First
இன்று உண்ணாநிலை போராட்டத்திற்கு சென்றிருந்த போது அதில் கலந்து கொள்ள வந்திரிந்த தம்பி மு.ராஜேஷ் அகமுடையார் உடன் என்னிடம் வந்து ரூபாய் 300 ஐ நம்மிடம் நம்மிடம் கையளித்தார்.மிக்க மகிழ்ச்சி தம்பி,இச்செய்தியை பதிவிட்டுவிடுகிறேன் என்று சொன்னவுடன். என்ன நினைத்தாரோ தெரியவில்லை மிகவும் தயக்கத்துடன் அண்ணே அதெல்லாம் வேணாம் அண்ணே என்று என்னிடம் சொன்னார்.
உடனே நான் ,தம்பி இதில் தயங்குவதற்கு எதுவுமில்லை பொதுப்பணிக்கு அளிக்கப்பட்டு ஏற்கப்படும் பணம் பொதுவாக அனைவரும் அறிய தெரியப்படுத்த வேண்டியது என் கடமை தம்பி ,தயக்கம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தேன்.
தம்பியை கவனித்து வருகிறேன்.சமுதாயக் கூட்டங்களுக்கு தவறாது வருகிறார்.உணர்வுள்ள இவர் போன்ற இளைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு அல்லது தொழில் முயற்சி கிடைத்தால் அவர்கள் பின்னாளில் சிறந்த சமுதாய உணர்வாளர்களாக ,சமுதாயத்திற்கு உதவுவர்களாக வருவார்கள்.காலம் கைகொடுக்குமா? நம்மால் ஆனதை நிச்சயம் செய்வோம்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்