தமிழர்களின் அடிமுட்டாள்தனம் -கண்டி நாயர்க்கள் இலங்கையின் புனித லதா மாளிகையை தங்கள…

Spread the love

தமிழர்கள் ஆடிமுட்டாள்தனம் -கண்டி நாயர்க்கள் இலங்கையின் புனித லதா மாளிகையை தங்கள் வசம் கொண்டு வந்ததன் உண்மை சுருக்க வரலாறு
———–
கண்டியை ஆட்சி செய்த நாயக்கர்கள் தலதா மாளிகை பாதுகாக்கும் பொறுப்பை வஞ்சகமாக கைப்பற்றி அதன் மூலம் இலங்கை முழுவதுமான ஆட்சியை கைப்பற்றினர் ஆனால் அதற்கு முன்பதான வரலாற்றை எவரும் அறிந்திருக்க நியாயமில்லை! ஆம் தமிழர்களே இப்படித்தான்! அரைகுறையாய் தெரிந்து கொண்டு அரைவேக்காட்டுத்தனமாக தங்களை தாங்களே புத்திசாலியாக நினைத்து ஏமாறுவது!

ஏன் இப்படி ஒட்டுமொத்தமாக முட்டாள்தனம், அரைவேக்காட்டுத்தனம் என்று குறிப்பிடுகிறோம் என்றால்
இன்று வரை இலங்கை வரலாற்றை பேசுகின்ற தமிழர்கள் அது இலங்கை தமிழர்களாக இருந்தாலும் சரி ,இந்திய தமிழர்களாக இருந்தாலும் சரி!

இலங்கையின் கண்டி பகுதியை ஆட்சி செய்தது சிங்களர் என்றும் அதை பின்னாளில் கைப்பற்றியது கண்டி நாயக்கர்கள் என்றும் அவர் வழியில் வந்த அரசன் கண்ணுசாமி என்பவர் கடைசி தமிழ் மன்னர் என்றும் முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள்!

ஆனால் உண்மையில் கண்டி இராசதானியை உருவாக்கியது ,சூரிய குலத்தவன் என்றும் சோழ அரசகுடும்பத்தவன் என்றும் அறியப்படும் அபனா என்றும் தன்தொடவர தேவன் எனும் தமிழ் அகம்படியர் குலத்தவன் ஆவான் (இதை பரகும்ப சரித்திர உள்ளிட்ட பழம் சிங்கள வரலாற்று நூல்களும்,சிங்கள கல்வெட்டுக்களும் எடுத்துக்காட்டுகின்றன-தை பற்றி ஏற்கனவே பதிவுகளில் குறிப்பிட்டுள்ளோம்) .

ஆக கண்டி ராஜ்ஜியத்தை உருவாக்கியவர்கள் தமிழர்கள் ஆனால் அதை பின்னாளில் கைப்பற்றிவர்கள் தமிழ்நாட்டில் இருந்து சென்ற நாயக்கர் எனும் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட அரசகுடும்பத்தினர். ஆகவே கடைசியாக கண்டியை ஆட்சி செய்ததாக குறிப்பிடப்படும் கண்ணுச்சாமி என்பவரும் சரி அவரது வழியினரும் சரி தமிழ் அரசர்கள் இல்லை. இந்த அடிப்படையை தமிழர்கள் முதலில் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் .

தமிழனை சிங்களவன் என்பது! தெலுங்கரை தமிழர் என்பது!

இதை பலமுறை பேசியுள்ளோம் இது குறித்து விரிவான ஆதாரம் தேவைப்படுவர்கள் கீழே உள்ள யூடிப் காணொளியில் சென்று பார்க்கலாம்.

சரி இப்போது புத்தரின் புனித பல் என்று கருதப்படும் பல்லை பாதுகாக்கும் உரிமையை கண்டி நாயக்கர்கள் எப்படி பெற்றார்கள் அதன் வழியாக ஒட்டு மொத்த சிங்களவர்களின் பிரதிநிதியாக எப்படி மாறினார்கள் என்று சுருக்கமாக பார்ப்போம்!

அகமுடையார்கள் அரசர் மெய்காவல்,அரண்மனை ,கோட்டை,வணிகப்பாதை,அரசகருவூலம்,கோவில் ,தொழுக்களை பாதுகாத்தல் போன்ற பல்வேறு பணிகளை பாதுகாத்தார்கள் என்பதை முன்னரே பலமுறை பார்த்துள்ளோம்.

அவ்வகையில் கோவில் உள்ளிட்ட்ட பல்வேறு இறைத்தலங்களை அகமுடையார்கள் பாதுகாத்துள்ளனர். சோழநாட்டில் மட்டுமல்ல இலங்கையிலும் இறைத்தலங்களை அதுவும் சைவ கோவில்களை மட்டுமல்ல புத்த விகாரைகளையும் பாதுகாக்கும் பணியில் அகம்படியர்கள் ஈடுபட்டிருந்தது குறித்து பல்வேறு கல்வெட்டுக்கள் ஆதாரமாக உள்ளன.

உதாரணத்திற்கு இலங்கையின்ஹிராங்கொடை எனும் பகுதியில் கிடைத்த தமிழ் கல்வெட்டு செய்தியில் உம்பியிழ அயித்தன் எனும் தமிழ் அகம்படியர் சமூகத்தவன் புத்த கோவிலை பாதுகாப்பதற்காக அவனுக்கு அளிக்கப்பட்ட நிலத்தை புத்தகோவிலுக்கு தானமாக கொடுத்த செய்தியை உதாரணமாக காட்டலாம்.

இதில் இருந்து அகம்படியர்கள் (இன்றைய அகமுடையார் சமூகத்தவர்கள்) இலங்கையில் புத்த கோவிலை பாதுகாத்த செய்தியை அறிந்துகொள்ளலாம்.

D. Bernard என்ற ஐரொப்பியர் மற்றும் J. Abeysekera எனும் சிங்களவர் ஆகியோர் இணைந்து எழுதிய Anurapurayen Poḷonnaruvaṭa எனும் நூலில் கீழ்கண்ட செய்தி சிங்களத்தில் காணப்படுகிறது.

” අගම්පඩි සේනා කෙතරම් බලවත් වීද යත් වික්‍රමබාහු රජු දවස ඔවුන් දළදා මැදුර සිය පාලනයට ගත් බැව් පොළොන්නරුවේ ඇති දෙමළ සෙල්ලිපියකින් එන”

இதை தமிழில் விளக்குவோம் என்றால்

“அகம்படி இராணுவம் மிகவும் சக்திவாய்ந்ததாக மாறியது, பொலன்னருவாவில் உள்ள ஒரு தமிழ் கல்வெட்டில், மன்னர் விக்கிரமபாகுவின் ஆட்சிக் காலத்தில் அவர்கள் தலதா மெதுராவைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது”

என்று கல்வெட்டு செய்தியை மேற்கோள் காட்டி கூறுகின்றார்கள்.

மேற்கூறியவற்றில் இருந்து சில விசயங்கள் தெளிவாக தெரிகின்றன.

1) தலதா எனும் புத்தரின் புனித பல் அடங்கிய புத்தகோவில் உள்ளிட்ட புத்தகோவில்களை பாதுகாக்கும் பணியில் அகம்படியர்கள் ஈடுபட்ட்டிருத்தப்பட்டிருந்தனர்.

2) தமிழ் அகம்படியர் சாதியினரே கண்டி ராச்சியத்தை உருவாக்கி ஆட்சி செய்துள்ளார்கள். அகம்படியர்கள் என்ற சாதி அடிப்படையில் தலதா எனும் புனித பல்லை பாதுகாக்கும் மாளிகை பாதுகாப்பு பொறுப்பை கண்டி அரசர்கள் பெற்றனர். (ஆனால் இதைகொண்டு சிங்கள மக்கள் அனைவருக்கும் தலைவர்களாகும் வகையில் சில விசயங்களை பூர்வ கண்டி அரசர்கள் செய்ததாக தெரியவில்லை) .

3) கண்டி அரசை பின்னாளில் கைப்பற்றிய நாயக்கர்கள் கண்டி அரசின் தலதா மாளிகையை பாதுகாக்கும் உரிமையை கைப்பற்றி அதன்மூலம் ஒட்டு மொத்த சிங்களவர்களின் ஆதரவை பெற்றனர் எனலாம்.

இப்பதிவில் சில இணைப்புகள்
1,2- நூலின் சிங்கள குறிப்பு மற்றும் அதன் தமிழ் மொழி மாற்றம்
3-இலங்கையின் ஹிராங்கொடை தமிழ் கல்வெட்டு

4- Girivassipura என்ற சிங்கள மொழி திரைப்படத்தின் டிரைய்லரில் இடம் பெற்ற காட்சி ஸ்கீர்ன்சாட் மற்றும் தலதா மாளிகை உட்புறம்.

குறிப்பிட்ட படத்தின்
டிரைலர் வீடியோ லிங்க்: https://www.youtube.com/watch?v=m7bj9cn9kVc

குறிப்பு:
வரலாற்றை இதற்கு மேல் பேசுவதிலோ எழுதுவதிலோ எனக்கு விருப்பம் இல்லை.ஏனென்றால் அகமுடையார் சமுதாயத்தினருக்கு வரலாற்றை அறிவதில் சிறிதும் விருப்பம் இல்லை என்று எனக்கு நன்றாகவே தெரிந்துவிட்டது .

இருப்பினும் இன்று காலையில் ஒர் பதிவை இட நினைத்து தகவல்களை எடுத்தேன் ,எடுத்ததை சுருக்கமாகவாவது எழுதிவிடுவோம் என்று தான் இதை நான் எழுதினேன்.






இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

 

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo