First
பாண்டிய மன்னர்கள் இடையர் அல்லது ஆயர் இனத்தவர் என்பதை புரிந்து கொள்ள எளிதான சான்று
————————————————————————–
பாண்டிய மன்னர்கள் இடையர் அல்லது ஆயர் இனத்தவர் என்பதற்கு இலக்கியங்கள்,கல்வெட்டுக்கள்,செப்பேட்டு செய்திகள் , போன்ற பல்வேறு சான்றுகள் இருந்தாலும் ,இதுவெல்லாம் புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது என்று எண்ணுவோருக்கு , எளிதான வழியும் ஒன்று இருக்கிறது.
மேலதிக தகவல்கள்
உலகம் முழுவதும் அரசுகளை தோற்றுவித்தவர்கள் முதலில் மலை மற்றும் காட்டில் வாழ்ந்தவர்கள் அதாவது நம் தமிழ்நாட்டு திணை பகுப்பில் சொன்னால் குறிஞ்சியில் வாழ்ந்த வேடுவர்கள், அதன் பின்னால் முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர்கள் அல்லது இடையர்கள் அதன் பின்னால் நெய்தல் நிலத்தில் வாழ்ந்த பரதவர்/மீனவர்.
இதில் குறிஞ்சியில் அரசமைத்தவர்களை விட இடையர்கள் நாகரீக முதிர்ச்சி பெற்றவர்களாகவும் ,செல்வ வளத்தில் சிறந்தவர்களாகவும் ,பரந்த நிலப்பரப்பை ஆட்சி செய்பவர்களாகவும் விளங்கியுள்ளனர். சரி இதெல்லாம் விரிவாக பேச வேண்டிய தலைப்பு.
சரி நேரடியாக விசயத்திற்கு வருவதென்றால்
பாண்டியர்களின் இலச்சினையில் இரட்டை கயல் அருகில் ஒரு கோல் ஒன்று இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்(பார்க்க இணைப்பு படம் 1)
இது ஆயர்/இடையர்கள் ஆடு மேய்க பயன்படுத்தும் துரட்டியாகும். இதனையே பாண்டிய மன்னர்கள் தங்களது செங்கோலாக பயன்படுத்திய காரணத்தினால் தான் பாண்டியர்களின் சின்னமாக அவர்கள் வடித்துள்ளனர்.
இப்போது பலருக்கு சந்தேகம் வரலாம் அது எப்படி அந்த கோலை ஆடு மேய்ப்பவர்களின் துரட்டி என்கிறீர்கள்? அதற்குத்தான் உலகம் முழுவதும் முழுதும் உள்ள சான்றுகளை பார்த்தாலே புரியும்.
எகிப்து அரசர்கள், பாலஸ்தீன அரசர்கள், மங்கோலிய அரசர்கள் (கான் அல்லது கோன்கள்) யூத அரசர்கள் போன்ற உலகம முழுவதும் உள்ள பல்வேறு அரசர்களும் ,நம் பாண்டியர்கள் பயன்படுத்திய அதே கோலையே (அதே வடிவத்திலான கோலையே) தங்களது செங்கோலாக வைத்திருந்தனர்.
பார்க்க படம் 2 : எகிப்து அரசனின் கையில் செங்கோல்
படம் 3: எகிப்தை ஆண்ட கிளியோபட்ராவின் ஓவியம் கையில் இடையரின் செங்கோல்
நிறைவாக
பார்க்க படம் 4: யூத இனத்தில் பிறந்ததாக கருதப்படும் ஏசு என்னும் ஆடு மேய்ப்பவரின் கோல்.
இதற்கு இன்னும் நிறைய உதாரணங்களையும் , ஆதாரங்களையும் சொல்லலாம். ஆனால் காலத்தின் அருமை கருதியும், எளிமையாக சொல்லவும் இதுவே போதுமானது.
ஆகவே பாண்டியர்கள் இடையர் அல்லது ஆயர் என்ற இனக்குழுவில் இருந்து உருவானவர்கள் என்பதையும் நமக்கு சற்று முன் இதனை வழி வழியாக செய்து வந்தவர்கள் இன்றைய கோனார் சாதியினர் என்பதனால் பாண்டியர் எச்சாதியினர் என்று கேள்வி எழுப்பினால் அவர்கள் இன்றைய கோனார் சாதியினர் என்றே அடையாளம் காட்டுவதே சரியாக இருக்கும்.
ஏற்கனவே சொன்னது போல் பாண்டிய மன்னர்கள் இடையர் அல்லது ஆயர் இனத்தவர் என்பதற்கு இலக்கியங்கள்,கல்வெட்டுக்கள்,செப்பேட்டு செய்திகள் , போன்ற பல்வேறு சான்றுகள் நாம் தேடி தொகுத்து வைத்திருக்கின்றோம். ஆனால் இவற்றை தொகுத்து வெளியிட வேளைப்பளு இடமளிக்கவில்லை மேலும் சில நேரங்களில் இது நமக்கு சம்பந்தப்படாத ஒன்றாயிற்றே என்று மனம் சொல்லுவதாலும் நாம் இதை செய்யாது விட்டுவிடுகின்றோம்.
ஆனால் உண்மை என்றாவது வெளிவந்தே தீரும்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்