விசையதித்தன் எனும் வாண அரசர் தான் – வாணர் அகம்படியர் மற்றுமொரு சான்று
————————–
கடந்த 24ம் தேதி வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்துள்ள
சாணார்குப்பம் பகுதியில் கிடைத்த நடுகல் செய்தியை பற்றி தகவல் வெளியிட்டிருந்தோம்.
இந்த நடுகல்லில் கிடைத்த
“படுவூர்க் கோட்டத்து அடையறு நாடு விசையாதித்த
இளகம்படிகள்” கல்வெட்டு வரிகளை கொண்டும் ( வாணர்களை குறிக்கும் விசையாதித்தன் மற்றும் அகம்படிகள் என விசயாதித்தன் என்பதை கொண்டும்)
ஏற்கனவே படுவூர் பகுதி ஆட்சியாளர்களாக 10 14ம் நூற்றாண்டு கல்வெட்டுக்களில் அகம்படியர்கள் குறிக்கப்படுவதை கொண்டும் வாண அரசர்கள் அகம்படியர்கள் என்பதை வெளிப்படுத்தியிருந்தோம் (இந்த கருத்துக்கு மேலும் பல சான்றுகள் இருந்த போதும் இதுவே ஓர் நேரடி சான்றாகும்)
இருப்பினும் கூட இன்னும் சில பேருக்கு சந்தேகம் வந்திருக்கும். மேலே சொன்ன ஆம்பூர் கல்வெட்டில் குறிக்கப்படும் விசையதித்தன் உண்மையிலேயே வாணர் குலத்தவர் தானா? விசையாதித்தன் உண்மையிலேயே ஆட்சியாளன் தானா என்ற கேள்வியெல்லாம் எழுந்திருக்கும் சென்ற பதிவிலேயே அக்கேள்விகளுக்கு கொஞ்சம் சுற்றி விடையளத்திருந்தோம். இருப்பினும் இக்கேள்விகளுக்கு இப்போது நேரடியாக விடையளிக்கும் வேறு ஓர் கல்வெட்டு ஆதாரம் கிடைத்துள்ளது.
அதாவது
இன்றைய வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டத்தில் உள்ள கூடநகரம் எனும் ஊரில் உள்ள திக்கம்மா கோவில் பகுதியில் கிடைத்த கல்வெட்டு செய்தியில்
“மாவலி வாண ராயர் விசையித்தையன் ராஜ்யஞ் செய்ய அவர் தம்பி கங்கர் சிவமாரையன் அடையாறு நாடாண்டு ”
என்ற வரிகள் காணக்கிடைக்கின்றன.
ஆதாரம்: ஆவணம் இதழ் 6, பக்கம் எண் 19
இதில் ஏற்கனவே சொன்ன விசையித்தையன் என்பவர் மாவலி வாண ராயர் வழிவந்தவர் என்பதும் அவர் நாடாண்ட செய்தியும், அவருடைய தம்பி அடையாறு நாட்டை ஆண்ட செய்தியும் காணக்கிடைக்கின்றது.
மேலும் ஏற்கனவே சாணார்குப்பம் பகுதியில் கிடைத்த கல்வெட்டு மூலம் விசையித்தையன் அகம்படிகள் என்பதன் மூலம் மாவலி அரசர்கள் அகம்படி மரபினர் என்பது இக்கல்வெட்டு செய்தி மூலமும் நிறுவப்படுகின்றது.
இக்கல்வெட்டு பற்றி நிறைய சொல்ல வேண்டும்
மற்றொரு பதிவில் இக்கல்வெட்டு பற்றி விரிவான செய்தி வெளியிடப்படும்.
ஆகஸ்ட் 24ம் தேதி வெளியிட்ட நடுகல் கல்வெட்டு செய்தியை கீழே உள்ள இணைப
https://www.facebook.com/100063919813164/posts/721131733360814
வாணர் அகம்படியர் என்பதற்கு மற்றுமுள்ள சான்று இதுவாகும். அகமுடையார் ஒற்றுமை தளத்தால் வாணர் அகம்படியர் என்பதற்கு வெளியிட்ட கட்டுரைகளை/சான்றுகளை கீழே உள்ள லிங்கில் சென்று ஒரே இடத்தில் பார்க்க முடியும்.
https://www.agamudayarotrumai.com/t/mavali-vanar-maveli-vanathirayar/
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்