First
இனக்குழுவா? தொழில் சாதியா? அகமுடையார்கள் எப்பிரிவினர்- அறிமுகம்
———-
இன்று சாதியாக அறியப்படும் சாதிகள்
1) இனக்குழு ரீதியாக அமைந்த சாதியாகவும்
2) தொழில் ரீதியாக பின்புலத்தில் சேர்ந்து இணைந்தவையாகவும் உள்ளன.
இதில் தொழில் ரீதியாக இன்று ஒன்றாக அறியப்படும் சாதிகள் பல்வேறு இனக்குழுக்களிடமிருந்தும் இருந்து பின்னர் தொழில் ரீதியாக இணைந்து பின்னர் தங்கள் தொழிலையே சாதியாக மாற்றி இன்றைய அடையாளத்தில் இணைந்தது எனலாம். உதாரணத்திற்கு பல்வேறு சாதியிலும் மண்பானை செய்யும் ஒருவர் இருந்திருப்பார் அவர்கள் ஒன்றாக தங்களுக்குள் தொடர்புகொண்டு ஒன்றுபட்ட அடையாளத்தில் இணைந்து பின்பு ஒருமைப்பட்ட சாதி அடையாளமாக பிற்காலத்தில் மாறி இருப்பர்.
அதேவேளை இன்றைய அகமுடையார் சாதி என்பது
இனக்குழு ரீதியாக ஒன்றாக இருந்து பின் பல்வேறு கடமைகளை பெற்று பின் அதையே தொழில்களாகவும் பெற்ற சாதியாகும். ஆகவே அகமுடையார்கள் ஆதியில் இனக்குழுவாக இருந்த காரணத்தால் இவர்கள் ஒரே மூலத்தில் இருந்தே உருவானார்கள். அகமுடையார்களின் ஆதி இனக்குழு பெயர் “தானவர்” என்பதாகும். இது தனு எனும் வில்லவர் பெண்ணின் மக்கள் என்றும் ஆதி (ஆதியர் அல்லது அதியர்) என்ற மக்கள் என்று அறியப்படுகின்றது. இருள் ,கருப்பு என்பது இவர்களின் அடையாளம் ஆகும்.
இருளாயி/இருளப்பன், கருப்பன்/கருப்பசாமி ராக்காயி,சூராயி என்பவை இவர்கள் அடையாளக் குறியீடாக குறிக்கபப்ட்டிருந்தது.
தானவர் என்ற இந்த இனக்குழு பெயர் கூட எதிர் தரப்பினர் அளித்த பெயராக இருக்கலாம். ஆனால் இதையே நாம் ஏற்றுக்கொண்டும் விட்டோம். 4000 வருடம் மேலான இந்த இனக்குழு அடையாளத்தை தொடர்சியாக இன்று வரை அகமுடையார் சமுதாயம் சுமந்து வருகின்றது. இதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்