மறுமணத்தில் குழந்தை உள்ள மணமகளை ஏற்றுக்கொள்வது யார்?
——————————————–
இதை விவாத்த்தே ஆகவேண்டும்!
பொதுவாக விவாகரத்து அல்லது மறுமணத்தை ஏற்காத மனப்போக்கு அகமுடையார் சமுதாயத்தில் உள்ளது. இது உண்மையிலேயே நல்ல வழக்கம் தான் என்றாலும் கணவன்/மனைவி இறந்துவிட்டாலோ அல்லது திருத்தவே/வாழவே முடியாத கணவன்/மனைவி துரதிஷ்டமாக பிரிந்திவிடும் போது மறுமண சூழ்நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில் அகமுடையார் சமுதாயத்தில் மிகப்பெரும் பிரச்சனை உள்ளது.அதாவது
முதல் திருமணத்தில் குழந்தை உள்ள மணமகன் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து பிரியும் போது அந்த குழந்தை மணமகளுடன் வந்துவிடுகிறது.
அதே மணமகன் மறுமணத்தில் வேறு மணமகளை தேடும் போது தன்னிடம் குழந்தை இல்லை ஆகவே குழந்தை இல்லாத மணமகன் என்று தேடுகிறான்! இது ஒரு பக்கம் தவறு நடக்கிறது என்றால்
மறுபக்கம் மேல்சொன்ன விவாகரத்தால் பிரிந்த குழந்தை உள்ள பெண்ணை ஏற்றுக்கொள்ள அகமுடையாரில் மணமகனை கண்டுபிடிப்பது மிகவும் கடினமான செயலாக உள்ளது. முதல் திருமணத்தில் குழந்தை இருந்த மணமகனே மறுமணத்தில் மற்றோரு குழந்தை இல்லாத பெண்ணை தேடுகின்ற போது இந்த குழந்தை உள்ள மணமகளை ஏற்றுக்கொள்வது யார்? வேறு வழி ? குழந்தையை ஏற்றுக்கொள்ளக்கூடிய மணமகன் அவன் வேறு சாதியாக இருந்தாலும் பரவாயில்லை என தேடுகின்றனர்.
ஆம்! மாற்று சமுதாயங்களில் முதல் திருமணத்தில் குழந்தை உள்ள ஒருவர் பெரும்பாலும் குழந்தை உள்ள மணமகளை ஏற்றுக்கொள்கிறார்? ஆனால் இது அகமுடையார் சமுதாயத்தில் பெரும்பாலும் இல்லை.
குழந்தை இல்லாத மணமகன் குழந்தை உள்ள மணமகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறவில்லை ஆனால் குறைந்தபட்சம் குழந்தை உள்ள மணமகன் மணமகள் குழந்தை இருந்தால் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வரவேண்டும் அல்லவா?
“பொண்டாட்டி செத்துவிட்டால் (பிரிந்துவிட்டால்) புருசன் புதுமாப்பிள்ளை” என்ற மனப்பாங்கு மாறவேண்டும்! இதுபற்றி உங்கள் கருத்துக்களை கூறுங்கள் ! உறவுகளே!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்