அழகான ஆண்களை கொண்ட அகமுடையார் சமுதாயம் ————– இத்தலைப்பு படித்தவுடன் உங்…

Spread the love
0
(0)

First
அழகான ஆண்களை கொண்ட அகமுடையார் சமுதாயம்
————–
இத்தலைப்பு படித்தவுடன் உங்களுக்கு என்ன இப்படி ஒரு தலைப்பு என்று தோன்றலாம். ஆனால் அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்த பலர் அழகன், அழகியான், சுந்தரன் என்ற அடையாளங்களுடன் வரலாற்றில் தொடர்ந்து வருகின்றனர்.

இன்னும் சொல்வதென்றால் வரலாற்றில் அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்தவர்களை குறிப்பிடுவது போல எந்த சமுதாயத்திற்கும் இவ்வளவு ஆண் மகன்களின் பெயர்கள் அழகுடன் தொடர்புப்படுத்தி விளங்கியதாக நாம் அறிந்தவரை தெரியவில்லை.

அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்த பலருக்கு அழகன், சுந்தரன் என்ற பெயர்கள் விளங்கிவருவதை கல்வெட்டுக்களில் வழங்கிவருவதை பார்க்கும்போது அகமுடையார் இன ஆண்மக்கள் பலர் மிகச்சிறந்த தோற்றப்பொலிவை பெற்றிருந்தாக வரலாற்றின் வழியே அறிய முடிகின்றது.

உதாரணத்திற்கு வரலாற்றில் இருந்து சிலர்.

நபர் 1: சுந்தர சோழர் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் பராந்தகன் . இவர் தோற்றத்தில் மன்மதன் போல் விளங்கியதாக சோழ மக்கள் நினைத்ததால் இவரை சுந்தர சோழன் என்ற பெயரில் அறியப்பட்டதாக தெரிகிறது.
காலம்: கி.பி 10ம் நூற்றாண்டு
குறிப்பு:
சோழர் அகமுடையார்கள் குடி என்பதை ஏற்கனவே காணொளியில் விளக்கியுள்ளதால் இவற்றிற்கு தனிப்பட்ட ஆதாரம் தேவையில்லை என்று நினைக்கின்றோம்.

நபர் 2: அகம்படி முதலிகளில் அழகியன் மெய் வேளைக்கார பல்லவரையன்
ஆதாரம்: மத்திய அரசு கல்வெட்டு ஆண்டறிக்கை கல்வெட்டு எண் 431
காலம்: கி.பி 12ம் நூற்றாண்டு

நபர் 3: பிள்ளையார் அழகப்பெருமாள் அகப்பரிவாரத்து உலகளந்தான் அழகப்பெருமாளான அவணி நாராயண தேவன்
ஆதாரம்: தென் இந்திய கல்வெட்டுக்கள் தொகுதி ,கல்வெட்டு எண் 431
காலம்: கி.பி 12ம் நூற்றாண்டு

நபர் 4: பையூர் பெரியான் அழகிய பெருமானான சோழ கங்கன்
ஆதாரம்: ஆவணம் இதழ் ,பக்கம் எண்
காலம்: கி.பி 11 ம் நூற்றாண்டு
குறிப்பு: இவன் அகம்படி பற்றுக்கு தலைவன் என்று தன்னை குறித்திருப்பதும் , அப்படையில் தனது வம்சத்தவர் மட்டுமே உள்ளதை சூளுத்திரைப்பதும் கொண்டு இவன் அகம்படி இனத்தவன் என்பதை உணரலாம். இதனை சோழர் யார் என்ற காணொளியின் முதற்பாகத்தில் குறிப்பிட்ட நிமிடத்தில் விளக்கியிருப்போம்
பார்க்காதவர்களுக்காக லிங்க்:

நபர் 5: அகம்படி முதலிகளில் திருமஞ்சனம் அழகியான் விக்ரமசிங்க தேவன்
ஆதாரம்: தென் இந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 3,கல்வெட்டு எண் 414
காலம்: கி.பி 13ம் நூற்றாண்டு

நபர் 6: அகம்படி மறமுதலிகளில் நூற்றன் பெரியானான வீரம் அழகிய பல்லவராயன்
ஆதாரம்: studies of ancient townships of pudukottai page number 76
காலம்: கி.பி 13ம் நூற்றாண்டு

நபர் 7: சித்தர் சுந்தரானந்தர்
ஆதாரம்: நூல் சித்தர்கள் வரலாறு பக்கம் 128 ஆசிரியர் பி.இராமசந்திரன்
காலம்: கி.பி 15-16ம் நூற்றாண்டு
சுந்தரானந்தர் மேலதிக தகவல் இணைப்புகள்
https://www.facebook.com/853506741354511/photos/a.853507368021115/853526091352576/

இன்னும் இது போன்ற பல கல்வெட்டுக்களில் அகமுடையார் இனத்தவர்கள் அழகன்,சுந்தரன் என்கிற அடையாளத்தோடு பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவை சிலவை இப்போது நினைவுக்கு வரவில்லை மற்றொரு சந்தர்பத்தில் அவற்றை முழுமையாக பதிவு செய்கின்றோம்.

மேலும் இன்றும் கூட அகமுடையார் இன ஆண்கள் தனித்துவமாக அழகாக இருக்கின்றார்கள் என்பது இன்றும் நாம் காணக்கூடிய உண்மையாகும்.இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?