First
சென்னை பகுதியில்
அதாவது திருநின்றமலை பகுதியில் கி.பி 14ம் நூற்றாண்டு காலத்திய “அகம்படியாரில் திருக்காளத்தி உடையானான நரசிங்க பன்மன்” என்பவரை குறிப்பிடும் கல்வெட்டு செய்தியை விரைவில் வெளியிடுகின்றோம்.
இந்த அகம்படியருக்கு இன்றைய சென்னையின் கிழக்கு கடற்கரை சாலைப்பகுதியான இன்றைய சோழிங்க நல்லூர் பகுதியில் வடக்குபட்டு என்ற பெயரில் ஊர் சொந்தமாக இருந்தது இக்கல்வெட்டு மூலம் தெரியவருகின்றது.
மேலும் பல செய்திகளை கல்வெட்டு வெளியிடும் போது விரிவாக பேசுவோம்.
தென் மாவட்டத்தில் இருப்பவர் அகம்படியர், வடமாவட்டத்தில் உள்ளவர் அகமுடையார் என்று சொல்லி குழப்பம் செய்யும் குழப்பவாதிகளின் முகத்திரையை கிழிக்கும் பல கல்வெட்டுக்களில் இதுவும் ஒன்று.
தமிழ்நாட்டின் வடபகுதியில் இன்று அகமுடையார் என்று அழைக்கப்படும் சாதியினர் அன்று அகம்படியர் என்ற பெயரில் தான் அழைக்கபட்டுள்ளனர் என்பதை இந்த கல்வெட்டும் நிறுவுகின்றது. ஏற்கனவே இக்கருத்துக்கு ஆதாரமாக நிரம்ப கல்வெட்டுக்களை வெளியிட்டுள்ளோம் . இக்கருத்துக்கு இக்கல்வெட்டும் உறுதியான ஆதாரமாக அமைகின்றது.
இக்கல்வெட்டை நாம் ஆய்வு செய்து வெளியிடுவதறாக அனுப்பிய அகமுடையார் அரண் திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு நன்றி.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்