First
அகமுடையாரின் பண்டைய தொழில்களும் பிரிவுகளும்
——————
அரண்மனைகள் அரசர் வாழிடங்களை பாதுகாப்பது ,
மெய்காவல்(அரசர் மற்றும் அவர் தம் இரத்த உறவுகளை பாதுகாப்பது) – -இவர்களை இராச வாசல், இராஜ குல பிரிவினர் என்பர் .
கோட்டைகள் மற்றும் எல்லைப்புறங்களை பாதுகாப்பது- இவர்களை கோட்டைப்பற்று பிரிவினர் என்பர்
துறைமுகங்கள்,வணிகர் மற்றும் பாதைகளை (வணிக சாத்துக்களை) பாதுகாப்பது -இவர்களை முன்னூற்றுவர் மற்றும் ஏழகத்தார்,ஏழகப்படை என்பர்
கோவில் மற்றும் இறைத்தலங்களை காப்பது,
கருவூல பாதுகாவல்( கோவில் மற்றும் அரசு கருவூலங்களை பாதுகாப்பது) – இவர்களை பண்டாரத்தார் என்றும் குறிப்பிடுவர்
தொழுக்களை பாதுகாப்பது- 100 மற்றும் அதற்கும் மேற்பட்ட ஆநிரை ( பசுங்கள் ) நிறைந்த தொழுக்களை பாதுகாப்பது(இவர்களை தொழுவர் என்று குறிப்பிடுவர் -இவர்கள் இன்று தொழுவ வேளாளர் அல்லது துளுவ வேளாளர் என்று அறியப்படும் பிரிவினர்)
ராணுவம் – பரம்பரை பரம்பரையாக முறையாக பயிற்சி பெற்ற நிலைப்படையாகும். அரசனுடன் எப்போதும் உறையும் படை இதுவாகும். போரில் அரசனுடன் இறுதியாகவே இவர்கள் நுழைவர் ( அடிமைகளும் ,தூசிப்படையினருமே எதிரி நாட்டிற்குள் முதலில் நுழைவர் . கொள்ளையிடுவதும்,கஒலை செய்வதும் குழப்பம் விளைவிப்பதுவே இந்த அடிமைகள் மற்றும் தூசிப்படையினரின் பணியாகும் . நம்மில் பலர் நினைப்பது போல் போரில் முதலில் நுழைவர்கள் பெரும் வீரர்களோ ,முக்கியமானவர்களோ அல்லர். போரில் முதலில் நுழைவர்களுக்கு அதிகம் இழப்பு ஏற்படும், மன்னர்கள் எவரை இழப்பதால் அவர்களுக்கு எந்த கவலையும் இருக்காதோ அவர்களையே முதலில் போரின் முன்னே செழுத்துவர்) .அரசு சுற்றமாகிய அரசனை சூழ்ந்து அரசனோடு போர்களம் புகும் முறையாக பயிற்சி பெற்ற அரசனின் சொந்த படைவீரர் தொகுப்பு அகம்படி சாதியினர் ஆவர். வாணர்,சேரர் மற்றும் சோழர்களிடம் அகம்படி படை இருந்தது . இவர்கள் நெட்டி எனும் பிரிவாக குறிக்கப்பட்டுள்ளனர்.
வரிவசூல்- அரசின் சார்பாக வரிவசூல் செய்தவர்கள். பல நேரங்களில் அகம்படி சாதியினர் மக்களிடமிருந்து இவர்களுக்கென்று தனி வரியை வசூல் செய்துள்ளனர். மக்கள் இவர்களுக்கு செழுத்த வேண்டிய பணம் அகம்படி தனம் ,அகம்படி பணம் என சொல்லப்பட்டது. இவர்கள் கோயிற்றமர் என்றும் மூலக (தொல் ) அகம்படியினர் என்று அறியப்பட்டனர்.
ஆனால் இப்பிரிவுகளில் மாற்றி மாற்றி செய்ததும் உண்டு. இவற்றிற்கெல்லாம் நிறைய நிறைய ஆதாரங்கள் உண்டு. நிறைய நிறைய விசயங்கள் உண்டு .அதையெல்லாம் இன்னோரு நாள் பேசலாம்.
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி-6000க்கும் மேற்பட்ட வரன்கள் கொண்ட அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 திருமண தகவல் மையம்!
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்