சேந்தன்குடி ஜமீன் – அகமுடையார் ஜமீனே! நிலப்பத்திர ஆவண ஆதாரம் பதிவு -1 ——-…

Spread the love

First
சேந்தன்குடி ஜமீன் –
அகமுடையார் ஜமீனே!

நிலப்பத்திர ஆவண ஆதாரம் பதிவு -1
—————————————————————
அகமுடையார் பேரினத்தவர்களின் வரலாற்று ஆர்வமின்மையாலும், அறியாமையாலும் பல்வேறு அகமுடையார் ஜமீன்களை, மாற்று சாதியினர் சொந்தம் கொண்டாடியுள்ளனர்.

“சேந்தன்குடி ஜமீன்” அகமுடையார் ஜமீன் என்பதற்கான பல்வேறு ஆவணங்களை அகமுடையார் அரண், தலைமை ஒருங்கிணைப்பாளர், சோ.பாலமுருகன் அகமுடையார் அவர்கள் திரட்டி, நம் பார்வைக்கு அனுப்பி உள்ளார்.

இந்த ஆவணங்களில், சேந்தன்குடி ஜமீனோடு சேர்த்து வேறு ஜமீன்களும் அகமுடையார் பேரினத்தை சேர்ந்தவர்கள் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. அவர்களின் நில ஆவணங்கள், கல்வி சான்றிதழ்கள், கல்வெட்டுகள், பட்டப்பெயர்கள், கரை உரிமைகள், ஆங்கிலேயரின் புள்ளி விவரங்கள் போன்ற பல்வேறு தரவுகள் அவர்கள் அகமுடையார் சமுதாயத்தினர் என்பதை காட்டுகின்றன.

ஆனால், அகமுடையார் சமூகத்தினரின் குறுகிய எல்லையிலான சமுதாய பார்வையும், தங்கள் பட்டப்பெயர்கள் மட்டுமே தங்கள் சாதியென நினைத்து, சொந்த சாதியினரையே மாற்று சாதி என நினைத்து ஒதுக்கும் மனநிலைதான், பல்வேறு அகமுடையார் ஜமீன்களை மாற்று சாதியினர் தங்கள் சாதி போல் சொந்தம் கொண்டாட இடம் கொடுத்துள்ளது.

சேந்தன்குடி ஜமீனை சேர்ந்தவர்கள் “வழவாடியார்” “சேர்வைகாரர்” பட்டம் கொண்டவர்கள்.

இப்பதிவில், சேந்தன்குடி ஜமீன்தார்கள் அகமுடையார் பேரினத்தை சேர்ந்தவர்கள் என்பதற்கு இரண்டு முதன்மையான நில ஆவணங்கள் கீழ்வருமாறு.

1943 ஆம் ஆண்டின் நிலபத்திரத்தில், பனைகுளத்தில் இருக்கும் மழவராயர் கங்காணியார் எம்.கே.சொக்கலிங்கம் பிள்ளை, இந்து மதம், “அகம்படிய சாதி”யை சேர்ந்தவருக்கு,

பனைகுளம் உடையான் கொல்லையிலுருக்கும் சின்னச்சாமி வழுவாடியார் குமாரர், மிராசு மேகவர்ணம் வழுவாடியார் மேற்படி (அகம்படியர்) சாதி …..

என்பதன் மூலம் சேந்தன்குடி ஜமீனை சேர்ந்த வழுவாடியார் குடும்பத்தினர் அகம்படியர் சாதி என்று தெளிவாக பதிவு செய்துள்ளதை காணலாம்.

அடுத்து வரும் 1958 ஆம் ஆண்டு, நிலபத்திரத்தில், சுப்பிரமணிய வழுவாடியார் மகன் “அகம்படியர்”
சிவ மதம், மிராசு செவந்த பெருமாள் வழவாடியாருக்கு…

(இப்பத்திரம் உதவி : தஞ்சை பகுதியை சேர்ந்த தம்பி ஒருவர்)

இதன் மூலம் சேந்தன்குடி வழுவாடியார்கள் அகம்படியர் சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். இந்த ஆவணங்கள் ஓர் தொடக்கமே, இதுபோல் பல்வேறு ஆவணங்கள் உள்ளன. சொல்லப் போனால் நூற்றுக்கணக்கான ஆவணங்கள் சேந்தகுடி ஜமீன் குடும்பத்தினரை “அகம்படியர் சாதி” என்று குறிப்பிட்டுள்ளதாக அறிகின்றோம்.

வரும் நாட்களில், சேந்தன்குடி ஜமீன் தொடர்பான தெளிவான வரலாறு வெளியிடப்படும்.

குறிப்பு :

பழைய பத்திரம் என்றாலும், நிலப்பத்திரம் என்பதால் பொது வெளியில் வெளியிடுவதால் பத்திரத்தில் பல பாகங்களை மறைத்திருக்கின்றோம் (நமக்கு தேவை சேந்தன்குடி ஜமீன் குடும்பத்தினர்கள் என்ன சாதி என்பதை உறுதி செய்ய வேண்டுமே தவிர, சொத்து விவரங்கள் இல்லை என்பதால் மற்றவற்றை மறைத்துள்ளோம்)

இப்பத்திரம் போல் பல்வேறு பத்திரங்கள், ஆவணங்களை சோ.பாலமுருகன் அகமுடையார் அவர்கள் திரட்டியுள்ளார். அவற்றையும் விரைவில் வெளியிடுவோம்.

நன்றி :

பல்வேறு பொருளாதார சிக்கல்களுக்கு நடுவிலும், மேற்குறிப்பிட்ட ஊர்களுக்கு நேரில் சென்று தரவுகளை திரட்டி, நமது ஆய்வுக்கு வழங்கிய அகமுடையார் அரண், தலைமை ஒருங்கிணைப்பாளர், சோ.பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு, அகமுடையார் ஒற்றுமை சார்பாக மனமார்ந்த நன்றிகள்!

ஆதேநேரம், அகமுடையார் பேரினத்தவர்கள் இனிமேலேனும் தங்கள் மெளனத்தை கலைந்து, அகமுடையார் வரலாற்று தேடலுக்கும், வரலாற்று மீட்பிற்கும் உதவிட வேண்டும், இல்லையென்றால் எஞ்சி இருக்கும் தரவுகளும் அழிக்கப்பட்டு, அகமுடையார் பேரினத்தின் எந்த வரலாற்று தடையமும் இல்லாமல் அழிக்கப்பட்டு, மாற்று சாதியாக மடைமாற்றப்படுவார்கள் என்பது உறுதி.

பதிவு,

மு.சக்திகணேஷ் அகமுடையார்,
agamudayarotrumai.com
———————————————-
அகமுடையார் வரலாற்று மீட்புப்
பணியில்…

சோ. பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
கைப்பேசி : 94429 38890.




இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்

திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo