ரிக்வேதத்தில் குறிப்பிடப்படும் அகமுடையார்களின் அசுர குல முன்னோர்கள்————…

Spread the love
0
(0)

ரிக்வேதத்தில் குறிப்பிடப்படும் அகமுடையார்களின் அசுர குல முன்னோர்கள்
——————————

விரித்ரா என்பவர் தனு எனும் அசுர பெண்ணிற்கு பிறந்தவர். தனு எனும் இந்த அசுர குல பெண்ணிற்கு பிறந்தவர்கள் தானவர் என்று அழைக்கப்பட்டார்கள் என்று முன்னமே சொன்னோம் அல்லவா!

ஆகவே விரித்ரா தானவ குலத்தவராக 3000 வருடங்களுக்கும் பழமையான ரிக்வேதத்தில் கூறப்படுகிறார்.

விரித்ரா எனும் தானவ குல அசுரர் 99 கோட்டைகளை கொண்டிருந்தார் என்றும்
வேத நதிகளான சப்தசிந்து நதிகளை அணை கட்டி தடுத்தார் என்றும்
ஆரியர்களின் பசுக்களை தனது குகையில் அடைத்தார் .

என்றும் கூறப்படுகிறார். இப்படிப்பட்ட விரித்ரா என்ற அசுரனை இந்திரன் என்ற ஆரியன் கொன்றார்.

நதிகள் நிலத்தில் செல்லும் பாம்பு போன்று வளைந்து செல்பவை.
நதிகளை கட்டி தடுத்ததால் விரித்ரா என்ற இந்த அசுரர் ,ரிக்வேதத்தில் அஹி (சமஸ்கிருதத்தில் பாம்பு) என்று உருவகப்படுத்தப்படுகிறார்.

To kill Ahi, and to overcome the mountain, Tvasta had fashioned the excellent Vajra.
Longing to move away, like cows tied down, the waters were held stationary

ரிக்வேதம் 1.32

यो ह॒त्वाहि॒मरि॑णात्स॒प्त सिन्धू॒न्यो गा उ॒दाज॑दप॒धा व॒लस्य॑ । यो अश्म॑नोर॒न्तर॒ग्निं ज॒जान॑ सं॒वृक्स॒मत्सु॒ स ज॑नास॒ इन्द्र॑: ॥
यो हत्वाहिमरिणात्सप्त सिन्धून्यो गा उदाजदपधा वलस्य । यो अश्मनोरन्तरग्निं जजान संवृक्समत्सु स जनास इन्द्रः ॥
yo hatvāhim ariṇāt sapta sindhūn yo gā udājad apadhā valasya | yo aśmanor antar agniṃ jajāna saṃvṛk samatsu sa janāsa indraḥ ||

Who slew the Dragon, freed the Seven Rivers, and drove the kine forth from the cave of Vala,Begat the fire between two stones, the spoiler in warriors’ battle, He, O men, is Indra.

Riveda 2.12.3

மேலதிக தகவல்கள்
———–
புதிதாக வந்த ஆரியர்கள் ( மேற்கத்திய ஆயர்கள் ) தனது எல்லைப்பகுதியில் (சிந்து பகுதியில்) உள்ள தங்கள் வணிகப்பாதைகளில் தொல்லைகொடுப்பதை கண்டு சிந்து பகுதியின் அரசர் விரித்ரா கோபமடைந்து ஆரியர்களின் பசுக்களை சிறைபிடித்து குகையில் அடைத்தார். ஆகவே இந்நாட்டின் பூர்வகுடியான தானவர்களுக்கும் ,ஆரியர்களுக்குமான மோதல் இங்கிருந்து ஆரம்பித்ததாக கூட இருக்கலாம்(இப்படித்தான் ரிக்வேதம் எடுத்துக்காட்டுகிறது)

சோழர்கள் ஏழு என்ற அடையாளத்தை எப்போதும் கொண்டிருந்தனர். இந்த ஏழு என்ற அடையாளம் சப்த சிந்து (ஏழு நதிகள்) என்பதை கைகொண்டவர் என்பதை குறிக்கும் அடையாளமாகவும் , சூரியனின் ஏழு கதிர்களை குறிப்பதாகும். ஏழகத்தார் என்று அகமுடையார்கள் அழைக்கப்பட்டதும், சோழ அகமுடையார்களின் ஏழு பிரிவுகளும் இதை விளக்கும் சான்றாகும். இது முன்னரே விளக்கியுள்ளோம்.

( அகமுடையார்களின் கோட்டை என்ற அடையாளம் ரிக் வேத காலத்திலேயே துவங்கியுள்ளது,சிந்து சமவெளி காலத்திலும் கோட்டை மற்றும் அகம்படியர் என்ற அடையாளங்கள் காணப்படுவதாக ஐராவதம் மகாதேவன் தனது ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதையும் இங்கு ஒப்பு நோக்க வேண்டும்.

மேலும் சோழர்கள் என்ற பெயர் கோட்டைக்குடி என்ற அடையாளத்தில் உருவானவர்கள் என்பதையும்,

வேலியர் கோன் (கோட்டை அரசர்) என்றும் வேலியர் என்றும் வாணர்கள் அழைக்கப்பட்டதையும் ஏற்கனவே உள்ள பதிவுகளில் விளக்கியுள்ளோம்.

பார்க்க:
https://www.facebook.com/100063919813164/posts/637306118410043

https://www.facebook.com/100063919813164/posts/523523443121645

தாரகன்,தாரகாட்சன்,வித்யுன் மாலி போன்ற வாணர் மாவலி வழிவந்த அசுரர்களுடைய முப்புரம் அல்லது திரிபுரம் ( பொன் ,வெள்ளி மற்றும் இரும்பிலான மூன்று கோட்டைகள் ) அழித்த செய்தியும், இந்த மூவர்களில் தாரகன்,தாரகாட்சன் போன்றோர் நந்திதேவர் போன்று கயிலை காக்கும் அகம்படி வாயிற்காவலர்களாகவும் பல்வேறு புராணங்களில் பதிவாகியுள்ளதையும் ஏற்கனவே பதிவிட்டுள்ளோம்.

ஆதாரம்: திருவாசகம் பாடல் 321
உரை: தண்டபாணி தேசிகர் பக்கம் 703

பார்க்க: https://www.agamudayarotrumai.com/8047/

இவ்வாறு சோழர்களும், வாணர்களும் கோட்டைகுடியினர் என்பதையும் தொடர்ந்து பதிவுசெய்துள்ளனர்.

தானவர் ,தைத்யர் எனும் அகமுடையார்களின் அசுரகுல முன்னோர்கள் ,ஆரியர்களின் படையெடுப்பின் போது குறிஞ்சி நிலத்தில் வாழ துரத்தப்பட்டார்கள் அங்கு அவர்கள் குறிஞ்சி வாழ்க்கையையும் நடத்தினார்கள் ஆனால் அவர்கள் வேட்டுவர்கள் போன்ற பழங்குடி வாழ்க்கையை நடத்தவில்லை. மாறாக இவர்கள் 3000 -5000 வருடத்திற்கு முன்பே முதிர்ச்சி பெற்ற அரசாட்சியை நடத்தியவர்கள் என்பது ரிக் வேத காலத்திலும் அதற்கு முன்னால் சிந்து சமவெளி காலத்திலும் இவர்கள் ஆட்சி செய்த வரலாறு புலப்படுத்துகிறது. காலம் வந்த போது மீண்டும் அவர்கள் குறிஞ்சியை கடந்து சம்வெளிகளில் அரசாட்சியை உருவாக்கினார்கள் என்பதை தான் வாணர் ,சோழர் என்ற அகமுடையார் குல அரசர்களின் வாழ்வு நமக்கு உணர்த்துகிறது . இதை பின்னொரு நாளில் விரிவாக விளக்குவோம்!

படங்கள் இணைப்பு
1- சிந்து அரசர் விரித்ராவிற்கும் ,ஆரியரான இந்திரனுக்கும் நடந்த போர் ,போரில் மன்னர் விரித்ரா கொல்லப்படும் காட்சி (விரித்ரா மனித உருவில் காட்டப்படும் படம்)
2- சிந்து அரசர் விரித்ராவிற்கும் ,ஆரியரான இந்திரனுக்கும் நடந்த போர்.போரில் மன்னர் விரித்ரா கொல்லப்பட்டு கிடக்கும் காட்சி (விரித்ரா அசுர உருவில் காட்டப்படும் படம்)இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

 

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?