First
புதுக்கோட்டை கல்வெட்ட்டில் தானவநாட்டு மற்றும் நெடுவாசல் சீமையின் ஆட்சியாளர்களாக (சீமைக்கு கர்த்தர்களாக) அகம்படியர் வழிவந்த வாணாதிராயர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.
இவர்களின் பாண்டிய பெருமாள் எனும் பெயர் பாண்டிய நாட்டில் குறுநில அரசர்களாக இருந்ததை குறிக்கிறது. இன்றைய பாலைவனம் பகுதி பழையவனம் என்று அழைக்கபட்டதையும் அதற்கும் அரசர்களாக இருந்தவர்களாக இவர்களே குறிக்கப்படுகின்றனர்.
ஆதாரம்: புதுக்கோட்டை கல்வெட்டு எண் 942
மேலும் தானவநாடு என்பதை நிகண்டுகள் எனும் பழம் அகராதிகள் தானவர் எனும் அசுரர் என்று குறிக்கின்றன.
ஆதாரம்: தமிழ் ஆங்கில அகராதி, பக்கம் எண் 284
வெளிவந்த வருடம் 1870
அகம்படி மாவலி வாணாதிராயர்கள் நரசிம்மரை எதிர்த்த இரணியன் எனும் இரண்ய கசிபு அசுரன் , வாமனை எதிர்த்த மகாபலி , கண்ணனை எதிர்த்த பாணசுரன் போன்ற அசுரர் வழிவந்தவர்களாக இலக்கியம் ,செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுக்களில் குறிப்பிட்டுக்கொள்கின்றனர்.
சிவபெருமானின் வாயிற்காப்பாளர்களாக
அகம்படி பணி செய்தவர்களாகவே காட்டப்படுகின்றனர்.
தாரகன்,தாரகாட்சன்,வித்யுன் மாலி போன்ற மாவலி வழிவந்த அசுரர்களுடைய முப்புரம் அல்லது திரிபுரம் ( பொன் ,வெள்ளி மற்றும் இரும்பிலான மூன்று கோட்டைகள் ) அழித்த சிவபெருமானின் புராணங்கள் காட்டுகின்றன. இந்த மூவர்களில் தாரகன்,தாரகாட்சன் போன்றோர் நந்திதேவர் போன்று கயிலை காக்கும் வாயிற்காவலர்களாகவும் வித்யுன் மாலியை குடமுழா முழுக்குபவராகவும் ஆக்கி சிவகணங்களாக ஏற்றுக்கொண்டார்.
ஆதாரம்: திருவாசகம் பாடல் 321
உரை: தண்டபாணி தேசிகர் பக்கம் 703
சொல்வதற்கு நிறைய செய்திகள் உள்ளன. கேட்பதற்கு தான் காதுகள் வேண்டும். வாணர் குலம் அகம்படியரே என்பதை விளக்கும் காணொளியில் இதை விரிவாக பேசுவோம்!
அகமுடையார் ஒற்றுமை யூடிப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்!
அப்போதுதான் புதிய வீடியோ வெளிவருகின்ற போது உங்களுக்கு தகவல் கிடைக்கும்.
https://www.youtube.com/agamudayarotrumai
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்