வரலாற்றில் இன்று ! *********************** தேவர் பட்டம் உபயோகிக்கும் சாதிகளை இணை…

Spread the love

First
வரலாற்றில் இன்று !
***********************
தேவர் பட்டம் உபயோகிக்கும் சாதிகளை இணைத்து முக்குலத்தோர் என்று அழைக்ககூடாது !

தேவர் என்ற பட்டப் பெயரை சாதிப்பெயர் ஆக்க கூடாது !

என 5/11/1945 ல் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் மதுரையில் கூடிய அகில இந்திய #அகம்படியர் சங்கம் தீர்மானம் இயற்றியது !

அதன் நகலை அரசாங்கத்திற்கு அனுப்பவும்,இத்தீர்மானத்திற்கு ஆதரவாக நாடெங்கும் உள்ள அகம்படிய பேரினத்தின் கையெழுத்தை பெறுவதென்றும் சங்கம் தீர்மானிக்கிறது !

அதன்படி களத்தில் இறங்கிய சங்க காரியதரிசி #கீழராங்கியம்
திரு #ஐயாகுட்டித்தேவர் அவர்கள் கிராமம் கிராமமாக கையெழுத்து வேட்டை நடத்துகிறார் !

அவ்வாறு கையெழுத்து பெறுவதற்காக 77 வருடங்களுக்கு முன் இதே நாளில் 9/11/1945 கல்லுமடை பூலாங்குளம் (இன்று விருதுநகர் மாவட்டம்)வருகிறார்,
உறவுகள் ஒருவர் தவறாமல் கையெழுத்திடுகின்றனர் !

அங்ஙனம் கையெழுத்திட்டதில் என் பூட்டன் (என் அம்மாயி இராக்கம்மாள் அவர்களின் தாய் மீனாட்சி அம்மாளின் தந்தை)
திரு கருப்பணத்தேவர்
(படத்தில் அமர்ந்திருப்பவர்) கையெழுத்திட்ட நாள் இன்று !

அவர் பேரன் நான் இன்று தனிப்பேரின அரசியல் பேசுவதில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது ?

ஆவண உதவி
அகமுடையார் அரண்
Balamurugan Agamudayar

மேற்படி சங்கத்தின் தீர்மானங்கள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு கீழ்காணும் லிங்க்கை அழுத்துங்கள் !

https://m.facebook.com/groups/1768691009829236/permalink/2587429137955415/






இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்

திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

15 Comments
  1. இதை மீள் பதிவேற்றம் செய்து கொள்கிறேன்

  2. எல்லாத்தையும் விட்டுடோம்

  3. அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  4. அகம்படியர்களின் தனி பேரின உரிமைத்துவ அரசியலே நமக்கான நியாயமான உரிமைகளை அரசுடமிருந்து பெற்று தரும்

    We Agampadiyars are the well Civilized Community ❤️🙏💐

  5. அகில இந்திய அகமுடையார் மகாசபை சார்பாக வாழ்த்துக்கள் 🌹🤝🌹

  6. Eswaran M
    சிவக்குமார் சேர்வை

  7. தனிப் பேரின அரசியல் காண்பதை வரவேற்கின்றேன். உங்கள் பதிவில் நீங்களே “தேவர்” பட்ட பெயரை உபயோகிக்காமல் (திரு.ஐயாவுக்கு (தேவர்), திரு.கருப்பண (தேவர்) அகமுடையார் என குறிப்பிட்டிருக்கலாம் . அடைகுறிப்பில் உள்ள “தேவர்” எனும் பட்டம் நீக்கப்படவேண்டும் என்பதில் ஐயப்பாடு ஏதுமில்லை. அரசு சாதி பட்டியலிலேயே அகமுடையார்/ துளுவ வேளாளர் என சான்றளிக்கப்பட்டுள்ளது.

  8. சுதந்திரத்திற்கு முன்பே இக் கோரிக்கை வைத்து அதை இன்றுவரை நெறிப்படுத்த முடியவில்லையா…

    இப்ப மதுரை சிவகங்கை இராமநாதபுரம் மாவட்டங்களில்லிருந்து புலம்பெயர்ந்து வந்து டெல்டா மாவட்டங்களில் வாழும் மறவர்களுடன் அகமுடையார்கள் எல்லாம் “தேவர்” என்ற ஒரு காரணத்தை மையப்படுத்தி பெண் கொடுத்து எடுத்து திருமண உறவு வைக்க ஆரம்பித்து விட்டனர்…

    ஆனால் கள்ளர்கள் இந்த விசயத்தில் இன்னும் மாறாமல் இருக்கிறார்கள்… அதற்கான காரணம் அவர்களுக்கு 1008 பட்டங்கள், இதில் தங்கள் பட்டத்தை சேர்ந்தவர்களை பங்காளிகளாக கருதி மாற்று பட்டத்தை விசாரித்து தான் திருமணம் பேசி முடிப்பார்கள், தங்கள் பட்டத்தை சேர்ந்தவங்களுக்கு பெண் கொடுக்கவோ எடுக்கவோ செய்ய மாட்டார்கள்

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?