First
தேவர் பட்டப்பெயரை “சாதி” யாக அறிவிக்க “அகமுடையார் சங்கம் எதிர்ப்பு,
1945 ஆம் ஆண்டு அகில இந்திய முக்குலத்தோர் சங்கம் சார்பாக ஆங்கிலேயர் அரசாங்கத்திற்கு கள்ளர், மறவர், அகமுடையார் சாதிகளை “தேவர்” என்ற பெயரில் சாதியாக அறிவிக்க வேண்டி அளிக்கப்பட்ட மனுவை தள்ளுபடி செய்யக்கோரி கள்ளர், அகமுடையார், மறவர் சங்கங்கள் மற்றும் தனிநபர்கள் சார்பாக “தேவர்” பட்டப்பெயரை சாதி பெயராக அறிவிக்க ஆட்சேபனை செய்து அனுப்பப்பட்ட நூற்றுக்கணக்கான மனுக்களில் ஒரு மனுவை பதிவிட்டுள்ளேன். ஏற்கனவே கள்ளர் மகா சங்கம் எதிர்ப்பு மனுவை பதிவு செய்திருந்தேன். மிதமுள்ள மனுக்களும் அடுத்தடுத்த பதிவில் தொடரும்….
முக்குலம், தேவரினம் என்ற மாய அரசியலில் மயங்கி கிடக்கும் கள்ளர், மறவர், அகமுடையார் சாதிகளை சேர்ந்த சமூக உணர்வாளர்கள் இந்த கடிதத்தை முழுமையாக வாசித்து தெளிவடையவும்.
பட்டப்பெயர் என்றும் சாதியாக உருமாற முடியாது.
கள்ளர்,
மறவர்,
அகமுடையார்
ஆகிய மூன்று சாதிகளும்,
என்றும் தனித்தனி சாதிகளே!
மனுவின் சாரம்,
—————————-
இந்திய அகம்படியர் சென்னை மாகாண சங்கம்,
5-11-1945 செய்தி தீர்மானங்கள் :
——————————————————–
பிரஸிடெண்ட் :- V.சண்முக சுந்தரம்,
காரியதரிசிகள் :- அய்யக்குட்டித் தேவர்,
செல்லப் பெருமாள் சேர்வை,
பொக்கிஷதார் :- சண்முகநாதன்,
நிர்வாகக் கமிட்டி மெம்பர்கள்,
1) சுப்பிரமணியத் தேவர்,
2) குருநாதன் சேர்வை,
3) பக்கிரிசாமி சேர்வை,
4) கோபால் தேவர்,
5) R.M.மகாலிங்கம் தேவர்,
6) P.இராமநாதன்,
7) R.பொக்கிஷம்,
1) கள்ளர், மறவர், அகம்படியர் என்ற மூன்று ஜாதியாரும் தனித்தனி வகுப்பினர், அவரவர் ஜாதி, பழக்க வழக்கங்கள் வெவ்வேறாக இருக்கின்றன. இவர்கள் ஒரு ஜாதியிலிருந்து மூன்றாகப் பிரிந்தவர்களென்றும், இம் முக்குலத்தாரையும் “தேவரென” அழைக்கலாமென்றும் முக்குல சங்க காரியதரிசி செய்யும் பிரகடனம் குல சரித்திர ஆராய்ச்சிகளுக்கு முற்றிலும் முரண்பாடாயும், ஆதாரமற்றதாயுமிருக்கிற தென்று இச்சங்கம் தீர்மானித்திருக்கிறது.
2) அரசியல் சுயநலம் கருதி முக்குல சங்க காரியதரிசியும், கள்ளர், மறவர் வகுப்பைச் சேர்ந்த சிறுபான்மைக் கட்சியாரும்,
பெரும்பான்மைக் கட்சியாகிய அகம்படிய ஜாதியினரை “தேவர்” என்று இணைப்பதற்குச் செய்த சூழ்ச்சியோயிருக்குமென்று இச்சங்கம் தீர்மானிக்கிறது.
3) “தேவர்” அகம்படியர்களுக்கு இயற்கையாகவுள்ள ஜாதியின் குலப்பெயரென்றும், அகம்படியச் சமுகத்தினர் இந்திர குலத்தவரென்றும், சகல துறைகளிலும் முற்போக்கும் நன்னடத்தையுமுடையவர்களென்றும், இவர்களோடு கள்ளர், மறவர்களை இணைப்பது எவ்வகையிலும் கூடாதென்று இச்சங்கம் தீர்மானிக்கிறது.
4) 16-10-1945 யில் சென்னை அபிவிருத்தி இலாகா காரியதரிசியால் பிரசுரிக்கப்பட்ட அறிக்கைக்குச் சரித்திரபூர்வமாவுள்ள ஆட்சேபனை மனுத் தயார் செய்திரும்பியதை கையெழுத்து வாங்கிச் சென்னை அபிவிருத்தி இலாக்கா காரியதரிசிக்கு அனுப்பும்படி இச்சங்க காரியதரிசிக்கும், சமூகப் பிரமுகர்களுக்கும் அதிகாரம் அளித்திருக்கிறது.
V.சண்முக சுந்தரம் தேவர்,
S.N.அய்யக்குட்டித் தேவர்,
K.செல்லப் பெருமாள் சேர்வை,
K.கோபால் தேவர்,
R.சிவசுப்பிரமணியத் தேவர்,
பக்கிரிசாமி தேவர்,
R.சண்முகநாதன்,
குருநாதன் சேர்வை,
R.பொக்கிஷம்,
P.இராமநாதன்,
——————————————————————
அகமுடையார் பேரினத்தின் தனித்தன்மையை மீட்டெடுக்கும் பணியில்……
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்.
பேச : 94429 38890.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்