First
இனிமேல் தான் ஆரம்பம் ஆட்டம் ,,,,,,
இன்றைய(06-11-2023) தினமலர் நாளிதழில்
எடப்பாடி அவர்கள் அகமுடையார் சமுதாயத்திற்கு என்ன செய்தார் என்ற பெரும் கேள்வி நம் முன்னே இருக்கிறது. இருந்தாலும் இனியாவது செய்வார்களா என்று பார்ப்போம்!
எப்படியோ அகமுடையார்களுக்கு பிரதிதித்துவம் கிடைத்தால் சரி!
அகமுடையார்கள் என்பது தனி சாதி! முக்குலத்தோர் என்று மாற்று சமுதாயத்தினருக்கு அகமுடையார்களுக்குரிய வாய்ப்பை அளித்து அகமுடையார்களை ஏமாற்றக்கூடாது!
அகமுடையார்கள் தனி சாதி மட்டுமல்ல தமிழ்நாட்டின் ஆகப்பெரும்பான்மை சாதி! தமிழ்நாட்டின் உள்ள 38 மாவட்டங்களில் ,அகமுடையார்கள் எனும் எங்கள் சாதி 30 மாவட்டங்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க கூடிய அளவில் மிகவும் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றோம்!
எங்களுக்கு எவர் பிரதிதித்துவம் கொடுக்கிறாரோ, எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே அகமுடையார்களான எங்களின் ஓட்டு! அவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் சரி! எவர் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே எங்கள் ஓட்டு!
அரசியலை பொறுத்தவரை அகமுடையார் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் முதலில் அகமுடையார்கள் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட வேண்டும். பின்னர் சட்டமன்ற பாராளுமன்ற தேர்தலில் அகமுடையார்களுக்கே வாய்ப்பளிக்க வேண்டும். பின்னர் அமைச்சரவையில் அகமுடையார்களுக்கு பிரநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். அப்படி செய்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கே அகமுடையார்களின் ஓட்டு!
குறிப்பாக:
இச்செய்தியில் உள்ள சில தரவுகளுக்கு உடன்பாடு இல்லை!
#திருத்தணிஅகமுடையார்சங்கம் #அகமுடையார் #திருத்தணி #திருவள்ளூர்மாவட்டம்
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்