First
தன்மான சிங்கம்,
“பழக்கடை செ.பாண்டியன்”
தமிழ்க் கூறு நல்லுலகில் பரந்து வாழும் அகமுடையார் பேரினத்தில்,
பல உட்பிரிவுகள் உள்ளன. அவ் உட்பிரிவில் “கோட்டைப் பற்று அகமுடையார்” பிரிவில்,
செல்லையா பிள்ளை – சின்னம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது தவப்புதல்வனாக “பழக்கடை பாண்டியன்” அவர்கள், 08-03-1933 ஆம் ஆண்டு, சிவகங்கையில் பிறந்தார்.
உடன்பிறந்தோர்கள்,
1) மீனாட்சி (அக்கா),
3) மனோகரன் (தம்பி),
4) மீனாட்சிசுந்தரம் (தம்பி),
5) தனலெட்சுமி (தங்கை),
உள்ளிட்டோர் ஆவர்.
இல்வாழ்க்கை,
சிவகங்கையை பூர்வீகமாக கொண்ட நாகலிங்கம் – மாணிக்கத்தம்மாள் தம்பதியின் மகளான, ஞானசுந்தரி அவர்களை இல்லத்தரசியாக கரம் பிடித்தார்.
சிவகங்கையில் இருந்து தொழில் நிமிர்த்தமாக, அவர் தந்தை செல்லையா பிள்ளை அவர்கள், மதுரையில் குடியேறி, யானைக்கல் பகுதியில் பழங்கள் மொத்த கமிஷன் மண்டி ஆரம்பித்தார். ” “பாண்டியன் பழக்கமிஷன் மண்டி” என்ற பெயரில் இன்றளவும சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
அரசியல் பயணம்,
பழக்கடை செ.பாண்டியன் அவர்கள் தனது அரசியல் பயணத்தை காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்து ஆரம்பித்தார்.
1975 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு “நகர பொருளாளராக”
பதவி வகித்து தீவிரமாக கட்சி பணி ஆற்றினார். அந்த காலகட்டத்தில்,
கொடிய மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
1977 தேர்தல் களத்தில்,
1977 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில், மதுரை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளராக களம் இறங்கினார்.
அந்த தொகுதியில் மொத்தம் போட்டியிட்ட வேட்பாளர்கள் – 6 நபர்கள், அதில் இருவர் சுயேட்சை வேட்பாளர்,
1977 ஆம் ஆண்டில் அப்போதைய மதுரை மத்திய தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை – 1,37,125 /-
வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரம்,
1) என்.லெட்சுமி நாராயணன்
(அஇஅதிமுக) -29,399 /-
2) ஏ.இரத்தினம் (காங்கிரஸ்) -16,420 /-
3) பழக்கடை செ.பாண்டியன்
(திமுக) -14,676 /-
4) எஸ்.சுகுமாறன் (ஜனதா) -12,780 /-
5) கே.எஸ்.கோபாலசாரி
(சுயேட்சை) – 249 /-
6) ஜி.லெட்சுமண சுப்பராஜுலு
(சுயேட்சை) – 163 /-
இந்த தேர்தலில் அஇஅதிமுக வேட்பாளர் என்.லெட்சுமி நாராயணன் அவர்கள் வெற்றி பெற்றார்.
1980 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட, பழக்கடை செ.பாண்டியன் அவர்களுக்கு கட்சி தலைமை வாய்ப்பு அளிக்காததை கண்டித்து திமுகவில் இருந்து விலகினார்.
1980 ஆம் ஆண்டு, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தலைமையிலான அஇஅதிமுக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
1983 ஆம் ஆண்டு, புரட்சித் தலைவர் அவர்கள் அஇஅதிமுக தலைமை கழக பிரதிநிதியாக பழக்கடை செ.பாண்டியன் அவர்களை நியமித்தார். இரண்டு ஆண்டு்கள் அப்பதவி வகித்தார்.
1984 ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் அவர்கள், பழக்கடை செ.பாண்டியன் அவர்களை “மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளராக” பொறுப்பு வழங்கி கௌரவித்தார்.
1984 முதல் 1991 வரை மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளராக பதவி வகித்தார்.
1984 தேர்தல் களத்தில்,
1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் “மதுரை மேற்கு” தொகுதியில் அஇஅதிமுக வேட்பாளராக களம் இறங்கினார்.
அந்த தொகுதியில் மொத்தம் போட்டியிட்ட வேட்பாளர்கள் – 5 நபர்கள், அதில் மூவர் சுயேட்சை வேட்பாளர்,
1984 ஆம் ஆண்டில் அப்போதைய
மதுரை மேற்கு தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை – 1,42,850 /-
வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரம்,
1) பொன்.முத்துராமலிங்கம்
(திமுக) – 48,247 /-
2) பழக்கடை செ.பாண்டியன்
(அஇஅதிமுக) – 45,131 /-
3) எம்.கே.சிரீதரன்(சுயேட்சை). – 313 /-
4) எஸ்.ஏ.சக்திவேல் (சுயே) – 292 /-
5) கே.சிவசுப்ரமணியம்(சுயே) – 184 /-
இந்த தேர்தலில் திமுக வேட்பாளர், பொன்.முத்துராமலிங்கம் அவர்கள் வெற்றி பெற்றார்.
1977 திமுக சார்பிலும், 1984 அஇஅதிமுக சார்பிலும் சட்டமன்ற பொதுத் தேர்தல்களில் இரண்டு முறை போட்டியிட்டும், தமிழக சட்டமன்ற உறுப்பினராக ஆகும் வாய்ப்பு அவருக்கு கிட்டவில்லை. 1984 இல் இவர் வெற்றி பெற்றிருந்தால் அஇஅதிமுக அரசின் அமைச்சரவையில் உறுதியாக இடம் பெற்றிருப்பார்.
1984 சட்டமன்ற பொதுத் தேர்தலில் இவர் வெற்றி வாய்ப்பை தவற விட்டாலும், புரட்சித் தலைவர் இவர்பால் கொண்ட அன்பால் அதே ஆண்டில் “தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள் விற்பனை வாரியத்தின்” தலைவராக நியமித்தார்.
ஜெயலலிதாவின் முதல் அரசியல் மேடை,
1982 ஆம் ஆண்டில் புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்கள், அஇஅதிமுக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
1983 ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள், ஜெயலலிதா அவர்களுக்கு அஇஅதிமுக கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கி கௌரவித்தார்.
1985 ஆம் ஆண்டு புரட்சித் தலைவி அவர்கள் மாநில கொள்கை பரப்புச் செயலாளராக பதவியேற்ற பின்பு, மதுரை மண்ணில் அவர் ஏறிய முதல் அரசியல் மேடை “வடக்குமாசி வீதி – மேலமாசி வீதி” சந்திப்பில் நடந்த பொதுக் கூட்டம் ஆகும். அந்த அரசியல் மேடையை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு அமைத்துக் கொடுத்த, வரலாற்று நிகழ்விற்கு சொந்தக்காரர் பழக்கடை செ.பாண்டியன் அவர்களையே சாரும்.
புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களை அழைத்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள், மதுரை மண்ணில் உனக்கு முதல் பொதுக் கூட்டம் அதில் கலந்து கொண்டு வா! என்று கூறி, பழக்கடை பாண்டியன் அவர்கள், அந்த பொது கூட்டத்தை மிகவும் சிறப்பாக நடத்துவார் என ஆசி கூறி, இவரின் மீது நம்பிக்கை வைத்து புரட்சித் தலைவியை அனுப்பி வைத்தார் என்றால் புரட்சித் தலைவருக்கு பழக்கடை பாண்டியன் மீது எவ்வளவு நம்பிக்கை,
பிளவுபட்ட அஇஅதிமுக கட்சி இணைப்புக்கு காரணகர்த்தர்,
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மறைவுக்கு பின்பு, அஇஅதிமுக கட்சி இரண்டாக உடைந்து, ஜானகி எம்.ஜி.ஆர் அவர்கள் தலைமையில் ஒரு அணியாகவும், புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையில் மற்றொரு அணியாகவும் பிரிந்தனர்.
இந்த பிளவால் அஇஅதிமுக கட்சியின் சின்னம், தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது.இதனால் ஜானகி அணியினருக்கு “இரட்டை புறா” சின்னமும், ஜெயலலிதா அணிக்கு “சேவல்” சின்னமும் ஒதுக்கப்பட்டன.
இந்த இரண்டு அணிகளின் மோதல்களால் சென்னையில் உள்ள அஇஅதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தை ஜெயலலிதா அவர்கள் அணியினர் கைப்பற்றிக் கொண்டனர். இதன் செய்தி அறிந்த பழக்கடை செ.பாண்டியன் அவர்கள் தலைமை அலுவலகத்தை நோக்கி விரைந்தார்.
தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த ஜெயலலிதா அவர்களின் அணியினரை ஓட ஓட அடித்து விரட்டிவிட்டு தைரியமாக தலைமை அலுவலகத்தை இழுத்து பூட்டினார்.
புரட்சித் தலைவரால் உருவாக்கப்பட்ட அஇஅதிமுக கட்சி இரண்டு அணிகளாக பிரிந்து கிடப்பதையும், கட்சி சின்னம் முடக்கப்பட்டதையும் கண்டு வருந்திய பழக்கடை பாண்டியன் அவர்கள், மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில், கட்சி இணைப்பு வேண்டி உண்ணாவிரதம் இருந்தார்.
அந்த உண்ணாவிரதத்தில் இரண்டு அணியினரும் ஒன்றாக இணைந்து கட்சியையும், சின்னத்தையும் மீட்க வேண்டி அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கையை ஏற்று ஜெயலலிதா அணியினர் உண்ணவிரதத்தில் கலந்து கொண்டு ஆதரவு அளித்தனர். இந்த நிகழ்வு நடந்த ஒரு வாரத்தில் ஜானகி அவர்கள், கட்சியை ஜெயலலிதா அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி கொண்டார்.
இதனால் கட்சியும், சின்னமும் மீட்கப் பட்டது. பழக்கடை பாண்டியன் அவர்களின் உண்ணாவிரதம் மற்றும் அறிக்கையே இரு அணிகளும் இணைய ஒரு அடித்தளமாக அமைந்தன.
தொண்டர்களில் காவலர்,
1990 மார்சு 25 தேதி, சட்டமன்றத்தில் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்களால் கடுமையாக தாக்கப்பட்ட செய்தி அறிந்து மதுரையில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார். இந்த போராட்டத்தை தொடர்ந்து அஇஅதிமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டு, விளக்கு தூண் காவல்நிலையத்தில் கடுமையாக தாக்கப்பட்டனர். இந்த தாக்கப்பட்ட செய்தி அறிந்து விளக்கு தூண் காவல்நிலையம் சென்று தாக்கப்பட்ட தொண்டர்களை சந்திக்க முயன்றார்.
டிஎஸ்பி சிவனாண்டி அவர்கள் தொண்டர்களை சந்திக்க அனுமதிக்கவில்லை. இதனால் கடும் கோபமுற்ற பழக்கடை பாண்டியன் அவர்கள், நீ அணிந்துள்ள காக்கி சட்டையால்தான் உனக்கு மரியாதை, சட்டையை கழட்டி போட்டுவிட்டு வா, ஒத்தைக்கு ஒத்தை நின்று பார்ப்போம் என அறைகூவல் விடுத்து, தன்னிடம் உள்ள கைத்துப்பாக்கியை எடுத்து கூட இருந்தவர்களிடம் தளபதி மாரியப்பன், மைத்துனர் சக்தி மோகன், காஜா உள்ளிட்டவர்களிடம் கொடுத்துவிட்டு களத்தில் நின்றார். (கட்சி தொண்டர்களுக்கு ஒன்றென்றால் அடுத்த நொடியே அந்த இடத்தில் முதல் ஆளாக முன்னிருப்பார்).
ஒருமுறை, திமுக ஆளுங்கட்சியாக இருந்த போது இவரை கைது செய்ய முயன்றது. அப்போது மதுரை தமிழ்நாடு ஓட்டலில் எஸ்.டி.எஸ் அவர்கள் தங்கி இருந்தார் அவருடன் பழக்கடை பாண்டியன் பேசிக் கொண்டிருப்பது பற்றி அறிந்த காவல்துறை இவரை கைது செய்ய வாயிலில் காத்துக் கொண்டிருந்தது. இந்த செய்தி அறிந்தார் பழக்கடை பாண்டியன் அவர்கள், இவரை காவல்துறை வசம் சிக்காமல் சோழவந்தான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலகுரு ரெட்டியார் அவர்கள் சென்னைக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
சதிகாரர்களின் அரசியல்,
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மறைவுக்கு பின்பு அஇஅதிமுக கட்சியில் 1990 க்கு பிறகு குறிப்பிட்ட சாதிவெறி பிடித்த மன்னார்குடி மாபியா கும்பலின் ஆதிக்கம் அதிகரித்தது.
அந்த மன்னார்குடி மாபியா கும்பல்களால் அஇஅதிமுக கட்சியின் வளர்ச்சிக்காக ஆரம்ப காலத்தில் உழைத்த பல முக்கிய தலைவர்கள் திட்டமிட்டு அவமரியாதை செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
இந்த துரோகத்தனத்தால் மனம் வருந்திய பழக்கடை பாண்டியன் அவர்கள்,
1990 கடைசியில் அஇஅதிமுக கட்சியின் இரண்டாம் கட்ட தலைவராக இருந்து, மன்னார்குடி மாபியா கும்பலால் வெளியேற்றப்பட்ட அறந்தாங்கி திருநாவுக்கரசர் அவர்கள்,
“எம்.ஜி.ஆர் அதிமுக” என்ற பெயரில் தொடங்கிய கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு, கட்சியின்
“மாநில துணைப் பொதுச்செயலாளராக” பதவி வகித்தார். மதுரை மண்ணில் புரட்சித் தலைவிக்கு எப்படி முதல் பொதுக் கூட்டத்தை நடத்தினாரோ, அதே போல் வடக்குமாசி வீதி-மேலமாசி வீதி சந்திப்பில், எம்.ஜி.ஆர் அதிமுக சார்பில் மிகப்பெரிய பொதுக் கூட்டத்தை நடத்தினார்.பிறகு எம்.ஜி.ஆர் அதிமுகவின் தலைமையுடன் ஏற்பட்ட மோதலால் அதில் இருந்து விலகினார்.
சில காலம் கழித்து புரட்சித் தலைவி அவர்களிடம் இருந்து அழைப்பு வந்ததை தொடர்ந்து, அவர்பால் நம்பிக்கை கொண்டு மீண்டும் அஇஅதிமுக கட்சியில் இணைந்தார்.
1993 ஆம் ஆண்டு அஇஅதிமுக கட்சியின் மதுரை மாநகர், புறநகர் இளைஞர் அணி செயலாளராக பதவி வகித்தார்.
சில காலங்களில் கட்சியின்பால் ஏற்பட்ட மனக்கசப்பால் பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
நேர்மையே பிரதானம்,
பதவிகளைப் பெறுவதற்காகவும், பெற்ற பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும், அளவில்லா தில்லுமுல்லுகளைச் செய்வோரையும், கீழானவர்களின் பாதங்களையும் பற்றி கெஞ்சிக் கிடப்போரையுமே இன்றுள்ள நிலையில் எல்லா இடத்திலும் எல்லா பிரிவினரிடத்திலும் காண முடிகிறது.
இதற்கானக் காரணம் என்னவென்றால், பதவிகளை பணம் சம்பாதிப்பதற்கான ஒரு கருவியாகவே இப்போதைய அரசியல்வாதிகள் கருதி செயல்படுவதுதான்.
இந்தப் பதவிகள், பணம் சுரக்கும் ஊற்றுக் கண்கள் என்றே பலரும் கருதுகிறார்கள். பழக்கடை செ.பாண்டியன் அவர்கள் இந்தக் கருத்துகளுக்கு முற்றிலும் மாறுபட்டவராகவே திகழ்ந்தார். பதவி பெரிதல்ல, கொள்கையே பெரிது என்ற கருத்தை உடையவர் அவர்.
பொதுப் பணத்தைத் தங்களுடைய சொந்தப் பணமென எண்ணிக் கொள்ளை அடிப்பவர்களையே இன்றைய நாளில் பொதுப் பணியில் ஈடுபடுவோர் அதிகமானவர்களைக் காண முடிகிறது. ஆனால் கட்சி பணிக்கு கட்சி தலைமையை எதிர்பார்த்து ஒவ்வொரு முறையும் காத்திருக்காமல் தனது சொந்தப் பணத்தை செலவழித்து கட்சியை வளர்த்தார்.
பழக்கடை செ.பாண்டியன் அவர்கள் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வகித்த போது இவரிடம் அரசியல் பயின்ற பலர், இன்று அஇஅதிமுக கட்சியின் உயர் பதவிகளிலும், அமைச்சர் பொறுப்பிலும் அங்கம் வகிக்கின்றனர்.
ஆனால் அஇஅதிமுக கட்சியின் ஆரம்ப கால வளர்ச்சிக்காக தங்கள் வாழ்வையும், தனது சொந்த பொருளாதாரத்தையும் இழந்த, பல அகமுடையார் முன்னோடிகள் மற்றும் அவர்தம் வாரீசுகள் இன்று அஇஅதிமுக கட்சியில் என்ன நிலையில் உள்ளன என்பது உலகம் அறிந்தது.
பழைய ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் (இன்றைய மதுரை, தேனி,திண்டுக்கல் மாவட்டங்கள் உள்ளடக்கியது) அஇஅதிமுக கட்சியை வளர்த்தவர்கள்,
# நடிகர் எஸ்.எஸ்.இராசேந்திரன் EX.MLA, அவர்கள்,
# வழக்கறிஞர் சங்கரபாண்டியன் அவர்கள், (முதல் ஒருங்கிணைந்த
மதுரை மாவட்டச் செயலாளர்-1972),
# பழக்கடை செ.பாண்டியன் அவர்கள்,
(மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர்),
# மாரிமுத்து EX.MLA அவர்கள்,
(முன்னாள் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர்)
# தேங்காய் கடை மாரியப்பன் அவர்கள்,
(Ex.மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர்-
Ex.ஆவின் சேர்மன்),
# குலமங்கலம் முத்துராமலிங்கம்
(முதல் அம்மாபேரவை ஒருங்கிணைந்த புறநகர் மாவட்டச் செயலாளர்-1992)
# சாலைமுத்து (பகுதி செயலாளர்-
Ex.பசுமலை கூட்டுறவு சங்கச் செயலாளர்),
# மச்சக்குமார் அவர்கள் (Ex.மதுரை
மாநகர் மாவட்டச் செயலாளர்-2001),
# தர்மராஜன் அவர்கள் ( Ex.மாவட்ட கவுன்சிலர்- சேர்மன்),
# மிசா செந்தில் அவர்கள்,
(Ex. வட்டச் செயலாளர், மத்திய பகுதி கழகச் செயலாளர் 2001 முதல்),
இவர்களை போல் பெரும்பான்மையாக அகமுடையார்கள் வட்டச் செயலாளர்களாகவும், பகுதி செயலாளர்களாகவும் கட்சிக்கு உழைத்து உள்ளனர். அடுத்தடுத்த பதிவுகளில் அவர்களை பற்றி விரிவாக பதிவிடப்படும்.
கட்டுரையின் இறுதி பகுதிக்கு வருவோம்.
1957 முதல் 1994 ஆம் ஆண்டு வரை பொது வாழ்க்கையில் தீவிரமாக ஈடுபட்ட பழக்கடை செ.பாண்டியன் அவர்கள், அஇஅதிமுக கட்சியின் தலைமையுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி வாழ்ந்தார்.
பொது வாழ்வில் இருந்து மட்டும் ஒதுங்கவில்லை, இறுதியில் இம்மண்ணுலக வாழ்க்கையையும் துறந்து
1994 ஆம் ஆண்டு, மே -3 ஆம் நாள், நிரந்தரமாக இம்மண்ணுலக வாழ்வில் இருந்து விடைபெற்றார்.
பழக்கடை பாண்டியன் அவர்களுக்கு பிறகு பொதுப் பணியை தொடர்ந்து எடுத்து செல்ல, அவர்தம் சந்ததிக்கு குழந்தை செல்வம் அமையவில்லை. ஆதலால் பழக்கடை செ.பாண்டியன் அவர்கள், தமது மனைவியான ஞானசுந்தரி அவர்களின் உடன்பிறந்த தம்பியை நா.சக்தி மோகன் (மைத்துனரை) அவர்களை, தனக்கு பிறகு வாரீசாக நியமித்தார்.
அவர் விட்டுச் சென்ற பொது வாழ்க்கை பணியை, அவரது வாரீசாக உள்ள அவரது மைத்துனர் நா.சக்தி மோகன் அவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றார். தற்போது அஇஅதிமுக தலைமை பொதுக்குழு உறுப்பினராக அங்கம் வகிக்கிறார்.
வாழ்க! பழக்கடை செ.பாண்டியன்
அவர்தம் புகழ்,
————————————–
கட்டுரை ஆக்கம்,
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
புலனம் (WhatsApp) எண் : 94429 38890.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்