முக்குலத்தோர்,தேவர் பெயரில் இணைப்பை எதிர்த்த முன்னோர்கள் – முன்னோர்கள் காட்டிய வழியை மறந்து முட்டாள்களாக வேண்டாம்!
——————–
அகமுடையார்கள் ஓர் தனிப்பேரினம் ,பழந்தமிழ் குடி . அகமுடையார்களை ,கள்ளர் மறவருடன் இணைத்து முக்குலத்தோர் என்று கூறியதையும் ,தேவர் என்று பட்டத்தின் பெயரால் சம்பந்தமில்லாத சாதிகளை இணைக்க முயற்சித்ததையும் அகமுடையார் முன்னோர்கள் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளார்கள்.
உதாரணத்திற்கு
1) அகமுடையார்களை ” முக்குலத்தோர் ” என்ற பெயரில் இணைத்து கீழ்ராங்கியம் அய்யாக்குட்டி தேவர் (அகமுடையார்) உள்ளிட்ட அகமுடையார் முன்னோர்கள் பலர் 945 ம் ஆண்டு ஆங்கில அரசு (சென்னை சர்க்கார் காரிய அபிவிருத்தி இலாகாவிற்கு) அகம்படியர்கள் சார்பாக அனுப்பிய ஆட்சேபனை மனு
2) கள்ளர்,மறவர் அகம்படியரை கற்பனையாக ஒன்றாக சேர்த்து தேவரினம் என்று அறிவிக்க கோரி முக்குலத்தோர் சங்க பிரதிநிதிகள் மனு கொடுத்ததை எதிர்த்து
மதுரை அகம்படியர் சங்கத்தின் தலைவர் திரு.இராமசாமி சேர்வை, திரு. மாயாண்டி சேர்வை, திரு.பாண்டியன் சேர்வை உள்ளிட்ட பல அகம்படிய முன்னோர்கள் தேவர் என்றோ, முக்குலத்தோர் என்று சொல்லி அகம்படியர்களை மற்ற சாதிகளுடன் சேர்ப்பதை கடுமையாக எதிர்த்து 1980களில் அமைக்கப்பட்ட அம்பா சங்கர் குழுவிற்கு (கமிசன்) மனு அளித்துள்ளனர்(இச்செய்தி அகம்படியர் குரல் இதழில் வெளிவந்துள்ளது -பார்க்க இணைப்பு 6)
3) 1990களில் சட்டமன்றத்தில் ” தேவர் இனம் என்று பெயர் மாற்றம் செய்யப்படுமா” என்பது குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது அகமுடையார்களாகிய எங்களுக்கும், கள்ளர்,மறவருக்கும் சம்பந்தம் இல்லை , அகமுடையார்களை முக்குலத்தோர் என்றோ ,தேவர் என்றோ இணைத்து சொல்லக்கூடாது, அகமுடையார்கள் தனி சாதி என்றும் அகமுடையார்களின் ஒரு பிரிவே துளுவ வேளாளர் என்று அகமுடையார் சார்பாக மதுரை,இராமநாதபுரம் பகுதிகளில் திரு.இராஜாராம் பாண்டியன் அவர்கள் மனு அளித்ததை முதல்வர் சுட்டிக்காட்டினார்.
இதுதவிர்த்து பல்வேறு காலங்களில் பல்வேறு அகமுடையார் இனதலைவர்கள் அகமுடையார்களை தேவர் என்று கூறி மற்ற சாதிகளுடன் இணைத்து பேசுவதையோ ,முக்குலத்தோர் என்பதில் அகமுடையார்களை இணைப்பதையும் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளார்கள்.வரும் நாட்களில் அவற்றையும் பதிவிடுவோம்.
ஆவணங்கள் உதவி:
திரு.பாலமுருகன் அகமுடையார்- அகமுடையார் அரண்
தற்போதும் இதே பிரச்சனை திரும்பியுள்ளது.
அகமுடையார் சங்கங்கள், தனிநபர்கள், அமைப்புகள் ,அகமுடையார்களை முக்குலத்தோர் என்றோ தேவர் என்று ஒரு சாதியாகவோ அரசியல் ஆதாத்திற்காக சிலர் கூறுவதை எதிர்க்க வேண்டும். அகமுடையார்களின் தனித்தன்மையை எடுத்துக்காட்டி அகமுடையார்களுக்கும் கள்ளர் ,மறவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை கூறி எதிர் மனு செய்ய வேண்டும்.
இவ்வாறு எதிர்மனு செய்பவர்கள் ,பிற்படுத்தப்பட்டோர் மனு அளித்தவர்கள் தங்கள் பதிவுகளை பேஸ்புக்கில் பதிவு செய்யுங்கள்! அதை நாங்கள் வெளியிட்டு அனைத்து அகமுடையார்களுக்கும் கொண்டு செல்வோம்! அவர்களின் முயற்சிகளை ,சமுதாய பற்றை பாராட்டுவோம்!
அதே போல் அகமுடையார்களின் தனித்தன்மைக்கு எதிராக அரசியல் ஆதாயத்திற்காக ,பணத்திற்காக எந்த அகமுடையாரேனும் செயல்பட்டால் அந்த இன துரோகிகளையும் அடையாளம் காட்டுவோம்! இச்செய்தியை நீங்களும் பகிர்ந்துகொண்டு இத்தகயவர்களை(கயவர்களை) அடையாளம் காட்ட வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றோம்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்