First
துவராபதி வேளிராக இன்றைய கோனார் இனத்தவர்
——————————
வேள் என்பது தலைவனையும் வேளிர் என்பது அந்த தலைவரின் கீழ் இனக்குழுக்களாக வாழ்ந்தவர்களையும் பொதுவாக குறிக்கும் வார்த்தையாகும். இந்த வேள் ,வேளிர் என்பவர்கள் குறிஞ்சி குறவர்களாகவும் ,முல்லை ஆயர்களாகவும் ,நெய்தல் பரதவர் தலைவர்களாகவும் குறிப்பிடப்படுகின்றனர்.அதாவது வேளிர் என்பவர் பல்வேறு திணை,இனக்குழுக்களிலும் காணப்பட்டுள்ளனர்.
ஆனால் இந்த வேளிர்,வேள் என்பதை இன்று சிலர் குறிப்பிட்ட இனத்தவர் போல் எவ்வளவு பொய்யாக காட்ட முயற்சிக்கின்றனர். அதை உடைப்பதற்காகவே இப்பதிவு.
இன்றைய செய்யாறு பகுதியில் உள்ள வேதபுரீஸ்வர ஆலயத்தின் கருவறை அர்தத மண்டபத்தில் சம்புவராய மன்னன் இராச நாராயணன் காலத்திய கல்வெட்டு செய்தியில்
மன்றாடிகள் எனும் இன்றைய கோனார் இனத்தவர்கள் கோவில் பண்டாரத்தில்(கருவூலத்தில்) இருந்து 30 பசுக்களையும் ,2 ரிஷபம்(காளைகளையும்) பெற்றுக்கொண்டு இப்பசுக்களில் இருந்து கிடைக்கும் பால் மற்றும் நெய்யை தினமும் கோவிலுக்கு கொடுக்க ஓப்புக்கொண்டுள்ள செய்தி பதிவாகியுள்ளது.
இதில் குறிப்பிட்டு கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால்
கோவிலுக்கு நெய் கொடுக்க ஒப்புக்கொண்ட ஆயர் அல்லது இடையர்களின் தந்தை துவாராபதி வேளான் என்று அழைக்கப்படுகின்றான்.
அதாவது கல்வெட்டின் 4ம் வரிகள்
“திருவோத்தூரில் மன்றாடிகளில் துவராபதி வேளான் மகன் வெண்ணைக்கூத்தனான வேதவிநோதகோனும்….” என்ற வரிகள் வருகின்றன.
ஆதாரம்: கல்வெட்டு ஆண்டறிக்கை 1939/40 ,எண் 101
ஆகவே துவரையில் இருந்து வந்த 18 வேளிர்களில் இன்றைய கோனார் சாதியினரும் இருந்துள்ளது தெளிவாக தெரிகின்றது.
ஏற்கனவே துவராபதி யாதவர் என்று கோனார் சாதியினர் கூறி வரும் நிலையில் அதை நிரூபிக்கும் சான்றாக இது அமைகின்றது.
இதுபோல் அகமுடையார் வேளிர் , பரதவர் வேளிர் பார்க்கவ குல வேளிர்போன்ற சான்றுகளை வரும் பதிவுகளை காண்போம்.
பின்குறிப்பு:
வேளிர்கள் ஒரு குறிப்பிட்ட சாதியினர் என்று சிலர் பொய்யாக எழுதி வருவதை உடைப்பதற்காக அவ்வப்போது மற்ற சமுதாயத்தினருடைய சான்றுகளையும் நமது அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் காட்ட வேண்டியது அவசியமாகிறது.
அடுத்து 10,000 மேல் லைக் செய்திருக்கும் நமது அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் ,கல்வெட்டு பற்றிய பதிவுகள் இட்டால் 10 லைக்குகள் கூட கஷ்டப்பட்டு பெறவேண்டியுள்ளது. கல்வெட்டு வரலாற்று அருமை புரிவர்களுக்காவது நமது பணி அவ்வப்போது உதவட்டுமே!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்