றது.
காளியண்ண கவுண்டர் எனும் கொங்கு வேளாளர் சாதி பட்டம் வாங்கி என்னனென்ன சாதியார் எந்தெந்த அளவு வரி கொடுக்க வேண்டும் என்று பட்டியல் இடுகிறார்.
சோழிய வேளாளர்,ரெட்டி வேளாளர், வொக்கிலிய வேளாளர் ,பள்ளி வேளாளர்(வன்னியர் சாதி வேளாளர்), ஜெயின வேளாளர்(ஜெயினர்) உள்ளிட்ட வேளாளர் 1 பணமும் ,
பல்வேறு செட்டியார் , செங்குந்தர், சாணார்(நாடார்), செம்படவர் போன்ற அனைத்து சமுதாயங்களும் 1 பணம் கொடுக்கின்றனர்.
அதே வேளை அகம்படியார்கள் திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டார் 3 பணமும் , 300 பாக்கும்,300 வெற்றிலையும் பெண் வீட்டார் இயன்றதை(முடிந்ததை) செய்யலாம் என்று செப்பேட்டு செய்தி காணப்படுகின்றது.
பார்க்க இணைப்பு 1 : ஆதாரம்: நூல் கொங்கு சமுதாய ஆவணங்கள். ஆசிரியர் புலவர்.இராசு பக்கம் எண் 72
அதாவது மற்ற சாதியினர் 1 பணம் கொடுக்க அகம்படியர்கள் 3 மடங்கு பணமும் மேலும் 300 வெற்றிலை மற்றும் பாக்கு கொடுத்துள்ளனர். இது கொங்கு தேசத்தில் அகம்படியர்கள் பெற்றிருந்த உயர்வான இடத்தையும் ,செல்வ வளத்தையும் எடுத்துக்காட்டுகின்றது.
அதேவேளை வரிகொட்டுக்காத சமுதாயங்களும் இருந்துள்ளன.. அதாவது கொசவன்,குறவன் ,மறவன் உள்ளிட்ட சில சாதிகள் வரி கொடுக்க தேவையில்லை என்றும் இவர்கள் பட்டக்காரர் ஏவின ஊழியம்(( சொல்லிய வேலைகளை ) செய்ய வேண்டும் என்று பதிவு செய்துள்ளது.
பார்க்க இணைப்பு 3,4 ஆதாரம் : நூல் கொங்கு சமுதாய ஆவணங்கள். ஆசிரியர் புலவர்.இராசு பக்கம் எண்கள் 68,72
கல்வெட்டு செய்தி வழியாக காணப்படும் விரிவான செய்தி
——————————————–
கொங்கு தேசத்தில் அகம்படியர்கள் இரு பிரிவாக வாழ்ந்த செய்தி வரலாற்றில் பதிவாகியுள்ளது.
ஒன்று பூர்விகமாக அல்லது கி.பி 10ம் நூற்றாண்டு முதலே கொங்கு பகுதியில் வாழ்ந்து வந்த அகம்படியர்கள் இவர்கள் சேலம் வாழக்குட்டபட்டி கல்வெட்டு, கடத்தூர் கல்வெட்டு ,கீழ் முட்டநாட்டு கல்வெட்டு போன்ற பல்வேறு செய்திகள் எடுத்துக்காட்டுகின்றன.
மற்றோன்று தென் மாவட்டத்தில் இருந்த அகம்படியர்கள் 300 முதல் 500 வருடங்களுக்குள் கொங்கு பகுதிக்குள் இடம்பெயர்ந்ததை கொங்கு கணக்கன் கூட்டத்தார் பட்டயம், குறிப்பிட்ட இந்த காளியண்ண கவுண்டர் சாதி பட்டயம் மற்றும் சூலூர்,கோவை இராமநாதபுரம் பகுதிகளில் கிடைக்கும் கல்வெட்டுக்கள் எடுத்துக்காட்டுகின்றன. தென் மாவட்டத்தில் இருந்து கொங்கு பகுதிக்கு சென்ற அகம்படியர்கள் இப்பகுதியில் காணியாட்சி பெற்று வெற்றிலை விவசாயமும் ,வியாபாரமும் செய்து வந்ததால் இவர்களுக்கு வெத்திலக்காரத்தேவர்( வெற்றிலைக்கார தேவர்) என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்துள்ளனர். இவர்களின் வழியினருக்கு இந்த பெயர் இன்று வரை நீடித்து வருகின்றது.
செப்பேட்டின் இறுதியில் ஒப்பந்தத்திற்கு உறுதி அளித்து குறிப்பிட்ட சாதியினர் பிரதிநிதிகள் அல்லது சாதி தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர் (ஒப்பம் அளித்துள்ளனர்)
அகம்படியர் சமூகத்தின் சார்பாக
பெரியதனம் தாறாபுரம்(தாராபுரம்) கையிலாச முகந்தன் ஒப்பிதம்(ஒப்பம்) ,மருதண்ணன் முகந்தன் ஒப்பம் என்ற பெயர்கள் காணப்படுகின்றன.
பார்க்க இணைப்பு 2 : ஆதாரம்: நூல் கொங்கு சமுதாய ஆவணங்கள். ஆசிரியர் புலவர்.இராசு பக்கம் எண் 73
மேலும் செப்பேட்டில் வரும் இரு அகம்படிய தலைவர்களான கையிலாச முகந்தன், மருத்தண்ணன் முகந்தன் என்ற பெயர்களில் உள்ள முகந்தன் என்ற பட்டம் இவர்கள் வைணவ சமயத்தில் ஈடுபாடாக இருந்தார்களோ என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது .
பெரியதனம் என்பது செல்வாக்கு மிக்கவர் என்ற பொருளில் கொங்கு தேசத்தில் வாழ்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டது தெரிகின்றது. இதற்கு ஒரு ஆதாரமாக….
அகமுடையார் அரண் தலைமை ஒருங்கிணைப்பாளர் சோ.பாலமுருகன் அகமுடையார் அவர்களின் அப்பத்தா (தந்தையின் தாயார்) அவர்களின் தகப்பனார் மு.வெங்கடாசலத்தேவர் அவர்கள் பழனி வட்டம், குப்பம்பாளையம் கிராமத்தின் பெரியதனம் என்ற ஆளுமையுடன் இக்கிராமத்தின் அகம்படியர் சாதி தலைவராக இருந்துள்ளார்.
மேலும், சோ.பாலமுருகன் அகமுடையார் அவர்களின் தாயார் வழியில், தாயார் அவர்களின் முப்பாட்டனும், கரூர் மாவட்டம், மேல மாயனூர் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவரும், பழனி பழைய தாலுகா அலுவலகம், நீதிமன்றம், பழைய பாலங்கள், பெரியநாயகி அம்மன் கோயில் பெருவுடையார் கோவில் உள்ளிட்ட பழங் கட்டிடங்களை கட்டியவரும், அரசு ஒப்பந்தகாருமான சுப்பா பிள்ளை என்ற சுப்பா கொத்தனார் அவர்கள், பழனி நகரத்தில் உள்ள மாரியம்மன் கோயில் சுற்றுபுறத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ள ஐந்து ஊர் (பழனி நகரம் , குப்பம் பாளையம், லெட்சுமாபுரம், கரிக்காரன்புதூர், மானூர்) இராஜகுல அகமுடையார்களுக்கு பாத்தியப்பட்ட “அகமுடையார் மடத்தின்” காப்பாளராகவும், பழனி நகர அகமுடையார் சாதியின் பெரியதனம் என்ற ஆளுமையுடன் பழனி நகரத்தின் அகம்படியர் சாதி தலைவராக இருந்துள்ளார்.
இச்செய்திகளும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
மேலும் செப்பேட்டு செய்தியில் பள்ளி வேளாளர்(வன்னியரில் வேளாளார்) ,ரெட்டி சாதி வேளாளர், வொக்கலிக வேளாளர்(கன்னட வொக்கலிக வேளாளர்) போன்ற பலர் வேளாளர் சாதியாக காட்டப்படுகிறார்கள். வேளாளர் என்பது குறிப்பிட்ட சாதிக்குரியது என்பதாக இல்லை என்பது இச்செப்பேட்டு செய்தி மூலம் தெளிவாகிறது.
குறிப்பு
செப்பேட்டின் முழுவரிகளை தொடர்ச்சியாக பார்க்க விரும்புவர்கள் கொங்கு சமுதாய ஆவணங்கள் நூலில் காலிங்கராய அணைப்பட்டையம் தலைப்பில் 68 முதல் 73 வரையிலான பக்கங்களை பார்க்கவும்.
மின் நூல் முகவரி: https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp7juUy&tag=
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்