சேந்தன்குடி ஜமீன் வழுவாடியார்கள் -அகமுடையார் சாதியினரே -நிலப்பத்திர ஆவண ஆதாரம் ப…

Spread the love

சேந்தன்குடி ஜமீன் வழுவாடியார்கள் -அகமுடையார் சாதியினரே -நிலப்பத்திர ஆவண ஆதாரம் பதிவு -1
—————————————————————

அகமுடையார்களின் வரலாற்று ஆர்வமின்மையாலும் , அறியாமையாலும் பல்வேறு அகமுடையார் ஜமீன்களை மாற்று சாதியினர் சொந்தம் கொண்டாடியுள்ளனர்.

சேந்தங்குடி ஜமீன் அகமுடையார் ஜமீன் என்பதற்கான பல்வேறு ஆவணங்களை அகமுடையார் அரண் திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்கள் திரட்டி நம் பார்வைக்கு அனுப்பி உள்ளார். இந்த ஆவணங்களில் சேந்தங்குடி ஜமீனோடு சேர்த்து வேறு ஜமீன்களும் அகமுடையார் இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. அவர்களின் நில ஆவணங்கள், கல்வி சான்றிதழ்கள் ,கல்வெட்டுக்கள், பட்டங்கள், கரை உரிமைகள் ,ஆங்கிலேயரின் புள்ளி விவரங்கள் போன்ற பல்வேறு தரவுகள் அவர்கள் அகமுடையார் சமுதாயத்தினர் என்பதை காட்டுகின்றன.

ஆனால் அகமுடையார் சமூகத்தினரின் குறுகிய எல்லையிலான சமுதாய பார்வையும், தங்கள் பட்டங்களை மட்டுமே தங்கள் சாதியென நினைத்து சொந்த சாதியினரையே மாற்று சாதி என நினைக்கும் போக்கும் இந்த ஜமீன்களை மாற்று சாதியினர் தங்கள் சாதி போல் சொந்தம் கொண்டாட இடம் கொடுத்துள்ளது.

சேந்தன்குடி ஜமீனை சேர்ந்தவர்கள் வழவாடியார் பட்டம் கொண்டவர்கள்.

இப்பதிவில் சேந்தகுடி ஜமீன் அகமுடையார்கள் என்பதற்கு இணைத்துள்ள இரண்டு முக்கிய நில ஆவணங்கள் வருமாறு.

1943ம் வருடத்தின் பத்திரத்தில் ” பனைகுளத்தில் இருக்கும் மழவராயர் கங்காணியார் எம்.கே .சொக்கலிங்கம் பிள்ளை ,இந்து மதம் அகம்படிய சாதியை சேர்ந்தவருக்கு , பனைகுளம் உடையான்கொல்லையிலுருக்கும் சின்னச்சாமி வழுவாடியார் குமாரர் ,மிராசு மேகவர்ணம் வழுவாடியார் மேற்படி ( அகம்படியர் ) சாதி …..

என்பதன் மூலம் சேந்தன்குடி ஜமீனை சேர்ந்த வழுவாடியார் குடும்பத்தினர் அகம்படியர் சாதி என்று தெளிவாக பதிவு செய்துள்ளதை காணலாம்.

அடுத்து வரும் பத்திரம்
1958ம் வருட பத்திரத்தில்
“சுப்பிரமணிய வழுவாடியார் மகன் அகம்படியர் சிவமதம் , மிராசு செவந்த பெருமாள் வழவாடியாருக்கு”

( இப்பத்திரம் உதவி தஞ்சை பகுதியை சேர்ந்த தம்பி ஒருவர் )

இதன் மூலம் சேந்தமங்கலம் வழுவாடியார்கள் ,அகம்படிர்கள் சமுதாயம் என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். இந்த ஆவணங்கள் ஓர் தொடக்கமே ,இது போல் பல்வேறு ஆவணங்கள் உள்ளன. சொல்லப்போனால் நூற்றுக்கணக்கான ஆவணங்கள் சேந்தகுடி ஜமீன் குடும்பத்தினரை அகம்படியர் சாதி என்று குறிப்பிட்டுள்ளதாக அறிகின்றோம்.

வரும் நாட்களில் சேந்தன்குடி ஜமீன் தொடர்பான தெளிவான வரலாறு வெளியிடப்படும்.

குறிப்பு:
பழைய பத்திரம் என்றாலும் நிலப்பத்திரம் என்பதால் பொதுவெளியில் வெளியிடுவதால் பத்திரத்தில் பல பாகங்களை மறைத்திருக்கின்றோம்(நமக்கு தேவை சேந்தன்குடி ஜமீன் குடும்பத்தினர்கள் என்ன சாதி என்பதை உறுதி செய்ய வேண்டுமே தவிர சொத்து விவரங்கள் இல்லை என்பதால் மற்றவற்றை மறைத்துள்ளோம்)

இப்பத்திரம் போல் பல்வேறு பத்திரங்கள் , ஆவணங்களை திரு.பாலமுருகன் அகமுடையார் திரட்டியுள்ளார். அவற்றையும் விரைவில் வெளியிடுவோம்.

நன்றி:
பல்வேறு பொருளாதார சிக்கல்களுக்கு நடுவிலும் மேற்குறிப்பிட்ட ஊர்களுக்கு சென்று நேரில் சென்று தரவுகளை திரட்டி நமது ஆய்வுக்கு வழங்கிய அகமுடையார் அரண் திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு அகமுடையார் ஒற்றுமை சார்பாக மனமார்ந்த நன்றிகள்!

ஆதேநேரம் அகமுடையார்கள் இனிமேலேனும் தங்கள் மெளனத்தை கலைந்து , அகமுடையார் வரலாற்று தேடலுக்கும் வரலாற்று மீட்பிற்கும் உதவிட வேண்டும்,இல்லையென்றால் எஞ்சி இருக்கும் தரவுகளும் அழிக்கப்பட்டு அகமுடையார்கள் ஜமீன்கள் எந்த தடையமும் இல்லாமல் மாற்று சாதியாக மடைமாற்றப்படுவார்கள் என்பது உறுதி.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

 

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?